தாய்தான் விற்றாரா??? பாபநாசம் படத்தை நினைவுபடுத்துகிறதா செஞ்சி சம்பவம்?
செஞ்சி அருகில் உள்ள சிறு கிராமத்தில் ஏழு வயது சிறுமியான ஹேமா காணாமல் போய் இதுவரை 33 நாட்கள் ஆகிவிட்டன.
முதலில் காவல்துறை விசாரணை 10 நாட்கள் வரை நடந்து, அதற்கடுத்தும் சிபிசிஐடி விசாரணை பல நாட்கள் நடந்து, அதைவிட மேலாக தற்போது காவல்துறையின் மூத்த உயரதிகாரிகளே நேரடியாகச் சென்று விசாரணை நடத்தும் அளவுக்கு தீவிரம் பெற்றதாக மாறி இருக்கிறது அந்த ஏழு வயது சிறுமி காணாமல் போன சம்பவம்.
மலையாளத்தில் திருஷ்யம் திரைப்படம் வந்து பரவலான வரவேற்பை பெற்ற பிறகு, தமிழில் அதையே பாபநாசம் என்கிற பெயரில் எடுத்தார்கள். கமல் நடித்த அந்தத் திரைப்படம் பலருக்கு நினைவில் இர���க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட ஒரு குற்றச் சம்பவம் தனது வீட்டிலேயே நடந்தாலும் கூட அதை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தகுந்த முன்னேற்பாடுகளுடன் மிகவும் ஜாக்கிரதையாக கையாண்டால் அந்த குற்றத்தின் மூலம் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கையில் இருந்து சாதுரியமாக தப்பிவிடலாம் என்பதைத்தான் அந்த திரைப்படம் வலியுறுத்தியது.
அந்தத் திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்று வணிக ரீதியான வெற்றியைய��ம் பெற்றிருக்கிறது.
அந்தத் திரைப்படத்தை நினைவுபடுத்த வேண்டிய அவசியம��� தற்போது ஏன் ஏற்பட்டிருக்கிறது?
செஞ்சிக்கு அருகில், ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து அதிகாலையில் காணாமல் போனதாகச் சொல்லப்படும் சிறுமிகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள்.
1. பிறந்தநாள் கொண்டாடிய அந்தச் சிறுமி நள்ளிரவு நேரத்தைக் கடந்து அன்று காணாமல் போகும்போது அவரது வீட்டின் பின்புறக் கதவு திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அவரது தாயாரான பவானி பலமுறை சொல்லியிர��க்கிறார்.
அன்று அவர் தனது வீட்டுக் கதவை தாழ்ப்பாள் போடாமல் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
2. சம்பவம் நடந்த அன்று அதிகாலை மூன்று மணி அளவில் எதிர் வீட்டில் வசித்த பெண்மணி குழந்தையான அந்த சிறுமி ஹேமாவின் கூக்குரலைக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் பக்கத்தில் உள்ள புதருக்கு அருகில் சென்று தொடர்ந்து குரைத்ததாகச் சொல்லியிருக்கிறார்.
இவ்வ��வு தெளிவாக, ஹேமாவின் குரல் ஒலித்ததையும் அதைத் தொடர்ந்து நாய் குரைத்ததையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் உணர்ந்திருக்கிற நிலையில், அதே வீட்டில் படுத்து உறங்கிய தாய், தந்தை மற்றும் பாட்டிக்கு மட்டும் எப்படி அந்தக் குரலைக் கேட்க முடியாமல் போனது?
3. சம்பவம் நடந்த நாளிலிருந்து இதுவரைக்கும் பல்வேறு தொலைக்காட்சிகள் YouTube சேனலுக்கும் பேட்டியளித்திருக்கிற சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயாரான பவானி தான் சொன்னதையே திரும்பத் திரும்ப உலர்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
காவல்துறை தரப்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கு அவர் தரப்பில் தெளிவான பதில் இல்லை.
4. அதே கிராமத்தில் உள்ள சந்��ேகத்திற்குரிய பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
பக்கத்தில் இருந்த சந்தேகத்திற்குரிய குற்றவாளியாக கருதப்படும் ஒருவரிடம் தீவிரமாக காவல்துறை விசாரித்திருக்கிறது.
மிக அருகில் உள்ள ஒரு கோவிலிலிருந்த அன்றைய தினம் வெளியூருக்குச் சென்றுவிட்ட பூசாரியிடமும் அந்த சிறுமியின் சகோதரி உள்ளிட்ட உறவினர்களிடமும் பலதரப்பட்ட விசாரணை நடத்தப்பட்டும் இதுவரை தெளிவான ஒரு சிறு தடயம் கூட கிடைக்காத ஒரு சூழ்நிலை தொடர்ந்து இருப்பது ஏன்?
5. அதே கிராமத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு மூதாட்டி, அந்த சிறுமி காணாமல் போனதாக சொல்லப்படும் அதே நேரத்தில் தனது வீட்டுக் கதவு அதிகாலை நேரத்தில் தொடர்ந்து தட்டப்பட்டதாகத் தகவலை தெரிவித்திருக்கிறார்.
சில சேனல்களிலும் அதே கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சிறு கிராமத்தில் அதிகாலை நேரத்தில் ஒரு மூதாட்ட���யின் வீடு தொடர்ந்து தட்டப்பட்டிருக்கிறது.
காணாமல் போன சிறுமியின் சத்தம் வீட்டிற்கு வெளியே கேட்டிருக்கிறது, நாயின் குரைப்புச் சத்தம் கேட்டிருக்கிறது.
ஆனால், இயல்பாக பக்கத்து வீட்டார்கள் எல்லாம் அந்தக் குரலை உணர்ந்த நிலையில், குழந்தையின் வீட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் அந்தக் குரலால் சிறிதும் விழிக்காமல் தொடர்ந்து தூக்க நிலையிலேயே இருந்ததாக சொல்லப்படுவது எதைக் காட்டுகிறது?
இப்படி கிராமத்தில் சிறுமி காணாமல் போன சம்பவத்தையொட்டி அருகாமையில் உள்ள பல ஊர்களிலும், ரயில்வே நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் உள்ள பல்வேறு சிசிடிவி கேமரா பதிவான காட்சிகள் விசாரணைக்கு ஆராயப்பட்டிருக்கின்ற மாதிரி,
செஞ்சிக்கு அருகில் உள்ள புவனகிரியில் அதே சாயல் உள்ள ஒரு சிறுமியை பார்த்ததாகவும் ஒருவர் காவல்துறைக்கு தகவல் சொன்னதாகவும் ஒரு செய்தி வெளியான நிலைய���ல்,
1/2