Yes ! She is Growing. Wish you a Happy Happy Birthday Dear Venba. As always, I will stand by your side through every single one of your Dreams and Passions!
#வெண்பா#மகளார்#8thYear#HappyBirthdayDaughter#HBD
இந்தியத் தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது !
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பிதுக்கப்படுகிறது !
உனக்கெல்லாம் ஜனநாயகம் பத்தி பேச தகுதி இருக்கா ப்ரோ...
It's very wrong Bro... 🤧🤧🤧
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஞெகிழிப் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டினை தடை செய்யக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.
#NTKGreenPolitics
#EnvironmentalWing_NTK
@Seeman4TN@NaamTamilarOrg
நன்றி @PttvNewsX
பிப்ரவரி 20 - மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டுத் திடலில், மாநாடு ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். உலகம் முழுவதுமிருந்து தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் வருகைப் புரிய தொடங்கியிருந்தார்கள். கனடாவிலிருந்து பிரான்சிலிருந்து சுவிசிலிருந்து ஆசுதிரேலியாவிலிருந்து என்று ஈழத்தமிழர்கள் பெருமளவில் வருகைப் புரிந்திருந்தார்கள். என்னிடமும் வந்து பேசினார்கள். அதுபோல, மலேசியாவிலிருந்து மலேசிய தமிழர் ஒருவரும் வந்து பேச்சுக்கொடுத்தார். நாங்கள் அண்ணனுடைய கொள்கைகளைப் ப���ன்பற்றி மலேசியாவில் பெரிய அளவில் வேளாண்மை செய்து வருகிறோம். அதைப் பற்றிய காட்சிகள் இந்தப் செருகு பதிவி(Pen Drive)ல் இருக்கிறது என்று என்னிடம் ஒரு செருகு பதிவியையும் வழங்கினார். பார்த்துவிட்டுத் தொடர்பில் வாருங்கள் என்று சொல்லிவிட்டு என்னுடைய எண்ணை குறித்துக் கொண்டு போனார்கள். பல பைகள் மாறி எங்கோ ஒரு பையில் தங்கியிருந்தது அந்தச் செருகு பதிவி. இந்த வார இறுதியில் சில பைகளை எடுத்து��் தூய்மைச் செய்யும்பொழுது அந்தச் செருகு பதிவியைக் கவனித்தேன். ஐயோ இது மலேசியாவிலிருந்து வந்த நம் உறவு ஒருத்தர் கொடுத்ததாச்சே என்று உடனே மடிக்கணினியில் போட்டுப் பார்த்தேன். அதில் இருந்தது ஒரே காணொலி, இந்தக் காணொலி தான். அங்கு எப்படி வேளாண்மையைப் பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அண்ணன் சீமான் சொல்வது போல வேளாண்மை என்பது தொழில் அல்ல, அது தமிழர்களின் பண்பாடு என்பதைச் சொல்லாக மட்டுமில்லாமல், செயலாகவும் செய்து அதைக் காட்சியாகவும் பதிந்து, அதில் நாம் தமிழர் முழக்கத்தையும் இணைத்து, அதை நேரில் கொண்டு வந்து நம்மிடமும் கொடுத்து விட்டுப் போகும் அளவிற்கு ஒரு உணர்வு எழுச்சியை நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் ஏற்படுத்தி உள்ளார்கள்!
நாம் தமிழர் கட்சிக்கு முன்பு பல கட்சிகள் தோன்றிப் பெரிதாக வளர்ந்து, ஆட்சி அதிகாரத்தை அடைந்து பல்லாண்டுகள் ஆட்சியும் செய்துள்ளன. அதேபோல் நாம் தமிழர் கட்சிக்குப் பிறகு பிறந்து, இன்று ���ட்சி அதிகாரத்தை அடைந்த கட்சியும் உண்டு. அடைய துடித்துக் கொண்டிருக்கின்ற கட்சிகளும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து, இதில் எந்தக் கட்சியாலும் செய்ய முடியாத ஒன்று, உலகத் தமிழர்களை ஒரே குடைக்குள் கொண்டு வருவது. அத்தகைய தமிழ்த்தேசியம் என்னும் கோடைக்குள் உலகத்தமிழர்களை ஒன்றிணைத்துக் கொண்டு வந்த பெருமை, நாம் தமிழர் கட்சியையே சாரும், அண்ணன் சீமானையே சாரும்!
இவற்றையெல்லாம் ப��ர்க்கும் போது தான், இந்த அற்ப தேர்தல் வெற்றி, தோல்வி எல்லாம் தமிழ்த்தேசியம் என்ற உயர்ந்த கொள்கையைப் பின்பற்றி நடக்கும் நம் போன்றவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல! கடுமையாக உழைப்போம்! தமிழ்த்தேசியத்தை வெல்ல வைத்து, அரியணை ஏற்றுவோம்!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் அக்கா வெண்ணிலா தாயுமானவன் அவர்கள் தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்திருந்த வழக்கில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
@vennilaVT@NTKEnvWing@_ITWingNTK
7000 மெட்ரிக் டன் குப்பைகளை கல் குவாரியில் புதைக்கலாம் எனும் மிக ஆபத்தான யோசனையை சொல்லுகிறார் திருவெறும்பூர் த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி.
வெளிப்படையாகப் பார்க்கும்போது, "பள்ளம் தானே, குப்பையைக் கொட்டி மூடினால் இடம் சுத்தமாகிவிடும்" என்று தோன்றலாம். ஆனால், அறிவியல் ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் மிக மிக மோசமானவை.அதில் மட்கிய குப்பைகளும் இருக்கும், மட்காத நச்சுக் கழிவுகளும் இருக்கும். இதை அப்படியே புதைப்பது என்பது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் வைக்கும் 'டைம் பாம்' (Time Bomb) போன்றது.
"இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் நச்சுத்தன்மையாகும் (Leachate Contamination)."
50 ஆண்டு காலக் குப்பைகளில் பிளாஸ்டிக், பேட்டர���கள், மின்னணுக்கழிவுகள் (E-waste), இரசாயனங்கள் மற்றும் மட்கும் குப்பைகள் என அனைத்தும் கலந்திருக்கும்.
இவற்றுடன் மழைநீர் சேரும்போது, 'லீச்சேட்' (Leachate) எனப்படும் கரிய நிற நச்சுத் திரவம் உருவாகும்.
பாறைகளில் இயற்கையாகவே விரிசல்களும் (Fissures) துளைகளும் இருக்கும். 1200 அடி என்பது மிக ஆழமான பகுதி என்பதால், இந்த நச்சுத் திரவம் மிக எளிதாக அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த நிலத்தடி நீர்மட்டத்திலும் (Aquifers) கலந்துவிடும்.
இதனால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு கிணற்று நீர் மற்றும் ஆழ்துளைக் கிணற்ற��� நீர் (Borewell water) குடிக்கவோ, விவசாயம் செய்யவோ தகுதியற்றதாக மாறிவிடும்.
இதற்குச் சரியான மாற்று வழி என்ன?
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் இந்த மலை போன்ற குப்பைகளை அகற்ற 'பயோ-மைனிங்' (Bio-mining) மற்றும் 'பயோ-ரெமிடியேஷன்' (Bioremediation) ஆகிய முறைகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.குப்பைகளை சரியாக தரம் பிரித்து ஆக்கபூர்வமாக மறுசுழற்சி செய்யும் போது மீத்தேன் போன்ற எரிவாயுக்களை தயாரித்து நாம் பயன்பட��த்தலாம். நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் முன் வைத்தது.
வெகு ��ில இடங்களைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குப்பை கிடங்குகளிலும் மறுசுழற்சி நடைபெற்றது போல் பொய்யாக கணக்கு காண்பித்து கான்ட்ராக்டர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். துறை சார்ந்த அதிகாரிகளும் அமைச்சர்களுமே அதற்குப் பொறுப்பு. இந்நிலையை சரி செய்ய சுற்றுச்சூழல் விதிகளின்படி நேர்மையான திடக்கழிவு மேலாண்மையை இந்த புதிய அரசு உறுதிப்படுத்த வேண்டும். நெகிழி பைகளுக்கு நிரந்தர தடை உள��ளது. ஆனால் அது தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. அதைச் செய்ய வேண்டும்.
இது ஏதும் செய்யாமல் அந்த நபர் கூறும் யோசனை சுற்றுச்சூழலுக்குப் பேரழிவை ஏற்படுத்தும். குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டிப் புதைப்பது தீர்வாகாது.அதை அறிவியல் பூர்வமாகத் தரம் பிரித்து அழிப்பதே (Zero Waste Management) மண்ணுக்கும், மக்களுக்கும் நல்லது.
பல ஆண்டு குப்பைகளை, ஆழமுள்ள ஒரு பாறைப் பள்ளத்தில் (குவாரியில்) கொட்டிப் புதைப��பது என்பது முற்றிலும் தவறான, ஆபத்தான மற்றும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிரான ஒரு யோசனை. இதை ஒரு தனி நபர் செய்யும் பட்சத்தில் ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் இது. கோடிக்கணக்கில் தண்டம் கட்ட வேண்டிய குற்றம் இது.
7000 மெட்ரிக் டன் (அதாவது 70 லட்சம் கிலோ) குப்பைகள் என்பது மிக மிகப் பிரம்மாண்டமான அளவு. இவ்வளவு பெரிய அளவிலான குப்பைகளை எந்தவித பாதுகாப்பு உள்கட்டமைப்பும் இல்லாத ஒரு பாறைப் பள்ளத்தில் புதைப்பது என்பது சுற்றுச்சூழல் ரீதியாக அந்தப் பகுதிக்கே நேரிடக்கூடிய ஒரு மிகப்பெரிய பேரழிவு (Environmental Disaster) ஆகும். உலகில் எந்த நாடுகளும் இது போன்ற ஒரு முயற்சியை செய்யாது. ஏனென்றால் அங்கு இருக்கிற மக்களின் பிரதிநிதிக்கு மனசாட்சி இருக்கிறதோ இல்லையோ அறிவு என்ற ஒன்று கொஞ்சமாவது இருக்கும்.
ஏற்கனவே democracy disaster நடைபெற்ற தமிழ்நாட்டில் தான் இதுபோன்ற environmental disaster நடக்க வாய்ப்பு உள்ளது.
குப்பையை அப்படியே பாறையில் கொட்டி மூடுவது என்பது பிரச்சினையைத் தீர்ப்பது அல்ல; அதை பூமிக்கு அடியில் ஒளித்து வைத்து, ஒரு பெரிய ஆபத்தாக வளர்ப்பது போன்றது.
- வ��ுண் சுப்ரமணியம் (@sssvarun22)
இணை செயலாளர், சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி.
@NTKEnvWing
என்ன ஒரு பொய், பித்தலாட்டம்.
ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பயரிக்கடன் தள்ளுபடி செய்யப்பட��ம்னு சொல்லிவிட்டு, 50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்கிறோம்னு அறிக்கை விட்டு விவசாயிகளை பிச்சைகாரர்கள் என்று ஏமாற்ற வேண்டாம்.
@CMOTamilnadu @TVKVijayHQ
நாம் தமிழர் கட்சி ஆட்சி செயற்பாட்டு வரைவு - 2026 !
நாம் தமிழர் ஆட்சியில்...
கனிமவளப் பாதுகாப்பு:-
• எம் மண்ணின் கனிமவளங்கள் அனைத்தும் மக்களுக்கானது.
• தனியார் முதலாளிக்ளுக்கு கொடுக்கப்��ட்டிருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தையும் நாம்தமிழர் கட்சி நீக்கம் செய்யும்.
• கனிமவளக் கொள்ளைக்கு எதிராக கடும் தண்டனைகளுடன் கூடிய புதிய சட்டங்கள் இயற்றப்படும்.
#NTKManifesto2026 #நாம்தமிழர்_ஆட்சிவரைவு
@Seeman4TN @NaamTamilarOrg