நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது க��ும் கண்டனம்.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
அன்னைத் தமிழுக்குத் தன் அழகுமிகுந்த உச்சரிப்பால் புகழ் சேர்த்த கலைத்தாயின் தலைமகன்; வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரங்களை நடிப்பால் கண்முன்னே நிறுத்தியவர்! புரட்சித்தலைவரின் நீண்டகால நண்பர், செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளான இன்று,
நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அமைத்து, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு என்ற பெருமிதத்துடன்; திரையுலகின் ஈடுஇணையற்ற அந்த மாபெரும் கலைஞன் நிகழ்த்திய காலத்தால் அழியாத சாதனைகளை இந்நாளில் நினைவுகூர்கிறேன்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சீர்காழி தவெக ஒன்றிய துணைச் செயலாளர் ஜில்லா மணி, தனது கூட்டாளிகளுடன் இணைந்து வயதான முதியவரைக் காரில் கடத்திக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ஜில்லா மணி, "இது பழைய வீடியோ; யாரோ எனது சமூக வலைதளப் பக்கத்தை ஹேக் செய்துவிட்டு தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்" எனக் கூறுகிறார். குற்றம் எப்போது நடந்தாலும் குற்றம் குற்றம்தான் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இவரெல்லாம் ஒரு கட்சியின் நிர்வாகியா?
கமிஷன் கேட்டு மிரட்டுவது, பெண்களுக்கு எதிரான குற்ற��்களில் ஈடுபடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என ஒட்டுமொத்த சமூக விரோதிகளின் கூடாரமாகத்தான் தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. இது 'தூய சக்தி' அல்ல, மாறாக 'துர்நாற்ற சக்தி' என்பது தமிழக மக்களுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரியவருகிறது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஆவின் பால் Pocket - ல் மிதக்கும் கரப்பான் பூச்சு 😳
யம்மா பால் வளத்துறை அமைச்சரே என்னம்மா இதெல்லாம்?
நீங்களோ இல்ல உங்க முதலமைச்சரோ அவங்க குடும்பத்துல உள்ளவங்களோ இப்படிப்பட்ட பால் வாங்கி குடிப்பீங்களா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஆவின் பால் இவ்வளவு தரம் அற்றதாக இருப்பதற்கான காரணம் என்ன?
இதில் கூட கவனம் செலுத்த முடியாமல் பால்வளத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
என்ன விஜய் சார் இதுதான் உங்க ஆட்சியின் லட்சணமா?
72-வது #NationalFilmAwards விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @dhanushkraja அவர்கள் இயக்கி நடித்து வெ���ியான #Raayan திரைப்படக் குழுவினருக்கும்,
தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள @SathyaJyothi தயாரிப்பில், திரு. @ArunMatheswaran அவர்கள் இயக்கத்தில், திரு. #தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளியான #CaptainMiller படக்குழுவினருக்கும்,
#CaptainMiller திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. #தனுஷ் அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக பின்��ணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @gvprakash அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. @Rajkumar_KP அவர்களுக்கும்,
#Amaran திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. கலைவாணன் அவர்களுக்கும்,
#Maharaja திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ள செல்வி. சாச்சனா நமிதாஸ் அவர்களுக்கும்,
#Maharaja திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. அனல் அரசு அவர்களுக்கும்,
#Meiyazhagan திரைப்படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. சுரேன் G அவர்களுக்கும்,
Non-Feature Films பிரிவில் #Blue படத்திற்காக சிறந்த ஒல��� வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. TS ஹரிஹரசுதன் அவர்களுக்கும்
விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் கலைச் சேவை மக்களை மென்மேலும் மகிழ்வித்து, தாங்கள் இன்னும் பல அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துகிறேன்.
@AIADMKOfficial
#72ndNationalAwards
#TamilCinema
வாழ்க்கையில் அவமானத்தை ஒவ்வொரு மனிதனும் சந்திப்பது என்பது இயல்பு
ஆனால் அவமானமே வாழ்க்கையாக ஒரு மனிதனுக்கு அமைந்தது என்றால் அது இவர்களுக்குத்தான்
ஐயோ பாவம்!
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வ���்துள்ளன. இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial