அண்ணன் இசைமதிவாணனும் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பட்டமான கோழைத்தனம் சட்ட ஒழுங்கை பாதுகாக்க திறன் இல்லாத முதல்வர், பொய் வழக்குகளில் நாம் தமிழர் கட்சியினரை தேடித்தேடி கைது செய்து கொண்டிருக்கிறார். @CMOTamilnadu@TVKVijayHQ#release_ntkkarthika
கர்ப்பிணி மனைவியோடு கேரளா சென்று திரும்பிய கோவை நாம் தமிழர் கட்சியை சார்ந்த தம்பி மோகன் அவர்களை கேரளா எல்லையில் நடுவழியில் நிறுத்தி கைது செய்திருக்கிறது தறிகெட்ட தவெக அரசு. மனைவியை தனியாக விட்டு வரமுடியாது வீட்டில் விட்டு வருகிறேன் என்று எவ்வளவு கேட்டும் மறுத்து தீவிரவாதியை கைது செய்வதைப்போல் தம்பியை மட்டும் இழுத்துக்கொண்டு வருகிறது மனசாட்சியற்ற காவல்துறை..
#பாசிஸ்ட்_விஜய்
சென்னையில் ரயிலில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்த மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்களை நடுஇரவில் விருதுநகரில் ரயிலிலிருந்து இறக்கி கைது செய்திருக்கிறது தவெக அரசு..
அதிகார மமதையில் ஆடும் இந்த ஆட்டத்திற்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை..
பெண்களுக்கு அண்ணன், பெண் குழந்தைகளுக்குத் தாய்மாமன் என்றெல்லாம் மேடையில் பீற்றிவிட்டு, ஒரு மாநிலக் கட்சியின் பெண் நிர்வாகியை உடை மாற்றக்கூட நேரம் அளிக்காது, நைட்டி உடையில் கைதுசெய்ய உத்தரவிடும் விஜய் எனும் அயோக்கியனின் முகத்திரையைக் கிழித்தெறிய வேண்டும்.
ஆயுத வழிபாட்டுத் திருநாள் வாழ்த்துகள்!
"பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,
வாளோடு முன் தோன்றி மூத்த குடி!"
என்று சங்க இலக்கியமான புறப்பொருள் வெண்பாமாலை பாடுவதுபோல, தொல்தமிழ்ப்பேரினத்தின் மக்களாகிய நாம் நம் உடலோடு இணைந்த கையையும், காலையும் போல, கையில் வாளையும், வேலையும் கொண்டு வளர்ந்து, வாழ்ந்த வீரமிக்க பண்பாட்டுச் செழுமைக்குரியவர்கள��.
150 கோடி மக்கள் வாழும் நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் நாட்டின் எல்லையில் 15 இலட்சம் வீரர்கள் ஆயுதம்தாங்கி எல்லை காத்து நிற்பதுதான் காரணம்!
ஒவ்வோரு நாளும் இரவு பகல் பாராமல், பசி தூக்கம் இன்றி ஆயுதம் ஏந்தி நம்முடைய காவலர்கள் காப்பதுதான் மக்களின் உயிரும், உடைமையும் பாதுகாக்கப்படுகிறது.
"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடு��்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!" என்று ஆயுதம் செய்து தருவதும் தமிழர் வாழ்வியலில்
முதன்மையான கடமையாக இருந்துள்ளதை புறநானூற்றின் 312 வது பாடலில் பாடுகிறார்
அறிவுப்பெருமகள் பொன்முடியார்.
வலியதுதான் வாழும் எனும் இயற்கை கோட்பாட்டிற்கிணங்க உலக முழுமைக்கும் வீரமிக்க தலைமுறையை தந்த இனங்கள்தான் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து வாழ்கிறது.
வரலாறு என்பது வீர்ர்களுக்கானதே தவிர கோழைகளுக்கானது அல்ல;
மனித இனத்திற்கு அறிவின் கூர்மை எப்படி இன்றியமையாததோ அதைப்போலவே உடல் வலிமையும் மிக அவசியமானது.
அதனால்தான் தமிழர்கள் ஐயனார், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் உள்ளிட்ட தங்கள் வழிபாட்டுத் தெய்வங்களை ஆயுதம் ஏந்தி நிற்கும் காவல் தெய்வங்களாக வழிபட்டனர். அந்தப் பண்பாட்டின் நீட்சிதான் நமது வீரப்பெரும்பாட்டன்கள் பூலித்தேவன், மருது சகோதார்கள், தீரன் சின்னமலை, அழகுமுத்துகோன், சுந்தரலிங்கம், வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் உள்ளிட்ட நம்முடைய இன முன்னோர்களின் சிலைகளையும் வாள் வேலோடு நாம் இன்றும் போற்றுகிறோம்.
போருக்குச் செல்லும் முன் ஆயுதஙகளை வழிபடும் தொன்று தொட்ட நம் வழக்கத்தின் தொடர்ச்சியே 'ஆயுத பூசை' விழாவாக இன்றும் தொடர்கிறது.
எனவேதான் “ஏரும் போரும் எமக்குத் தொழில்” என்ற எம் முன்னோர்களின் வாழ்வியல் நெறியைப் போற்றி, உழைப்புக் கருவிகளையும், தற்காப்பின் அடையாளங்களையும் மதிக்கும் நாளாக ஆயுத வழிபாட்டு நாள�� நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது.
ஏர் என்பது உணவளிக்கும் உழைப்பின் அடையாளம்; போர் என்பது உயிரையும் உடைமையையும் மண்ணையும் மானத்தையும் காக்கும் மறத்தின் அடையாளம். நிலத்தை உழுது உயிர்களை வாழவைத்ததும், அந்த நிலத்திற்கும் மக்களுக்கும் கேடு வந்தபோது எதிர்த்துநின்று காத்ததும் எம் முன்னோர்களின் வாழ்வியல் அறம். பிறர் நிலத்தைப் பறிப்பதற்காக அல்ல; தம் நிலத்தைப் பாதுகாப்பதற்காக எழ���ந்த வீரத்தையும், பசியைப் போக்குவதற்காக நிலத்தில் சிந்திய வியர்வையையும் ஒருசேர நினைவுகூர்வதே இந்நாளின் சிறப்பு.
உழவரின் ஏரும், தச்சரின் உளியும், கொல்லரின் சுத்தியலும், நெசவாளரின் தறியும் வெறும் கருவிகளல்ல; மனித வாழ்வை உருவாக்கிய உழைப்பின் சான்றுகள். உலகிற்கு உணவிடும் உழவு செய்ய பயன்படும் கடப்பாரை, கோடாரி, மண்வெட்டி உள்ளிட்ட ஒவ்வொன்றும் நம் ஆயுதங்கள்தான். ஆயுதம் அழிவுக்கர���வியல்ல; உலகை ஆக்குவதற்கும், காப்பதற்கும் பயன்படுவதுதான் ஆயுதங்கள்!
அறிவியல் வளர்ச்சியால் இன்று கருவிகளின் வடிவங்கள் மாறியிருக்கலாம்; ஆனால், அவற்றை இயக்கும் மனித உழைப்பின் மதிப்பு என்றும் மாறுவதில்லை. எழுதுகோல் முதல் கணினி வரை, எந்திரம் முதல் படப்பிடிப்புக் கருவி வரை, நம் அறிவையும் ஆற்றலையும் படைப்பாக மாற்றும் ஒவ்வொரு கருவியும் போற்றுதலுக்குரியதே!
கருவிகளைப் போற்றும் இந்நாளில், அவற்றைக் கையாளும் உழைக்கும் மக்களின் வாழ்வையும் உயர்த்த உறுதியேற்போம். கருவிகளுக்குச் செய்யும் சிறப்போடு, தொழிலாளர்களுக்குரிய மதிப்பையும் வழங்குவோம். உழைப்புக்கேற்ற ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், ஓய��வு, சம உரிமை ஆகியவை ஒவ்வொரு உழைப்பாளருக்கும் கிடைக்க வேண்டும். எந்தத் தொழிலையும் தாழ்வாகக் கருதாமல், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்காமல், உழைப்பின் மாண்பைப் போற்றும் சமத்துவச் சமூகத்தைப் படைப்போம்.
நிலத்தை உழும் ஏரைப் போற்றுவதோடு, விளைநிலங்களையும் காப்போம்! தொழிற்கருவிகளைப் போற்றுவதோடு, நம் மரபுத் தொழில்களையும் மீட்டெடுப்போம்! உற்பத்தியைப் பெருக்குவதோடு, மண்���ும் நீரும் காற்றும் மாசுபடாமல் பாதுகாப்போம்! நமது தேவைகளை நாமே நிறைவு செய்யும் தற்சார்பு வாழ்வை நோக்கி முன்னேறுவோம்!
அறிவை வளர்க்கவும், ஆற்றலைப் பெருக்கவும், அநீதியை எதிர்க்கவும், எளியவர்களைக் காக்கவும் நமது திறன்களைப் பயன்படுத்துவோம். உழைப்பில் செழ���ப்பையும், ஒற்றுமையில் வலிமையையும், உரிமை காப்பதில் உறுதியையும் பெறுவோம்!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ஆயுத வழிபாட்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
உங்கள எல்லாம் பார்த்தா பாவமாகவும் பரிதாபமாகவும் தான் இருக்கு தூத்துக்குடியில் கடல��� நீரை குடிநீராக்கும் திட்டம் கப்பல் கட்டும் தளம் கடலில் மின்சாரம் எடுக்கும் திட்டம் இப்படி பல திட்டங்களை கொண்டு வந்து தூத்துக்குடி கடலை நாசம் செய்வார்கள் என்று தேர்தல் சமயத்தில் எவ்வளவோ எடுத்துச் சொன்னோமே கேட்கலையே இப்ப வந்து குத்துதே குடைதுனா அதில் இந்த தூத்துக்குடி மீனவர் நண்பர் இருக்கிறாரே விஜய்க்கு முரட்டு முட்டு கொடுத்தாப்ல இப்ப முத ஆளா வந்து கதறாப்புல 😄😄🤣🤣
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரண��்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்!
சவுதி நாட்டில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழரான தம்பி சிவராஜா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது தாய்நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து பொருளாதாரத்தேடலுக்காக சவுதி நாட்டுக்குச் சென்ற தம்பி அனோஜன், மதம் சார்ந்தும், இறைக்���ோட்பாடுகள் சார்ந்தும் விமர்சனத்தை வைத்து, சமூக வலைத்தளத்தில் விவாதித்ததற்காக அந்நாட்டு அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தம்பி அனோஜன் சமூக வலைத்தளத்தில் தான் எழுதியவைகளை உடனடியாக நீக்கியதோடு, அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
விளைவை அறியாது, மற்றவர் உணர்வை காயப்படுத்தும் விதமான தன்னுடைய புரிதலற்றச் செயல��பாட்டுக்கும், பெருந்தவறுக்கும் முழுமையாக வருந்தித் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் தம்பி அனோஜனைத் தண்டிப்ப��ு என்பது ஏற்புடையதல்ல! அதுவும் உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக தம்பி அனோஜன், சமூக வலைத்தளத்தில் மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும் தன்னுடைய கருத்தின் விளைவை உணர்ந்து, பதிவுகளை நீக்கி, சவூதி அரேபிய அரசிடமும், இசுலாமிய உறவுகளிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறத��. அப்படியிருக்க, அவருக்கு மரணத்தண்டனை அளிப்பது என்பது எவராலும் ஏற்க முடியாதது. மனித உரிமை குறித்துப் பெரிதும் விவாதிக்கப்பட்டுப் பேசப்படும் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் தற்காலச்சூழலில் இணையதளத்தில் எழுதிய அவதூறானக்கருத்துக்கு மரணத்தைத் தண்டனையாக விதிப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், பரிவையும் போதிக்கும் மகத்துவம் மிகுந்த மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், மக்களை நன்னெறிப்படுத்தி வழிகாட்டிய போற்றுதற்குரிய இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகையத் தவறை செய்து, வரலாற்றுப்பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை சவுதி நாட்டி��் ஆட்சியாளர் பெருந்தகைகள் உணர வேண்டும்.
‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று போதித்த போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், தமது இறுதிப் பேருரையில், “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்க���த் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்கிறார். மேலும், மன்னிப்பை இறைவனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகவும், மனிதன் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணாதிசயமெனவும் உலகுக்கு உரைக்கிறார். நபி பெருமானார் காட்டிய அத்தகைய உயர்ந்த அன்பு வழி நின்று, அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி நாட்டின் அரசு வழங்க வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்த்தேசிய இ��த்தின் எதிர்பார்ப்பும், கனிவானக் கோரிக்கையுமாகும்.
ஆகவே, உலகம் தழுவி வாழும் மானுடப்பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தம்பி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இம்மரணத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும், தம்பி சிவராசா அனோஜனை மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் சவூதி அரசோடு பேசி, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆந்திரா 20 ரூபாய்க்கு வாங்கும் மின்சாரத்தை தமிழ்நாடு மட்டும் ஏன் 35 ரூபாய்க்கு வாங்கனும்.?!
மீதி 15 ரூபாய் Party fund ஆ ?!
ஆந்திரா வாழ்கிறது!
தமிழ்நாடு தேய்கிறது!
மக்களிடம் ஏற்கனவே பன்மடங���கு அதிகமாக மின்கட்டணம் வசூலித்து வரும் நிலையில், ஓர் அலகு மின்சாரம் 35 ரூபாய்க்கு தனியாரிடம் வாங்கினால் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகக் கட்டணத்தை உயர்த்தப்போகிறீர்கள்? மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு மின்சாரத்தைச் சுமார் 35 ரூபாய்க்கு க��ள்முதல் செய்ய தவெக அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் சொந்த மின் உற்ப��்தி திட்டங்களை வலுப்படுத்தாமல், அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவையாக உள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நீண்டகாலமாக பெரிய முதலீடு ஏதும் செய்யாமல் முந்தைய திமுக, அதிமுக அரசுகள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால் அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் 2 ��லட்சம் கோடிகள் அளவிற்கு கடனில மூழ்கியுள்ளது. அதையே தவெக அரசும் தொடர்ந்தால் மேலும் மேலும் கடன்தான் அதிகமாகும். உற்பத்தியில் முதலீடு செய்வதுதானே நிலையான தீர்வை நோக்கி நகரும். ஒவ்வொரு முறையும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதையே தீர்வாகக் கூறிக்கொண்டிருந்தால், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது எப்போது? இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு எப்போது வரும்? அதற்கான திட��டமும் காலக்கெடுவும் எங்கே? மின் உற்பத்திக்கு அணு மின் திட்டமும், அனல் மின் திட்டமும் மட்டும்தான் உள்ளதா? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை உள்ளிட்ட மாற்று மின்பெருக்கத் திட்டங்களே இல���லையா? அவற்றில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தாதது ஏன்?
கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது, மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் கையூட்டுக்காக (கமிசன்) திமுக அரசு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தனது ஆட்சியில் அதைவிட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது யாரிடம் கையூட்டு (கமிசன்) வாங்க? தனியாரிடம் மின��சாரம் வாங்குவது ஊழல் முறைகேடுக்கு வழிவகுத்தது என்று குற்றஞ்சாட்டிய முதல்வர் விஜய் அவர்கள், அதைவிட அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்வது ஏன்? அன்று தவறு என்று சொன்ன கொள்கை, இன்று ஆட்சிக்கு வந்ததும் சரியாகிவிட்டதா? 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் மின்சாரம் ஓர் அலகு 4.85 ரூபாய் முதல் 5.85 ரூபாய் வரை அளவிற்குத் தனியாரிடம் வாங்கப்பட்டது. அவசரத் தேவைக்காக அதனை 21 ரூபாய் அளவிற்கு உயர்த��தி வாங்கிய பொழுது திமுக அரசை கடுமையாக எதிர்த்தோம். ஆனால், முந்தைய திமுக ஆட்சியின் கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய தவெக அரசின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகம் உயர்ந்துள்ளது எப்படி? அதற்கான நியாயத்தை மக்களிடம் விளக்க தவெக அரசு தயாரா?
தவெக ஆட்சிக்கு வந்து, கடந்த 5 மாதத்தில் மின்கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதாக அல்லல்பட்டு மக்கள் போராடி வரும் நிலையில், இப்பொழுது ஓர் அலகு 35 ரூபாய் கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்தால், அதனை காரணமாக வைத்து மேலும் எத்தனை மடங்கு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்கப்போகிறீர்கள்? மின்தேவை அதிகரிப்பதை முன்கூட்டியே கணித்து, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையல்லவா? பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு அவசரமாக அதிக விலைக்கு வாங்குவதற்கு அரசு எதற்கு? நிர்வாகம் எ���ற்கு? தனியாக மின்துறைதான் எதற்கு?
அரசினுடைய மின் நிலையங்களில் நிறுவப்பட்ட உற்பத்தித்திறன் எவ்வளவு? தற்போது பயன்படுத்தப்படும் திறன் எவ்வளவு? முழுமையாக உற்பத்தி செய்ய முடியாததற்கான காரணங்கள் என்ன? தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்திலேயே, மின்வெட்டு ஏற்படும் அளவிற்குத் தமிழ்நாடு மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. அவற்றைச் சரிசெய்ய தவெக அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? ���வற்றையெல்லாம் செய்யாமல் ஆய்வு என்ற பெயரில் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் சென்று வந்தது தங்கள் கட்சியின் விர்சுவல் வாரியர்ஸ் ரீல்ஸ் போடுவதற்கு மட்டும் தானா?
மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த அவசரத் தேவையைக் காரணமாக்க�� எந்த விலையிலும் மின்சாரம் வாங்கலாம் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறைந்த செலவில் மின்சாரம் பெறுவதற்கான மாற்று வாய்ப்புகள் ஆராயப்பட்டனவா? கொள்முதல் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது? எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு மின்சாரம், எத்தனை நாட்களுக்கு வாங்கப்படுகிறது? இதனால் ஏற்படும் மொத்தக் கூடுதல் செலவு எவ்வளவு? ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தூயசக்தி என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் தவெக அரசு வெளிப்படையாகப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்.
இந்தக் கூடுதல் செலவை எப்படியாயினும் நாளை மின்கட்டண உயர்வாக மக்கள் தலையில் சுமத்தப் போகிறீர்கள். ஆக அரசின் திட்டமிடல் குறைபாட்டிற்காக எளிய மக்களும் விவசாயிகளும் சிறு தொழில்முனைவோரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டுமா? தனியார் மின் நிறுவனங்களின் வருமானத்தை உயர்த்துவதற்கா மக்கள் உங்களு���்கு அதிகாரத்தை வழங்கினார்கள்? என்ற என்னுடைய கேள்விகளுக்கு தவெக அரசிடம் என்ன பதில் உள்ளது?
ஆகவே, அரசின் மின் நிலையங்களைச் சீரமைத்தல், நிலுவைத் திட்டங்களை நிறைவேற்றுதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் மாற்று மின் உற்பத்தி திட்டங்களையும், மின்சேமிப்பு வசதிகளையும் விரிவுப���ுத்துதல், மின் விநியோக இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அதிக விலையிலான மின் கொள்முதல் முடிவை உடனடியாக மறுஆய்வு செய்து, தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வதோடு, கூடுதல் கொள்முதல் செலவை மக்கள்மீது சுமத்தக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மருத்துவப் பணியாளர்களை ஒடுக்கும் தவெக அரசு! பெண்களை வதைக்கும் காவல்துறை!
'தாய் மாமன்', 'அண்ணன்' என்றெல்லாம் மேடையில் கதையளக்கும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு செய்யும் அநியாயத்தைப் பாரீர்!
நன்றி: @NewsTamilTV24x7
இன்றைக்கு தாராபுரம் தேர்தல் பரப்புரையில் தமிழக முதல்வர் விஜய் அவர்களை உட்கார வைத்து மாட்டுவண்டி ஓட்டியவர் பெயர் அசோக் ! இவர் அதிமுகவின் பொட்டிக்காம்பாளையம் பொறுப்பாளர்
வேட்பாளர் சத்யபாமாவை ஊருக்குள் வரக்கூடாது துரோகி என்று சொன்னதற்காக வழக்கு போடப்பட்டு செங்கோட்டையன் மற்றும் கே.வி ராமலிங்கத்தால�� மிரட்டப்பட்டு தவெகவில் இணைக்கப்பட்டுள்ளார் !
தவெகவில் இணையவில்லை என்றால் சிறைக்கு போய்விடுவீர்கள் என்று மிரட்டி அவரை வைத்தே மாட்டு வண்டி ஓட்ட வைத்து வருவது கேவலமான அரசியல் !
தவெக எனும் திருட்டுசக்தி !
தவெக, திமுக, அதிமுக கட்சிகளை சார்ந்த எந்த கட்சி வேட்பாளரும் இது பற்றி பேசவில்லை..
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அக்கா #கார்த்திகா மட்டுமே இது குறித்து பொது மேடையில் பேசியுள்ளார்..
#நாம்தமிழர்கட்சி எப்போதும் மக்களுக்கானது என்பதற்கு இதுவே சாட்சி..
டேய் கொஞ்சம் அரசியல் படிங்கடா!
திராவிட தமிழர் கட்சின்னு தெளிவா எழுதியிருக்கு!
அதை நாம் தமிழர் கொடி என்று அவதூறு பரப்புர!
புலி வச்சிருந்தா அது நாம் தமிழர் கட���சியா? நீங்க யானை வச்சிருக்கீங்களே அப்போ அது மாயாவதி கட்சியா?!
என் மகளுக்கு 'இலக்கியா' என பெயரிட்டேன். என் இளைய மகனுக்கு 'ஆதன்' என பெயரிட்டேன். என் மனைவியின் அண்ணன் மகளுக்கு 'யாழின���' என்றும், மகனுக்கு 'தமிழ் மாறன்' என்றும் பெயரிட்டேன், என் தம்பியின் மகளுக்கு 'மகிழினி' என பெயரிட்டேன்.
இந்த பெயர்கள் எல்லாம் தமிழுணர்வு என்னுள் எழுந்த பின்பு சூட்டிய பெயர்கள். அந்த தமிழ் மீதான் காதல் என்னுள் மலர்ந்ததற்கு காரணம் அண்ணன் சீமான்.
எப்போதும் சொல்வதுதான். ஆட்சியிலமர்ந்து கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின், விஜய் என இவர்கள் சாதிக்க முடியாத பல மகத்துவங்களை என்றோ ���ாதித்துவிட்டார் அண்ணன் சீமான்.
#சீமான்
#seeman