Day 12 (The Pull): உயர நினைக்கும் போதெல்லாம், கீழே இழுக்கும் பல்லாயிரம் கரங்கள்... வளரத் துடித்த வலி இது.
எழ நினைக்கும் போதெல்லாம் உங்களை இழுக்கும் கரங்கள் எவை? (Which hands pull you down every time you try to rise?)
Continues....
#ThooralinRaagam#பிழைக்கவியன்#TamilPoetry
Day 8 (Silent Burden): வழிகள் தெரிந்தும், பொதி சுமக்கும் மாடாக மௌனமாய்ப் பயணித்தேன்.
விடை தெரிந்தும் ஊமையாய் சுமந்து செல்லும் சுமைகள்... (Burdens carried in silence even when the answer is known...)
Continues....
#ThooralinRaagam#பிழைக்கவியன்#TamilPoetry#PoetrySeries#Life
Day 2 (Fearful Play): விளையாட்டுத் திடலை விட ஒரு இருண்ட மூலையே எனக்குப் பாதுகாப்பாய் அமைந்தது...
விளையாட வேண்டிய வயதில் பயந்து ஒளிந்ததுண்டா? (Did you ever hide in fear when you should have been playing?)
Continues....
#ThooralinRaagam#பிழைக்கவியன்#TamilPoetry#LifeTruths
Day 3 (Stone Statue): உணர்ச்சிகள் மரத்துப்போய், ஒரு சிலையாகக் கண்ணீர் வடிப்பதே என் பிழையானது.
அழக்கூட உரிமையில்லாத ஒரு கல் சிலையாக மாறிய தருணம்... (The moment you became a stone statue with no right even to cry...)
Continues....
#ThooralinRaagam#பிழைக்கவியன்#TamilPoetry
மழைத் தூறலில் ஒரு ராகம் இருக்கும்... அது மௌனமானவர்களுக்கு மட்டுமே கேட்கும். 🌧️🎶
என் மௌனத்தின் ராகங்கள் இங்கே கவிதைகளாகவும், எண்ணங்களாகவும் ஒலிக்கப்போகின்றன. பிழையுள்ள மனிதனின் கவிதைகளில், சில பிழையற்ற உணர்வுகள் உங்களுக்காக!
வாருங்கள், இந்தத் தூறலில் நனைவோம். 🖋️
— பிழைக்கவியன்
✨
பலவித மனநோய்க்கு பலவித
மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு இருப்பினும்,
உன் ஒற்றை மழலைச் சிரிப்பு
அவ்வனைத்தையும் குணப்படுத்தியதைக் கண்டு
அனைத்து மருத்துவ உலகும்
வியப்பில் நிற்கிறதடி! 🧸
🖋️ பிழைக்கவியன்
#ThooralinRaagam#Pizhaikkaviyan
🦋
பட்டாம்பூச்சிகளைப் பலவினைகளில்
பலவண்ணங்களில் பல்வேறு இடங்களில்
தொலைவாய் கண்டு ரசித்த துண்டு.
இன்றோ அருகே கண்டும்
தொட்டுணர்ந்து கொள்கிறேன்...
நொடிப்பொழுதும் இமைத்துக் கொண்டு இருக்கும்
உன்னிரு இமைகளால்!
என்ன ஒரு அழகு! ✨
🖋️ பிழைக்கவியன்
#ThooralinRaagam#Pizhaikkaviyan#Kavithai
✨
பல சான்றோர்களைப் பணியமர்த்தி,
என் கட்டளைகளுக்குப் பணியாற்றவைக்கும்
நிலைகொண்ட என்னை...
பணியமர்த்தி,
"அப்பா இதைச் செய்யேன்" என்ற
உன் கட்டளையினை நீ இசைக்கையிலேயே
நான் முழுமை பெறுகின்றேன்! ❤️
🖋️ பிழைக்கவியன்
#ThooralinRaagam#Pizhaikkaviyan#FatherDaughter#TamilThoughts
உன் கோபம்... என் ரசனை! ✨
சட்டெனக் கோபிக்கும் குணம் கொண்ட நான்,
சிறிதளவும் கோபிக்காத ஒருத்தியாய் நீ இருப்பினும்...
எனக்குச் சிறிதும் வேற்றுமை இன்றி நீ என்னிடம் கோபிக்கையில்,
நீ செய்யும் வர்ணனைகளும்,
உரக்க நீ ஆணையிடும் "பேசாதே போ... நீ பேசாதே"
என்பனவற்றிற்குச் சிறிதும் கோபமின்றி..
✨
உணவருந்தும் வேளைகளில்
சிலநொடி வருந்துவதுண்டு...
முழுமையாய் உண்ட பின்பும்
'சிறிது வைத்துக்கொள்' என்று
கூடுதலாய் பரிமாறும் அன்னையின் அன்பை! 🍱
என்னை ஈன்ற தாயை
நான் பெற்ற தாய் சமன் செய்கின்றாள்—
'அப்பா கொஞ்சம் வைத்துக்கொள்'
என்று பரிமாறுகையிலும்...
'அப்பா இன்னும் கொஞ்சம்'
✨
நிலவு வானில் தோன்றியதும்,
"எப்போ வருவீங்க?" என்று
மனைவி அலைபேசியில் கேட்கும்போதெல்லாம்
சட்டென கோபம் உச்சம் பெறும். 💢
அவள் அலைபேசியைப் பிடுங்கி,
"அப்பா... எப்பப்பா வருவ?" என்று
நீ ஏங்கிக் கேட்கும் நொடியிலேயே...
மனம் உன் முன் வந்து நின்றுவிடுகிறது;
உடல் மட்டும் வாகனத்தை இயக்க!
✨
உறங்கச் செல்கையில் கதை கேட்டு உறங்கும்
பிள்ளைகளுக்கு இடையில்...
நீ கதை சொல்லும் 'ஒரு ஊர்ல ஒரு அழகான
ராஜகுமாரி இருந்தாளாம்' என்று தொடங்கி,
உன் கற்பனைகளைச் சற்று இயல்பாய் முடிக்கையில்
வியப்பு கொள்கிறான். 🧐
தேர்ச்சி பெற்ற கல்வியாளர்களின் திறன் உன்னுள்;
பிரம்மன் படைப்பில் சரஸ்வதி
✨
எண்ணற்ற நாட்கள் நான்
காத்திருந்தமையால்,
சற்றும் தாமதிக்கக் கூடாது என எண்ணி,
குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே வந்தாயோ?
என் பிறந்தநாள் பரிசாக முன்கூட்டியே? 🎁
மகிழ்ச்சியை அனுபவிக்க வழியின்றி
வலிகளோடு? 💔
🖋️ பிழைக்கவியன்
#ThooralinRaagam#Pizhaikkaviyan#EarlyArrival#Fatherhood
✨
உள்ளங்கை அளவு
மெல்லிய வடிவுற்ற உன்னை
அள்ளி மார்போடு அணைத்து,
கதகதப்பாய் வளர்த்தேனே;
கங்காரு தன் குட்டியைப் பேணுவதைப் போல்! 🦘❤️
இன்றோ உன் மடியில்
என்னை அணைத்து நீ உறங்கச் செய்கையில்,
அக்கணங்கள் யாவும்
கரைந்தே போயின! 🧸💤
🖋️ பிழைக்கவியன்
#ThooralinRaagam#Pizhaikkaviyan
✨
உள்ளங்கை அளவு
மெல்லிய வடிவுற்ற உன்னை
அள்ளி மார்போடு அணைத்து,
கதகதப்பாய் வளர்த்தேனே;
கங்காரு தன் குட்டியைப் பேணுவதைப் போல்! 🦘❤️
இன்றோ உன் மடியில்
என்னை அணைத்து நீ உறங்கச் செய்கையில்,
அக்கணங்கள் யாவும்
கரைந்தே போயின! 🧸💤
🖋️ பிழைக்கவியன்
#ThooralinRaagam#Pizhaikkaviyan
✨உள்ளங்கை அளவு
மெல்லிய வடிவுற்ற உன்னை
அள்ளி மார்போடு அணைத்து,
கதகதப்பாய் வளர்த்தேனே;
கங்காரு தன் குட்டியைப் பேணுவதைப் போல்! 🦘❤️
இன்றோ உன் மடியில்
என்னை அணைத்து நீ உறங்கச் செய்கையில்,
அக்கணங்கள் யாவும்
கரைந்தே போயின! 🧸💤
🖋️ பிழைக்கவியன்
#ThooralinRaagam#Pizhaikkaviyan
✨சிறிதாய் யான் எதை அளித்தாலும்;
அவற்றைப் பெரிதெனக் கருதி வியக்கின்றாய்.
சிறந்ததையே தர எண்ணும் நான்,
சிலவற்றைக் கூட அளிக்கத் தடுமாறுகின்றேனோ
என்ற எண்ணம் பெரிதும் காயப்படுத்துதடி..💔
என்னதான் இவ்விறைவனின் கணக்கோ?
🖋️ பிழைக்கவியன்
#ThooralinRaagam#Pizhaikkaviyan#FatherhoodReality