முன்னாள் தலைமைச் செயலர் திரு இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எனது நீண்ட கால நண்பர்....
தமிழகத்தின் இளைஞர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவதிலும் அவர்களை நல்வழிப்படுத்துவதிலும் அவருக்கு ஒரு பெரும் பங்கு உண்டு...
புத்தக வாசிப்பை ஓர் இயக்கமாக தமிழகத்தில் மாற்ற முனைந்த சிலருள் இவர் முக்கியமானவர்
மிகச் சிறந்த பேச்சாளர் ஆகச்சிறந்த எழுத்தாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டவர் இறையன்பு அவர்கள்...
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அவரது பெயரில் ஒரு நூலகம் நடைபெற்று வருகிறது அதில் நிறைய இளைஞர்கள் படித்து பயன் பெறுவது மட்டும் அல்லாமல் தங்கள் வாழ்க்கைக்கான முன்னேற்றத்தை அந்த நூலகத்தின் மூலமாக பெற்றிருக்கிறார்கள்....
இதில் ஒரு பெரிய ஆச்சரியம் தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் ஒரே நூலகம் இதுதான்... நடு இரவில் கூட நூலகத்தை பயன்படுத்தலாம்... பார்த்தசாரதி என்ற ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் அதை நடத்தி வருகிறார்...
இந்த நூலகத்திற்கு இன்று நேரில் சென்று எனது சொந்த வீட்டு நூலகத்தில் நான் வைத்திருந்த 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினேன் எனது பள்ளி நண்பர் இளங்கோ அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்...
இராம ஸ்ரீநிவாசன்
பாஜக மாநில பொதுச் செயலாளர்
ஓராண்டுக்கு முன்பு நான் ஒரு நகைச்சுவைக்காக கணித்த விஷயம் இன்று அரசியலாக மாறி இருக்கிறது
திமுகவுடன் கூட்டணி கட்சிகள் எல்லாம் வேண்டாத சகவாசம் என்றும் கிரக சேர்க்கை சரியில்லை என்றும் மேடை நயத்திற்காக சொன்ன விஷயம் இன்று உண்மை என்று நிரூபணம் ஆகி இருக்கிறது
திமுக இனிமேலாவது பாடம் கற்றுக் கொள்ளுமா?
தெரியவில்லை
இராம ஸ்ரீநிவாசன்
என்ன கொடுமை சார் இது? 43 நிமிட வீடியோவை உங்களுக்கு அனுப்பி இதை கேளுங்கள் என்று சொன்னால் இதுவும் வன்முறைதான்
ஆனாலும் கூட உங்களுக்கு நேரமும் பொறுமையும் இருந்தால் அந்த காணொளி கேட்டு கருத்து சொல்லுங்கள் சார்
சென்ற ஆண்டு நான் டெல்லி சென்றபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேனல் ஆன ஆர்கனைசர் யூட்யூபில் நான் கொடுத்த நேர்காணல்....
பழசு தான் ஆனாலும் இப்போதைய தமிழக அரசியலுக்கும் இது கொஞ்சம் பொருந்தி வரும் என்று நினைக்கிறேன்
இராம ஸ்ரீநிவாசன்
இன்று புதுடெல்லியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மையக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திருமிகு.அமித்ஷா அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படம்.
மதுரை தெற்கு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வெற்றி பெற்று நூறு நாட்களுக்குள் மதுரை தூய்மை நகரமாக மாறும் என்று வாக்குறுதி அளித்தேன்...
மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல் அவர்களிடம் பேசி மதுரைக்கு என்று சிறப்பு நிதி கேட்டிருந்தேன் அவரும் டெல்லியில் பேசி அப்படி ஒரு நிதி கொடுக்க சாத்தியம் உள்ளது என்று சொல்லி இருந்தார்...
ஆனால் இன்று மதுரையின் நிலை மிக மோசமாக உள்ளது... மதுரையை தூய்மைப்படுத்துவேன் என்று சொன்ன வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை... தேர்ந்தெடுத்த அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை..
என்ன சொல்லி என்ன செய்ய
இராம ஸ்ரீநிவாசன்
கமல் மீது எனக்கு அரசியல் விமர்சனங்கள் நிறைய உண்டு பல சமயங்களில் அவர் சாமானியனுக்கு புரியாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறவர்....
அவர் பேசுவதை புரிந்து கொள்ள ஒரு தனி அகராதி வேண்டும் என்று அடிக்கடி நான் கிண்டல் செய்வேன்
அவரது அரசியல் பேட்டிகளை கண்டித்து பலமுறை நான் ஊடகங்களில் பேசியிருக்கிறேன்
ஆனாலும் இப்போது நான் அனுப்பி இருக்கிற இந்த வீடியோவில் அவரது கருத்துக்கள் மிகச் சிறந்தவை
ஓர் இந்தியனாக பெருமை கொள்ள இந்த வீடியோ உதவும்
சபாஷ் கமல்...
நீங்களும் சில சமயங்களில் உண்மையைப் பேசுகிறீர்கள் என்பது மகிழ்ச்சி
இராம ஸ்ரீநிவாசன்
பாஜக மாநில பொதுச் செயலாளர்
@ikamalhaasan