கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூடிய மக்கள் வெள்ளத்திற்கு இடையே #வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
நான்கரை ஆண்டுகள் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, நேற்றைக்கு தான் ஞானோதயம் வந்ததுபோல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் திரு. @mkstalin-ஐ தமிழக மக்கள் நம்பப் போகிறார்களா என்ன? வாய்ப்பே இல்லை.
���ப்போது நீங்கள் போடும் நல்லவர் வேஷம், இத்தனை ஆண்டுகள் நீங்கள் நடத்திய கோர ஆட்சியை இல்லை என்று ஆக்கிவிடுமா? இல்லவே இல்லை.
தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள். உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.
அதை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் நீங்கள் உணரப் போவது உறுதி!
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம��மை முதல்வரே...
நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான @AIADMKOfficial ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று!
அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லைய��?
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் ப���வதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.
திரு. @mkstalin அவர்களே-
நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல்.
இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வா��்ப்பே இல்லை!)
அப்புறம்... ஏதோ Open challenge என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ��ரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?
அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?
OPEN CHALLENGE IS STILL ON!
(பி.கு. : கேள்வி 1- #நீட்_ரத்து_என்னாச்சு?)
கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன?
இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா?
ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை; அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான்.மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
@AIADMKOfficial
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்��்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள்,
இன்று சிவகங்கை, திருப்புவனம்
வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு ,
எனது கடும் கண்டனங்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் @mkstalin என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல,
திருப்புவனம் வைகையாற்றில்
மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது
கடும் கண்டனத்திற்கு உரிய��ு
மக்களின் வலிகளை , உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
@AIADMKOfficial
வணக்கம் திரு. ஸ்டாலின் அவர்களே...
ரிப்பன் மாளிகை வாசலில்,
நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரானவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறு��்கி , அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.
யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?
அவ��்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா?
எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில் ,
எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா?
"நள்ளிரவில் அடாவடித்தனமாக , வலுக்கட்டயாமாக நம் அரசுக��கும் மக்களுக்கும் பணி புரியும் , நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.
��ூய்மை பணியாளர்கள் 8 க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் , இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
சொல்ல ���ேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான். @mkstalin
#ByeByeStalin
திரு. ஸ்டாலின் அவர்களே... நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
"உங்களுடன் ஸ்டாலின்" ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் ,
ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க ��ொல்லி இருக்கிறேன்,
அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா?
"சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், இப்படி @AIADMKOfficial ஆட்சியின் அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டுறீங்களே... உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று தானே நான் கேட்டேன்? அதற்கு என்ன பதில் சொல்வீங்க?
ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு துண்டுசீட்டில் 46 பெயர்களை அச்சடித்��ு யாரை ஏமாற்றுகிறீர்கள்?
இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது?
பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா?
-2011 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி ஆகக் கூட வக்கில்லாமல் மண்ணைக் கவ்வி ஓட்டம் பிடித்தது நீங்கள் தானே?
-அதன் பிறகு வந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பட��தோல்வி.
-2012ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தோல்வி.
-புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட தேறாது என்று போட்டியிடாமல் ஓடியது திமுக.
-2013ல் ஏற்காடு இடைத்தேர்தல் தோல்வி.
-2014 நாடாளுமன்றத் தேர்தல். ஒரு தொகுதி க��ட ஜெயிக்க முடியாமல் மீண்டும் மண்ணைக் கவ்வியது உங்கள் திமுக.
-2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பக்கமே திமுக வரவில்லை.
-ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி.
-2016 சட்டமன்ற தேர்தல். தமிழ்நாடு மறக்குமா? ஒரு ஓட்டை சைக்கிள தூக்கிக் கொண்டு "எடுத்த நாள் முதல், இந்த நாள் வரை, வண்டியை விடவில்லை" ன்னு ஊர் ஊராக ஒட்டிச் சென்று, தமிழ்நாட்டில் ஒரு டீக்கடை விடாமல் டீ குடித்தும், மக்கள் யாரும் உங்களை கண்டுக்கவே இல்ல. @AIADMKOfficial ஆட்சி, அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. நீங்கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு பேரவையில் இருந்து ஓட்டம் பிடித்தது தான் மிச்சம்!
-2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்ததே... அதில் கூட மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட படுதோல்வி கட்சி தானே உங்கள் திமுக?
இப்படி ஒரு தேர்தல் வரலாற்றை வைத்துக்கொண்டு, என்னைப் பற்றி @mkstalin பேசலாமா?
இதில் சினிமா வசனம் வேறு... "அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட" என்று கூறுகிறார்...
திரு. ஸ்டாலின் அவர்களே... "நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட" என்பதைத் தான் மக்கள் சொல்லிட்டு இருக்காங்க!
இந்த திரைப்பட காமெடி ஒன்று வருமே... "யாரோ இவன் மூளைக்குள்ளே போய் இவனை டாக்டர் ��்னு நம்ப வெச்சுட்டாங்க" என்று....
அது மாதிரி, யாரோ சிலர் ஸ்டாலின் மூளைக்குள்ளே போய், "இவர் நடத்துவது நல்ல ஆட்சி தான்" என்று நம்ப வைத்துவிட்டார்கள் போல...
Good Bye சொல்லப்போறாங்களாம் மக்கள். மீண்டும் சொல்கிறேன்,
"திரு. ஸ்டாலின் அவர்களே.. அது கண்ணாடி!"
அன்பார்ந்த தமிழக மக்களே- நான் எந்தத் தொகுதிக்கு வந்தாலும், நீங்கள் பெருந்திரளாக வந்து, விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக சொல்லும் அந்��� ஒரு சொல், திரு. ஸ்டாலின் காதுகளுக்கு நன்றாக கேட்கிறது. நீங்கள் சொல்லும் #ByeByeStalin அவரை கதற விடுகிறது.
இன்னும் கதற விடுவோமா?
234 தொகுதிகளிலும் சொல்வோமா?
BYE BYE STALIN !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 7.7.2025 முதல் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதையொட்டி இன்று புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண சிறப்பு ���லச்சினையை (Logo) வெளியிட்டார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 7.7.2025 முதல் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதையொட்டி இன்று புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண சிறப்பு இலச்சினையை (Logo) வெளியிட்டார்.
சேலம் மாவட்டம் வில்லியம்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதை செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 செய்தியாளர்,
மண் திருடர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
"காலை 11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்பார். 11:05 க்கு மணலை அள்ளுங்கள்" என்று ஒரு தியாகி 2021-ல் தேர்தல் வாக்குறுதி அளித்தார் அல்லவா? திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவ���க் கொள்ளை மட்டும் தான்!
இந்த அவலத்தை செய்தி சேகரிக்க சென்றவரை அடிக்கும் தைரியம் மண் திருடர்களுக்கு எங்கிருந்து வந்தது? இதை, விடியா திமுக ஆட்சியாளர்கள் கொடுத்த தைரியம் என்று தானே சொல்ல வேண்டும்?
தன் பணியை செய்த செய்தியாளரை தாக்கிய மண் கொள்ளையர்களுக்கும், அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், செய்தியாளரைத் தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
2026-ல் தமிழ்நாட்டின் வளங்களைச் சுரண்டும் திமுக-விடம் இருந்து #தமிழகத்தை_மீட்போம்.
@AIADMKOfficial
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா?
பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் க��ட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் @mkstalin அரசின் குரல்கள் உயர்கின்றனவா?
வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்!
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம்.
@AIADMKOfficial
சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (3.7.25) என்னை நேரில் சந்தித்து, தாங்கள் தங்கும் சட்டக் கல்லூரியில் போதிய விடுதி வசதியின்மை, மோசமான கழிவறை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதியின்மை குறித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று @mkstalin அரசு உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போரட்டத்தை நிறுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குறிப்பாக இந்தாண்டு சட்டத்துறை மானிய கோரிக்கையின்போது சுமார் 21.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விடுதி கட்டிடம் பல்கலைக்கழக வளாகத்திலேயே கட்ட��்படும் என்று அறிவித்த நிலையில், இதுவரை எந்த முன்னெடுப்பு செய்யப்படவில்லை என்றும் என்னிடம் முறையிட்டனர்.
தற்போது அரசின் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றில் மாணவர்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், பல மாணவர்கள் தனியார் விடுதிகளில் தங்குவதாகவும், அவர்களால் அதிக வாடகை கொடுத்து தங்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
குறிப்பாக எனது தலைமைய��லான அம்மாவின் அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித உள் இட ஒதுக்கீடு வழங்கியது. இதைத் தொடர்ந்து இந்த அரசு மற்ற தொழிற்கல்விகளுக்கும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தியது. மாணவர் விடுதியில் இடமிருந்தும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படாததால் மிகுந்த சிரமத்தத்துடன், அதிக கட்டணம் க���டுத்து தனியார் விடுதிகளில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் பல அறைகள் காலியாக இருந்தும் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து கிடப்பதால் மாணவர்கள் அங்கு முழுமையாக தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த அரசு சட்டப்பேரவையில் அறிவித்தவாறு புதிய விடுதியை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். அதுவரை பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடத்தை சீரமைத்து அங்கு அனைத்து மாணவர்கள் இலவசமாக தங்கவும், அவர்களுக்கு உணவு வசதியை ஏற்படுத்தித்தரவும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மனித மிருகங்களால் கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமாரின் தாயாரிடமும், தம்பியிடமும் தொலைபேசி வாயிலாகப் பேசினேன்; என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
தம்பி அஜித்குமார் கொலைக்கான நீதியைப் பெற்றுத் தர நிச்சயம் @AIADMKOfficial துணை நிற்கும்!
#JusticeForAjithkumar
முதல்வர் @mkstalin-ன் தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்!
கொலை செய்தது உங்கள் அரசு.
"SORRY" என்பது தான் உங்கள் பதிலா?
அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது.
அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு?
முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட க��ற்ற உணர்ச்சியே இல்லையே?
"என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே... போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ?
வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்?
அஜித்குமார் இற���்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த ��ிறகு FIR, கைது எல்லாம் நடக்கிறது.
உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?
"நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!
இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி!
#JusticeForAjithkumar
#NationWithAjith
@AIADMKOfficial
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எத்தனை விபத்துகள்?
எத்தனை உயிர்கள்?
இன்னும் எத்தனை முறை தான் நான் சுட்டிக்காட்ட வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு?
பளபளக்கும் போட்டோஷூட் வீட்டுக்கு சென்றவர், ஒருமுறை உண்மையான பட்டா���ு ஆலைக்கு சென்று ஆய்வு செய்��ிருந்து பாதுகாப்பு குறித்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தால், இவ்விபத்தை தடுத்திருக்கலாம் அல்லவா?
பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யாமல், தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளை கண்டுகொள்ளாத ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சின்னக்காமன்பாட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
முந்தைய மூன்று ஆண்டுகள்
#NITIAayog கூட்டங்களை
"தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என
வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை.
உங்கள் குடும்பம் தானே?
ரெய்டைப் ப���ர்த்து யாருக்கு பயம்?
திரு. @mkstalin அவர்களே-
அது கண்ணாடி! …
உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு
வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் ,
உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை
தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ்
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எதிர்க்கட்சியாக கருப்பு பலூன்
காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக
வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எது ஸ்டாலினின் கை?
அண்ணா பல்கலை. வழக்கில்
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.
ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!
ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.
அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.
தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!
7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!
அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!
கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!
இதற��கெல்லாம் பின்னர் வருவோம்...
நான் கேட்ட கேள்வி என்ன?
#யார்_அந்த_தம்பி ?
உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?
உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும்
ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?
டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.
உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்!
உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!
ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
மீண்டும் கேட்கிறேன்- #யார்_அந்த_தம்பி?
@arivalayam
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உ��ைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது.
பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த எனது மோட்டார் ரேசிங் நண்பர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ரைஃபிள் ஷூட்டிங் நண்பர்களுக்கும் நன்றி. மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC), இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (FMSCI), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் மற்றும் சென்னை ரைஃபிள் கிளப் ஆகியவை ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும்தான் எனது பலம். நன்றி!
இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பத���ல் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி! சி���ப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள்.
எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும் ஆதரவுமே என்னை அர்ப்பணிப்புடன் இருக்க உந்துகிறது. இந்த விருது என்னுடையது போலவே உங்களுக்கும் உரியது.
இந்த கெளரவத்திற்கும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவருக்கும் நன்றி. நேர்மையுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து செயல்பட நான் உறுதிபூண்டுள்ளேன். என்னுடைய பயணத்தில் நான் உற்சாகமாக இருப்பதைப் போலவே உங்கள் அனைவரது பயணமும் உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்!
நன்றியுடன்,
அஜித் குமார்
இந்திய திருநாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது தனத�� #விடாமுயற்சி -யினால் தொடர் உழைப்பால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் #Ajithkumar�� அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக���்! பாராட்டுகள்! இன்னும் பல விருதுகளும், வெற்றிகளும் தேடி வரட்டும்! 🏎️👏💐
#PadmaAwards
#PadmaBhushanAward