ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கும் 24 மணி நேரம் ஒரு பொக்கிஷம். அதை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேற முடியும். காலையில் சீக்கிரம் எழும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அன்றைய பணிகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
தினமும் குறைந்தது 30min புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
நாடு முழுவதும் வரும் ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை அன்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
#PolioFreeIndia
நாளை சனிக்கிழமை 20.06.2026 புரிசை துணைமின் நிலைய பராமரிப்பை முன்னிட்டு காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என வந்தவாசி மின்சாரவாரியம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் புது டெல்லியிலுள்ள தேசிய நாடக பள்ளியின் மாணவர்கள் திரௌபதை வஸ்திராபரணம் அல்லது பகடை துயில் என்ற தெருக்கூத்தினை அரங்கேற்றம் செய்ய உள்ளனர். அனைவரையும் வரவேற்கிறோம்.
மே 27, 2026 மாலை 7மணி
கூத்து மேடை, புரிசை கிராமம்,
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தில், மாண்புமிகு முக்கூர் N.சுப்பிரமணியன், அவர்கள், செய்யாறு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
#TNAssembly
நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செய்யார் தொகுதியில் முக்கூர் N சுப்பிரமணியன் அவர்கள், 85939 வாக்குகள் பெற்று 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்.