தவறுதலாகவோ, கவண குறைவினாலோ எனது வங்கி கணக்கில் RTGS பண்ணி இருக்கின்றனர்
கீழ் கண்ட வங்கி கணக்கினர் முறைபடி திரும்ப தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்!
தலைமைக்கழக அறிவிப்பு
ஊடக விவாதங்களில் கழகத்தின் சார்பில் செய்தி தொடர்புக் குழுவினர் கலந்து கொள்வதையும், பல்வேறு விவகாரங்களில் கழகத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களில் தெளிவுபடுத்திடும் பணிகளையும் ஒருங்கிணைத்திட வழக்கறிஞர் பரந்தாமன், டாக்டர் ஹபிசுல்லா, ச��ர்யா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்
தலைமைக் கழகம்
தி.மு.க.
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற��கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
நம் உயிருக்கு நிகரான கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. குடியிருப்பு இல்லங்களில், தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னணியினருடன் சென்று கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் ��ூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
#KalaignarForever
கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளி வளாகம் குழந்தைகளின் சிரிப்பாலும் உற்சாகத்தாலும் நிரம்பவிருக்கிறது.
புது பு���்தகங்கள், புது நண்பர்கள், புது கனவுகள் என இந்தக் கல்வியாண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சியும் சாதனைகளும் நிறைந்த புதிய பயணமாக அமையட்டும்.
விடுமுறை கதைகளைக் கேட்டு, குழந்தைகளை மீண்டும் கற்றல் சூழலுக்குள் மகிழ்ச்சியோடு அழைத்துச் செல்லவுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். 🌸📚✨
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever