சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள் சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை தங்களது விளம்பர தூதர்களாக பயன்படுத்தி இந்தியா போன்ற வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் பெண்களையும் சிறுவர்களையும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறார்கள்,அதற்கு துணைப் போகும் தமிழ்த�� திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள்,நடிகர் நடிகைகள் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் திரைப்படங்களுக்கு சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள் முதலீடு செய்வது வெளிப்படையாக தெரிகிறது.
அடுத்த தலைமுறையை பாழாக்கும் சினிமாக்கள் ஒழிய வேண்டும்.பெற்ற பிள்ளைகள் சீரழிந்து நிற்பதனை எண்ணி துடிக்கும் தாய்மார்களின் வயிற்றெறிச்சல் உ��்களை எல்லாம் சும்மாவிடாது.
இன்று(26/8/26) சென்னை கலைவாணர் அரங்கில் கல்வித் தந்தை ��ுன்னாள் அமைச்சர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளை உள்ளம் கொண்ட விஐடி வேந்தர் ஐயா உயர்திரு G.விசுவநாதன் அவர்கள் தலைமையில், தமிழக அரசியலில் பேராளுமையாக விளங்கிய முன்னாள் அமைச்சர் முன்னாள் சபாநாயகர் மறைந்த க.ராசாராம் ஐயா அவர்களின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற இனியத் தருணம்.
இந்நிகழ்ச்சியில் சபாநாயகர்
உயர்திரு J.C.D.பிராபகரன் அவர்கள் மற்றும் வருவாய்துறை அமைச்சர் உயர்திர��� K.A.செங்கோட்டையன் அவர்கள் முன்னாள் அமைச்சர் ��யர்திரு திருநாவுக்கரசர் அவர்கள் மற்றும் புதிய நீதி கட்சியின் தலைவர் உயர்திரு A.C.சண்முகம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“பத்த வெச்சு புகை இழுத்தா பவர் கிக்” னு பாடி இளைஞர்களிடம் போதைப் பழக்கத்தை ஊக்குவித்த பாவத்திற்கு 3கிமீ இல்லை 3000கிமீ ஓடினாலும் தண்டனை நிறைவடையாது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் விதமாக உள்ளது உங்கள் செயல். முதலில் இப்படியெல்லாம் பாடி சமூகத்தை சீரழித்ததற்கு பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்கள் திரு விஜய் அவர்களே,பிறகு போதைப் பழகத்தை எதிர்த்து பேசும் தகுதியை குறைந்தபட்சமாவது பெறுவீர்கள்.
-
மூ.ராஜேஸ்வரிபிரியா
அனைத்து மக்கள் அரசியல் கட்சி
தலைவர்
இன்று (31/05/2026) லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாட்டு பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் பாசத்திற்குரிய அருமை அண்ணன் திரு நெல்லை ஜீவா அவர்கள் மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு வருகை புரிந்தார்.
லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளராக தங்களது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்த���கள்.
கருப்பு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் போதை மாத்திரை பயன்படுத்துவது போல இயக்கி நடித்திருக்கும் RJ பாலாஜி @RJ_Balaji அவர்களே இந்த காட்சி அம்சம் அவ்வளவு அவசியமா அதோடு மட்டுமில்லாமல் போதை மாத்திரையை promote செய்து வசனம் வேற வைத்துள்ளீர்கள், ஏன் இப்படி செய்கிறீர்கள்? ஒரு நல்ல சமூக க��ுத்துடன் இந்த படத்தை எடுத்திருந்தாலும் இன்று பிஞ்சு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக காரணம் இந்த போதைப்பொருட்கள்தான் அதனை ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்?
சினிமாவ சினிமாவா பார்க்கனும்னு யாராவது வந்து கருத்து தெரிவித்தால் எப்படி விஜய் சார் CM ஆனார்னு கேட்பேன்.
மூ.ராஜேஸ்வரிபிரியா
அனைத்து மக்கள் அரசியல் கட்சி
தலைவர்
நேற்று வரை ஏதோ சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டும் போதுமா பொதுக்குழுவை கூட்டி தான் முடிவெடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசி வந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட மாவட��ட கழக செயலாளர்களின் பதவியை பறித்துள்ளார்.
ஏற்கனவே நடந்த கடந்த கால நிகழ்வுகளில் தனக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஒரு சில மாவட்ட செயலாளர்களை நீக்கி வந்த நிலையில் இன்று கூண்டோடு மாவட்ட செயலாளர்களை நீக்கியுள்ளார்.
இத்தகைய முடிவுகளை பொதுக்குழுவைக் கூட்டி ஜனநாயக முறையில் முடிவெடுக்காமல் தான் தோன்றித்தனமாக கட்சியை அபகரிக்கும் நோக்கில் செயல்படுவது முறை அல்ல.
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களால் கட்டிக் காத்த இயக்கம் இன்று தனி மனித விருப்பு வெறுப்புகளால் பாதிப்படைந்துள்ளது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது.
இன்று தாங்கள் நீக்கியுள்ள மாவட்டச் செயலாளர்கள் இல்லையென்றால் தாங்கள் கடந்த காலத்தில் வகித்த முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ தற்போது வகித்து வரும் பொதுச் செயலாளர் பதவியோ தங்களுக்கு இல்லை என்பதனை சற்று சிந்திக்க வேண்டும்.
நன்றி மறப்பது நன்றன்று.
-
மூ.ராஜேஸ்வரிபிரியா
அனைத்து மக்கள் அரசியல் கட்சி
தலைவர்
���ாற்றத்தை நம்பி மக்கள் சினிமா கதாபாத்திரங்களாக மாறி உங்களுக்கு வாக்களித்துள்ளனர் நீங்கள் உண்மையானவராக நடந்து மக்கள் பிரச்சினைகளை புரிந்து நிர்வாகத் திறனோடு செயல்படுங்கள். வாழ்த்துகள் விஜய் சார்……
இன்று (09/04/26) விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் பாசமிகு அண்ணன்
திரு விருகை V.N.ரவி அவர்களுக்கு
வாக்களிக்குமாறு மக்களை நேரில் சந்தித்து திமுக ஆட்சியின் அவலங்களான பெண்களுக்கு பாதுகாப்பின்மை ,போதை கலாச்சாரம் ,சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றை எடுத்துரைத்து ஆட்சி மாற்றம் அவசியம் என்பதனை விளக்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இனியத் தருணம்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்று தடையை மீறி முற்றுகை.. காவல் வாகனத்தில் ஏற்ற முயன்ற போது போலீசாருடன் ராஜேஸ்வரி பிரியா வாக்குவாதம்..!
#Chennai | #RajeshwariPriya | #Police | #Arrest | #PolimerNews
தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், தூத்துகுடி விளாத்திகுளம் பகுதியில் +2 மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கபட்டு கொலை செய்யபட்ட சம்பவத்தில் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காத காவல்துறையை கண்டித்தும் தலைமை செயலகத்தை முற்றுகையி்ட வந்த அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா உட்பட நூற்றுக் கணக்கான மகளிர் அணியினரை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.
@EPSTamilNadu@NainarBJP@AIADMKITWINGOFL@ADMK4Us@DrTamilisai4BJP
இன்று(9/3/26) திருச்சியில், நம் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 11ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான NDA கூட்ட���ி மாநாட்டில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் பாசமிகு அண்ணன் பாஜக மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் MLA அவர்கள் மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களு��ன் ஆலோசனையில் ஈடுபட்ட தருணம்.
நம் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ��வர்கள் மார்ச் 11ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான NDA கூட்டணி மாநாட்டில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நம் NDA கூட்டணி தோழமைக் கட்சிகளில் ஒன்றான அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமதி. @Rajeswaripriya3 அவர்களும் கலந்து கொண்டு தன் பங்களைபை வழங்கினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ���ிரு. @KaruppuMBJP அவர்கள் மற்றும் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
வருகின்ற 27/2/26 வெள்ளி கிழமை அன்று (சென்னை ,கோவளம் ஏரோடான் ஹெலி ஸ்டேஷன்) அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் நடைபெறவிருக்கும் மாபெரும் பெண்கள் பாதுகாப்பு மாநாட்டிற்கு அனைவரும் வாரீர்!!
பா.ஜ.க இளைஞர் அணி சார்பாக இன்று சென்னையில் நடைபெற்ற, தமிழகத்தில் பரவி வரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த நடைபெற்ற மாபெரும் எழுச்சி போராட்டத்தில் இணைந்து, இளைஞர்களின் நலனையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கத் தங்களது வலிமையான ஆதரவை வெளிப்படுத்திய அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் திருமதி.@Rajeswaripriya3 அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#DMKAgainstYouth
இரவில் விழித்திருந்து
பகலில் பசித்திருந்து
எல்லாம் வல்ல இற���வனை வணங்கும்
என் இனிய இசுலாமிய சொந்தங்களுடன் புனித ரமலானை வரவேற்கிறேன்.
-
மூ.ராஜேஸ்வரி பிரியா
நிறுவனத் தலைவர்
அனைத்து மக்கள் அரசியல் கட்சி
இன்று (16/02/2026) சென்னை வடபழனியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாசத்திற்குரிய அண்ணன் திரு ரவி பச்சமுத்து அவர்களுக்கு சென்னை, கோவளம் ஈசிஆர் சாலையில் நடைபெறவிருக்கும் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் பெண்கள் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த இனியத் தருணம். @RaviPachamuthu
இன்று (16/02/2026) சென்னை ஆழ்வார்பேட்டையில் த��ிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு G.K.வாசன் MP ஐயா அவர்களுக்கு வருகின்ற 27.02.2026 நடைபெறவிருக்கும் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் பெண்கள் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த இனியத் தருணம்.
இன்று 16.02.2026, திங்கட்கிழமை, காலை, சென்னை, ஆழ்வார்பேட்டை, #தமாகா(மூ) தலைமை அலுவலகத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனர், தலைவர் திருமதி. மூ.ராஜேஸ்வரி பிரியா அவர்கள் நிர்வாகிகளுடன் சந்தித்து மாபெரும் பெண்கள் பாதுகாப்பு மாநாடு அழைப்பிதழ் கொடுத்து பேசியபோது
@Rajeswaripriya3
நேற்று(8/2/26) அம்மா திடல், திருத்தங்கல், சிவகாசியில் அருமை சகோதரர்
திரு.பந்தல் ராஜா (மாநில பொதுச் செயலாளர், வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்) அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்து பிள்ளைமார் சங்க அரசியல் அங்கீகார மாநாட்டில் பங்கேற்ற தருணம்.