கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
அமமுக தலைவருக்குத் தெரியாமலேயே அதன் புதிய MLA ‘ண்ணா’ விற்கு ஆதரவளித்துள்ளதாக இப்போது தினகரன் பேட்டி.
அமமுக MLA… ஒன்று விலைபோயிருக்க வேண்டும்… அல்லது தவக அந்த கடித்த்தை ஃபோர்ஜரி செய்திருக்க வேண்டும் என தினகரன் அறிவித்துள்ளார்.
அதனால் தற்போது கவர்னரை சந்தித்து… தனது எடப்பாடி ஆதரவு கடிதத்தை அவரிடம் அளித்துள்ளார்.
இதில்… அமமுக MLA மாலையிலிருந்து கட்சி தலைவரால் நாட் ரீச்சபிளாம்🤣
தமிழக வெற்றி கழகம் தீயசக்தி மட்டுமில்லாமல் சாத்தான் சக்தியாக மாறிவிட்டது 😭
தவெக ஆட்சி அமைப்பதை பாஜக தடுப்பதாக காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் கூறுவது முற்றிலும் தவறானது. சட்டவிதிகளுக்கு உட்பட்டே தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர அர்லேகர் செயல்பட்டு வருகிறார்.
நடிகருக்கு நன்றாக நடிக்கத் தெரியும் என்பதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் நன்றாக கதையும் எழுத தெரியும் என்பது இப்போது தான் தெரிகிறது.
இவ்வளவு கட்டுக்கதைகளை உருவாக்க தெரிந்த நடிகர் ஏன் ஒரு படத்திற்கு கூட கதை வசனம் எழுதாமல் நடிக்க மட்டும் செய்தார்?
அரசியலை சினிமாவாகவும்,
சட்டமன்றத்தை சினிமா தியேட்டராகவும் மாற்ற நாலாந்தர பத்திரிக்கையாளர்கள் வழியே செய்யப்படும் தரமற்ற சூழ்ச்சி.
ஊடக மாண்பை குலைத்து இப்படி நாலாந்தர தரகு வேலை பார்க்க கூச்சமாக இல்லையா??
அஇஅதிமுக எனும் பெரியக்கத்தின் நிரந்தர எதிரி திமுக
ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மலிவான விளம்பரம் தேடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் கட்சியால் பலன் கிடைக்கும் என்ற இந்த நாலாந்தர செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
நாலாந்தர கும்பல்களின் நாலாந்தர செயல்களை புறந்தள்ளி நடைபோடுவோம். நம் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சி ஒன்றே.
2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ. 397 கோடி மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
On behalf of the people of TN, we sincerely thank our Hon PM Thiru @narendramodi avl and our Hon Commerce Minister Thiru @PiyushGoyal avl for delivering a once-in-a-generation India–New Zealand Free Trade Agreement that strengthens India’s global trade standing.
This agreement gives Indian exporters 100% duty-free access to New Zealand across 8,284 products, and the goal is to double bilateral trade to about $5 billion in 5 years.
For India’s textile, leather, handloom, and engineering sectors, this means lower costs, better competitiveness, and more export orders.
The deal is especially valuable for TN because labour-intensive sectors like textiles and leather, which earlier faced tariffs, now get a major advantage in a premium market. It also opens up stronger opportunities for MSMEs, exporters, and skilled professionals from our state.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளைய தினம் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நாள் என்பது, நல்லாட்சியை தேர்வு செய்யும் மக்களின் சக்தியை முறையாகப் பயன்படுத்தும் நாள். ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
கடுமையான வெயில் நிலவி வரும் இந்த நாட்களில், பொதுமக்கள் தங்கள் வாக்குகளை காலை அல்லது மாலை நேரங்களில் பதிவு செய்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் மதிய நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டியவர்கள், குடை பயன்படுத்துவது அவசியம்.
வாக்களிப்பது, ஒவ்வொரு குடிமகனின் உரிமை மட்டுமல்ல. ஜனநாயகக் கடமையும் கூட. ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்போம். தவறாமல் வாக்களிப்போம்.
கடந்த 5 ஆண்டுகளாக, தமிழகத்தில் இரண்டு விஷயங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. முதலாவது, ஒரு குடும்பத்தின் சொத்துமதிப்பு. இன்னொன்று தமிழகத்தின் கடன். திமுகவின் முதல் குடும்பங்கள் பணக்காரர்களில் பணக்காரர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் கடன் அதிகரித்து வருகிறது.
திமுகவின் கொள்கையே, ஒரே குடும்பத்திற்காக, ஒரே குடும்பத்தினர், ஒரே குடும்பத்தை வளர்க்கவேண்டும். முதல்வர் அதே குடும்பம், துணை முதல்வர் அதே குடும்பம், டெல்லியில் நிரந்தர எம்பி அதே குடும்பம், படங்கள், மீடியாக்கள் என அனைத்தும், ஒரே குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது - கோவையில் இன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @NarendraModi அவர்கள் நாளை கோயம்புத்தூரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
ஊழலில் மூழ்கிய, பெண்களுக்கு எதிரான திமுக அரசை நிராகரிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
பிரதமர் திரு. மோடி அவர்கள் மீதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் மக்கள் வைத்திருக்கும் நேசம், மாற்றத்திற்கும் நல்லாட்சிக்கும் அவர்கள் கொண்டுள்ள விருப்பத்தின் தெளிவான சான்றாகும். தொடர்ந்து இணைந்திருங்கள்!
PM Narendra Modi ji will address a public meeting in Coimbatore tomorrow.
The people of Tamil Nadu have made up their minds to reject the corruption-ridden, anti-women DMK government.
The affection for PM Modi ji and the NDA is a clear testament to the people's desire for change and better governance. Stay tuned!