அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் “நலம் TN” என்ற தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வ��� செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-II) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
தூத்துக்குடி மாவ��்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன் அவர்கள், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.
அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்.
#CMJosephVijay
ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, விளையாட்டின் மீதான ஆர்வத்தால் முதலில் கால்பந்து விளையாடி பிறகு கிரிக்கெட் பக்கம் திரும்பி... இன்று உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிற, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், என்றும் தமிழ்நாட்டின் அன்பு 'தல' திரு. மகேந்திர சிங் தோனி @msdhoni இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நாம் விரும்பிய துறையை ���ேர்ந்தெடுத்து அதில் ஆர்வமாகவும் கடுமையாகவும் உழைத்தால் உலகமே நம்மை கொண்டாடும் என்ற உண்மையை நம் கண் முன்னே நிகழ்த்தி வருபவர் மகேந்திர சிங் தோனி.
இன்றைய இளைஞர்கள் தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்!
@tvkvijayhq | @tvkitwingofficial
#tvk | #tvkvijay | #HBD_MSD
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ��ாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது
1. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
2. திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம்
3. திருநெல்வேலி மத்திய மாவட்டம்
4. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
5. திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம்
ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார��ந்த வாழ்த்துகள்.
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.
மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay
#NationalDoctorsDay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களின் தலைமையில் தமிழகம் ஒரு புதிய பொற்காலத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைத்துள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் புரட்சிகரமான மாற்ற���்கள் அனைத்தும் என்றும் நீடித்திருக்கக் கூடிய புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையும், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய உங்களின் சிந்தனைகள் என்றும் போற்றத்தக்கவை.
நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆ��ுளுடனும் வாழ்ந்து, நம் மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் உன்னதப் பணியில் உங்களோடு இணைந்து பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
வாழ்க தளபதி! வாழ்க வெற்றித் தலைவர்!
நம் தளபதி… நம் தலைவர்… தமிழக மக்களின் நம்பிக்கை! தமிழ்நாட்டின் எதிர்காலம்!
இனிய பிறந்தநா��் நல்வாழ்த்துகள் தளபதி!
#HBDCMJosephVijay
@TVKVijayHQ
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமத��� திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
My heartfelt birthday greetings to Tmt. Droupadi Murmu, Hon'ble President of India.
On this special occasion, I extend my sincere wishes for your good health and continued success in your dedicated service to the nation.
#CMJosephVijay
@TVKVijayHQ
@rashtrapatibhvn
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
"வைகை வடகரை ஒலி & ஒளி பெருக்கி அமைப்பாளர்கள் நலச்சங்கத்தின்" அலுவலகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி.
சங்கத்தின் வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் தலைவர் தளபதியின் தலமையிலான ஆட்சி என்றும் துணை நிற்கும். உழைக்கும் தொழிலாளர்களின் நலன் காப்போம்!
@CMOTamilnadu | #மதுரைவடக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (20.05.2026) காலை சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களிடம் உஷ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்டில் நடைபெற்ற 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆச��ய குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு வீரர் சாஸ்தா வசந்த் அவர்கள்
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்ற�� (19.05.2026) தலைமைச் செயலகத்தில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு பணி ஒதுக்கீடு பெற்ற இந்திய ஆட்சிப் பணி பயிற்சி அலுவலர்கள் திருவாளர்கள் அமன் திவாரி,
1/2