My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
Congratulations to my friend, actor izhaya thazhapathy , then thazhapathy , now the youngest leader, Our Honourable Chief Minister Of TamilNadu @TVKVijayHQ sir 🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐💐Happy seeing U sitting on THE CHAIR 🥰🥰🥰🥰🥰sjs
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம். உடன் மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
Congratulations to the entire state of Tamil Nadu , @TVKVijayHQ party and @actorvijay annan!! Politics looks very colourful and vibrant now!!
Nalla irupom ,nalla irupom, ellarum nalla irupom!!🙂🙂
#TVKVijay#TVK#tn
எத்தனை எத்தனை சோதனைகள்!
எத்தனை எத்தனை வலிகள்!
எத்தனை எத்தனை போராட்டங்கள்!
தமிழக மக்களின் நலனுக்காக அனைத்தையும் தாங்கி, தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், நம் தலைவர் தளபதி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தமிழக வெற்றிக் கழகத்தை ஏளனமாக பார்த்த பலரும், இன்று தங்களின் மாபெரும் வெற்றியை கண்டு வியப்பில் வாய் அடைத்து போயுள்ளனர்.
இந்த வெற்றி ஒரே நாளில் கிடைத்ததல்ல; கடந்த 33 ஆண்டுகளாக தாங்கள் காட்டிய அர்ப்பணிப்பு, தொலைநோக்கு பார்வை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் பயணத்திற்கு கிடைத்த மகத்தான அங்கீகாரமாகும். இது தங்களின் தனிப்பட்ட வெற்றியை தாண்டி, தமிழக மக்களின் நம்பிக்கைக்கும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பிற்கும் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்.
தங்களின் தலைமையில் தமிழகம் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனில் ப���திய உச்சத்தை அடையும் 💪 கட்சியின் ஒரு சட்டமன்ற உறுப்பினராக, தங்களின் மேற்பார்வையிலும், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மக்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்பதை உறுதியளிக்கிறேன்.
தங்களின் தலைமையில் தமிழகத்தின் பொற்காலம் தொடங்கட்டும்; தமிழக மக்களின் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்.
மேலும், இந்த வெற்றியின் இறுதிக்க���்டத்தில் உறுதுணையாக நின்ற கூட்டணி கட்சிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி தமிழக வெற்றிக் கழகத்தை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது! நாளை முதல்வராக பொறுப்பேற்கும் உங்களின் தலைமையில் தமிழகம் புதிய வரலாறு படைக்கட்டும் ❤️
டாக்டர். TK. பிரபு
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழை���்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட��சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அ���சியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் ��மிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்ப���ல் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காலரை தூக்கி பெருமையாக சொல்வேன். நான் TVK காரனென்று. தலைவர் தளபதி அண்ணன் விஜய் அவர்களின் தம்பி என்று. இவ்வளவு பெரிய வெற்றியை சாத்தியமாக்கிய தலைவர் தளபதி அவர்களுக்கும், நம் கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றி 🙏
நீங்கள் இன்று எழுதிய அழிக்கமுடியாத வரலாறால், உங்களுடன் பயணித்த எங்களுக்கும் பெருமை சேர்த்து விட்டீர்கள்.
என் பேனா இதைவிடப் பெருமை கொண்ட தருணம் இருக்கப் போவதில்லை. வாழ்த்துகள் CM .. வாழ்த்துகள் என்னுயிர் தளபதீ🔥🔥🔥
@actorvijay