முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில் 4 எம்.எல்.ஏ-க்களாக இருந்த தமிழக பாஜகவை, தனது 'மிகச்சிறந்த' வழிகாட்டுதலால் ஒரே ஒரு தொகுதிக்கு சுருக்கி, தமிழ்நாடு மக்களால் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு செல்லப்பட்ட தலைமைக்குச் சொந்தக்காரர் அண்ணன் @NainarBJP . கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையும்கூட இனி தக்கவைக்க முடியாத நிலையில் இருப்பவர், இன்று மேடைக்கு மேடை "நாட்டில் காங்கிரஸை ஒழிப்போம்" என்று சவடால் விடுவது தமிழக அரசியலின் மிகப்பெரிய நகைச்சுவை! 2014-ல் பிரதமர் மோடியே ஆரம்பித்து வைத்து, பின்னர் அவரே க���விட்ட பழைய முழக்கத்தை இப்போது கையில் எடுத்திருக்கும் அண்ணன் நயினார் அவர்களே, தேசிய அளவில் காங்கிரஸ் உங்களை ஏறக்குறையத் தோற்கடித்ததையும், வாக்குத் திருட்டு மற்றும் குளறுபடிகள் மூலமே நீங்கள் ஆட்சியைப் பிடித்தீர்கள் என்பதையும் நாடே அறியும்!
உண்மையில் மற்ற கட்சிகளை ஒழிப்பதும், உடைத்துச் சின்னாபின்னமாக்குவதும் பாஜகவின் வாடிக்கை என்பதை இந்திய வரலாறு முழுக்கப் பார்க்க முடிகிறது. மகாராஷ்டிராவில் தோளோடு தோள் நின்ற சிவசேனாவை இரண்டாக உடைத்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸை துண்டாடி, பீகாரில் லோக் ஜனசக்தி கட்சியைக் கூறுபோட்டு, மேற்கு வங்கத்திலும் பிளவை ஏற்படுத்திய பாஜகவின் அரசியல் வரலாறு துரோகமும் சூழ்ச்சியும் நிறைந்தது. தமிழ்நாட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி என்ற பெயரில் உள்ளே நுழைந்து, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அக்கட்சியைப் பல துண்டுகளாகச் சிதறடித்து, 2026 தேர்தலில் அதிமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழக்க வைத்தது இதே பாஜகதான்.
இரண்டு பூனைகளுக்கு இடையே கிடைத்த உணவைச் சமமாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறி, கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவிட்டு, கடைசியில் மொத்த உணவையும் தானே விழுங்கி ஏப்பம் விட்ட தந்திர நரியின் கதைதான் பாஜகவின் 'பிரித்தாளும் சூழ்ச்சி'. கூட்டணி என்ற பெயரில் மிகச் சாதுவாக மாநிலக் கட்சிகளின் வீட்டிற்குள் நுழைந்து, 'சந்திரமுகி' திரைப்படத்தில் காசி மாலையையும் ஒட்டியாணத்தையும் பார்த்ததும் கங்கா திடீரெனச் சந்திரமுகியாக உருமாறி, "இந்த மாளிகையும் எனக்குத்தான், இந்த சிம்மாசனமும் எனக்குத்தான், உன்னை அழிக்காமல் விடமாட்டேன்" என்று ஆக்ரோஷம் காட்டுவதைப் போல, உள்ளுக்குள் கலகத்தை மூட்டி, அதிகார அமைப்புகளைக் காட்டி அழுத்தம் கொடுத்து, அந்தக் கட்சிகளின் வேர்களை அறுத்து, கடைசியில் அந்த இடத்தில் தான் அமரத் துடிக்கும் அரசியலையே பாஜக நாடு முழுவதும் அரங்கேற்றி வருகிறது.
அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு இப்போது திமுகதான்! நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையா�� மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு ஆளுங்கட்சிக்கு இன்னும் சுமார் 30 எம்பிக்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், திமுகவின் 22 எம்பிக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அமித் ஷாவும், அமலாக்கத்துறையும் சேர்ந்து நடத்தும் திரைமறைவு ஆட்டம் விரைவில் அம்பலமாகப் போகிறது. இதே தொகுதி மறுவரையறைக்காக திமுக கருப்புக் கொடி ஏற்றியபோது, "டெல்லிக்கு எதிராகப் போராடுகிறோம் என்று சொல்பவர்கள் பழையபடி ரவுடியிசம் செய்யப் போகிறார்களா? இது திமுகவின் ஏமாற்று வேலை" என்று 2026 ஏப்ரலில் ஆக்ரோஷமாகப் பேட்���ி கொடுத்த இதே அண்ணன் நயினார் நாகேந்திரன்தான், இன்று 2026 தேர்தலில் தோல்வியடைந்து பலவீனமாக இருக்கும் திமுகவின் காயங்களுக்கு மருந்து போடுவதாக உருகுகிறார்! அந்த அழுத்தத்தின் விளைவாகத்தான், "நியாயமான தொகுதி மறுவரையறை" எனத் திமுகவும் மாறி, முதலமைச்சர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து, டெல்லியுடன் ரகசியக் கணக்குப் போடுகிறது. கூட்டணி என்ற வலையை விரித்து, நாளை திமுகவையும் இதேபோலப் பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்கப் பாஜக காய்நகர்த்தி வருகிறது.
"தூங்குறவனை எழுப்பிடலாம், ஆனா தூங்குற மாதிரி நடிக்க��றவனை யாராலும் எழுப்ப முடியாது" என்பார்களே, அது நம்ம அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்! திமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, "ஆதாரமில்லாமல் எதையும் சொல்ல முடியாது" என்று இவ்வளவு சாதுவாக நழுவுகிறீர்களே அண்ணா, நீங்கள் தெரிந்தே பொய் சொல்கிறீர்களா, இல்லை உண்மையிலேயே எதுவுமே தெரியாதது போல நடிக்கிறீர்களா? உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், "திமுகவுடன் ப��ஜக ஒருபோதும் கூட்டணி வைக்காது; அப்படி கூட்டணி அமைந்தால் நான் எனது கூட்டணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்" என்று பொதுவெளியில் அறிவிக்க முடியுமா? முதலில் தமிழ்நாட்டில் உங்களை 4-லிருந்து 1-ஆகச் சுருக்கிப் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார்கள் மக்கள்—கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையாவது தக்கவைக்கப் பாருங்கள் அண்ணே.
எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை.
திருமதி சோனியா காந்தியிடமிருந்து ஒரு அழைப்பு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
திரு.ராகுல் காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது.
திரு விஜய் அழைப்பை ஏற்று வந்தார்.
அதுதான் நடந்த உண்மை.
இதை மாற்றி, பொய்யான கதைகளை உருவாக்கி பரப்ப வேண்டாம், JV.
Fake News-ஐ தொடர்ந்து பரப்பினால், ஒரு நாள் அந்தப் பொய்யே உங்களை ‘நக்கீரன்’ ஆக்கிவிடும்!
உண்மையை எழுதுங்கள்.
உண்மையை மட்டுமே எழுதுங்கள்.
@JuniorVikatan
#FakeNews
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் (மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை) தங்களது நியாயமான உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் அமைதியான முறையில் போராடிய விவச��யிகள் மற்றும் ஆசிரியர்களின் குரலுக்குச் செவிசாய்க்காமல், அவர்களை ஒடுக்கும் நோக்கில் வழக்குகள் பதியப்பட்டு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. உழைக்கும் மக்களுக்கும் அறிவொளி ஊட்டும் ஆசிரியர்களுக்கும் எதிரான திமுகவின் அந்த அணுகுமுறையை மாற்றி, தற்போது அவ்வழக்குகளைத் திரும்பப் பெற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதை மனமார வரவேற்கிறேன்.
கடந்த 02.09.2026 அன்று தமிழ்நாட��� சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மொத்தம் 600 வழக்குகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 92,000-க்கும் மேற்��ட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் திமுக ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கும், எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்கும் காங்கிரஸ் பேரியக்கம் எப்போதும் உறுதுணையாக நிற்கும். ஜனநாயக வழியில் போராடும் உழைக்கும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை, உழவர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
#TNCongress @CMOTamilnadu
காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு நேற்று நான் எழுதியுள்ள விரிவான கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
மைசூருவில் நவம்பர் 13 அன்று பிரதமர் முன்னிலையிலேயே, “மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்��� முடியாது; ஒன்றிய அரசு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும்” என கர்நாடக முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் பேசியதும், அதற்குப் பிரதமர் மௌனம் சாதித்ததும் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தில் ஒன்றிய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு (2007) மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்பட�� (2018), இயல்பான ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 404.25 டி.எம்.சி. நீரும், அதில் கர்நாடகா மாதாந்திர அட்டவணைப்படி ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீரையும் திறந்துவிட வேண்டும். கீழ்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் முழுமையான ஒப்புதல் இன்றி மேல்படுகை மாநிலம் எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்பது சட்டப்பூர்வமான விதியாகும்.
ஏற்கனவே ஜூலை 27, 2026 அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர், “கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை” எனப் பதிலளித்ததைத் தொடர்ந்து, ஜூலை 28 அன்று நான் மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர ந��ட்டீஸ் அளித்தேன்.
கடந்த 5 மாதங்களில் (ஜூலை முதல் நவம்பர் 2026 வரை) மட்டும் காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) பிறப்பித்த குறைந்தது 6 உத்தரவுகளைக் கர்நாடகா தொடர்ந்து மீறியுள்ளது. 3,500 கன அடி, 12,000 கன அடி, 9,000 கன அடி, 6,000 கன அடி, 4,000 கன அடி எனத் திறந்துவிடச் சொன்ன உத்தரவுகளைப் புறக்கணித்ததோடு, நவம்பர் 4 வரை வழங்க வேண்டிய நீரில் 16.895 டி.எம்.சி. தண்ணீரை நிலுவையில் வைத்த��ள்ளது.
கர்நாடகாவின் இந்த தொடர் மீறல்களால் டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். 30 லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்திற்கும், 20 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களின் குடிநீருக்கும் காவிரியே ஜீவாதாரம்.
இந்நிலையில், கிருஷ்ணராஜசாகர் அணையை விடப் பெரியதாக, ரூ.9,000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவில் மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு இயல்பாக வரக்கூடிய சுமார் 80 டி.எம்.சி. உபரி மற்றும் மழை நீர் தடுக்கப்பட்டு, காவிரி டெல்டா வறண்ட பாலைவனமாக மாறிவிடும்.
எனவே, மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்:
1. மைசூரு பேச்சுக்குப் பிறகு எழுந்துள்ள குழப்பங்களைப் போக்கும் வகையில், ஒன்றிய அரசு நடுநிலையோடு செயல்படும் என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக நிலைநாட்டும் என்றும் பிரதமர் பகிரங்கமாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
2. தமிழ்நாடு அரசின் முழுமையான ஒப்புதல் இல்லாமலும், உச��ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவுக்கு வராமலும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எவ்வித சுற்றுச்சூழல், தொழில்நுட்ப அல்லது இறுதி ஒப்புதலையும் வழங்கக் கூடாது என ஒன்றிய நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆணையத்திற்கு (CWC) உத்தரவிட வேண்டும்.
3. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாதாந்திர நீர் பங்கீட்டைக் கர்நாடகா முறையாகப் பின்பற்றி, நிலுவையில் உள்ள தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடுவதை காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் ஒழுங்காற்றுக் குழு (CWRC) மூலம் உறுதி செய்ய வேண்டும்.
காவிரியின் ஒவ்வொரு துளியும் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தனத��� அரசியலமைப்பு கடமையிலிருந்து தவறாமல், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
#TNCongress #Cauvery #Mekedatu
Many congratulations, @BMSandeepAICC! 🎉
Hard work always finds its place in the Congress. As the new AICC In-charge of Telangana, the mission is clear — Mission 2028: win Telangana again and strengthen the Congress in the state.
Wishing you great success in this important responsibility. 🇮🇳✋
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திடும் விதமாக, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள விக்டரி மகாலில் இன்று (14.11.2026) "வாக்கைக் காப்போம் - நாட்டைக் காப்போம்" மண்டல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் மாநகர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளைச் சேர்ந்த மண்டல் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பகுதி தலைவர்கள் எனப் பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்ற இந்தச் சங்கமம், நமது இயக்கத்தின் அடித்தள வல���மையைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
இயக்க மறுசீரமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தொடங்கி வைத்த இம்முகாமிற்கு நான் தலைமையேற்று நிறைவுப் பேருரையாற்றினேன். மண்டல பொறுப்பாளர் திரு. ஆர்.எம். பழனிச்சாமி, Ex.MLA மற்றும் கிளஸ்டர் பொறுப்பாளர் திரு. அ. அமீர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி பெற்ற மண்டல் தலைவர்கள், இனி தங்கள் பகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு கிளை காங்கிரஸ் கமிட்டியை நிறுவி, ஒரு கிளைத் தலைவர், ஒரு பிரதிநிதி மற்றும் ஒரு வாக்குச்சாவடி முகவரை (BLA2) நியமிக்கும் களப்பணியை விரைவில் தொடங்கவுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த மாவட்டத் தலைவர்கள் செயல் வீரர் தம்பி திரு. கே. மகேந்திரன், திரு. டி. குமரன், திரு. எம். மகேந்திரன், திரு. எஸ். பானுசேகர், திரு. நீலன் என். அசோகன், திரு. பி.வி.ஆர். வெங்கட்ரமணன் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் திரு. இராம. சுப்புராம், Ex.MLA, திரு. ஜி.ஆர். சுப்பிரமணியன், திரு. எம். தெய்வேந்திரன், திரு. கே. வீரபாண்டியன், திரு. வி.பி. அண்ணாமலை, திரு. வி.எம். பினுலால்சிங் ஆகியோரின் அயராத உழைப்பிற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
விவசாயிகளும் உழைக்கும் மக்களும் நிறைந்த இந்த மண்ணில் உருவாகியுள்ள இந்த எழுச்சி, எதிர்வரும் தேர்தல்களில் நமது வெற்றிக்கான அச்சாணியாகத் திகழப் போகிறது. கை சின்னத்தின் வலிமையையும், மக்களுக்கான நமது நேர்மையான அரசியலையும் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்து, காங்கிரஸ் பேரியக்கத்தை மீண்டும் அரியணை நோக்கி அழைத்துச் செல்லத் தொ��்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து களமாடுவோம்!
#TNCongress #SSA2 #Thanjavur
மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அவர்கள், "மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடு���்க முடியாது" என்றும், மத்திய அரசு இதற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில் கர்நாடக முதலமைச்சர் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கையாண்டு வருகிறார். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்தப் பேச்சை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாடு ஒரு கீழ்படுகை மாநிலம் என்பதால், நமது உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் கர்நாடகா தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியாது. கீழ்படுகை மாநிலங்களின் முழுமையான ஒப்புதல் இன்றி மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அது டெல்டா மாவ���்ட விவசாயிகளின் வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.
மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க விடாமல் தடுப்பது மத்திய மோடி அரசின் கடமை.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்தத் திட்டத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; நமது மாநில உரிமைகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று போராடுவோம்.
இன்று நான் தஞ்சாவூர் செல்லவிருக்கிறேன்; அங்கு இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச உள்ளேன்.
காவிரி உரிமைக்காகத் தமிழ்நாடு எப்போதும் ஒன்றுபட்டு நிற்கும். தமிழ்நாட்டின் நலனையும், நமது விவசாயிகளின் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க எங்களது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும்.
#TNCongress #Mekedatu
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இயக்க மறுசீரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம், திருச்சி மாநகர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, புதுக்கோட்டை வடக்கு மற்றும் புதுக்கோட்டை தெற்கு ஆகிய ஐந்து மாவட்டங்கள் ஒருங்கிணைந்து, 12.11.2026, வியாழக்கிழமை, புதுக்கோட்டையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பார்வையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ரவிமல்லு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. எஸ். ராஜேஷ்குமார், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழகப் பொறுப்புச் செயலாளர் திரு. நிவேதித் ஆல்வா, இயக்க மறுசீரமைப்���ு (SSA-2) ஒருங்கிணைப்பாளர் திரு. சா. பீட்டர் அல்போ��்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
மண்டலப் பொறுப்பாளர் திரு. எஸ்.டி. நெடுஞ்செழியன், கிளஸ்டர் பொறுப்பாளர் டாக்டர் கே.ஐ. மணிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர்கள் திரு. டி. பென்னட் அந்தோணிராஜ், திரு. எஸ். மணிகண்டன், திரு. கே.ஆர். ராஜலிங்கம், திரு. எல். ரெக்ஸ், திரு. இ.எம். சரவணன் மற்றும் SSA-2 மாவட்டப் பார்வையாளர்கள் திரு. இல. பாஸ்கர், திரு. எம்.எஸ். திரவியம், வழக்கறிஞர் திரு. பி.பி.எஸ். இளையராஜா, திரு. என். தனபால், திரு. பி. சிவசுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.
#TNCongress #SSA2
@nivedithalva