மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
I extend my warmest birthday wishes to former Indian cricket team captain Thiru @msdhoni.
Whether on the cricket field or in real life, the way you handles every situation with calmness, composure, and humility is truly inspiring.
Wishing you good health, happiness, and many more years of success.
#MSDhoni #HBDDhoni
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக 'திராவிடமணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் என் வண��்கத்தைச் செலுத்துகிறேன்.
நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என #DravidianModel ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள��� மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைக��றேன்.
@TVKVijayHQ
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்று��தற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ள���வீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ��தாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு ��ுற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்ற TVK நலத்திட்டவிழாவில் ஒரு மாணவிக்கு வழங்கப்பட்ட காசோலை பித்தலாட்டம் எழுத்தில் இரண்டாயிரத்து ஐநூறு, எண்ணில் ₹5000 என்னங்க தமிழ்நாடு எங்க போகுது..???????
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.��ெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வக��யிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
கடந்த அய்ந்தாண்டு காலத்தில் சீரான வளர்ச்சி பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்தி சென்ற தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!
நன்றி ஸ்டாலின் சார்!
தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது!
தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்ட���யும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன்.
@KanimozhiDMK @geethajeevandmk
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில��� 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவி�� மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம்.
சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், எப்படியும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது மரணச் செய்தி இன்று காலை பேரிடியாக வந்தது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்திற்குரிய இயக்குநர். நம் கழகத் தலைவர் அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்.
எளிய மக்களின் வாழ்க்கையை – உணர்வைப் பிரதிபலித்து, தமிழ்ச் சினிமாவில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்திய பாரதிராஜா சாரின் மறைவு, கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அரங்கிற்குள் இருந்த சினிமாவை வயல்வெளிக்கும் – கடற்கரைக்���ும் – கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற திரையுலக வித்தகர்.
எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் படைப்புகளைத் தந்து, திறமையான கலைஞர்கள் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
பாரதிராஜா சாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் - அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற மண் வாசனை மிகுந்த அவரது குரல் நம் செவிகளில் என்றுமே ஒலித்துக் கொண்டு இருக்கும்.
பாராதிராஜா சார், அவர் படைப்புகளின் வழியே என்றும�� நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.
#Bharathiraja
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக ��டுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒ���ிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom