உடன்பிறப்புகளே...
உங்கள் ஒவ்வொருவருக்கும் -உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை!
ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது:
சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
உடன்பிறப்புகள் ஒவ்வொருவருவர் மீது நானும், உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK
The World Cup begins tomorrow, and many will watch the matches. Soccer reminds us of something we must not forget: life is not a race to show off on our own, but a path we learn to walk together. Anyone who does not know how to pass the ball, even if they have talent, has not yet understood the game. Anyone who does not know how to live with and for others has not yet understood life. #ApostolicJourney
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்!
ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது.
உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்!
#DMK4TN
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பா. பெஞ்ஜமின் அவர்கள் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் யாமினி இளையராஜா - மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தினேஷ் - 155வது வட்டக் கழக செயலாளர் ராஜ்குமார் பச்சையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (10.06.2026) மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பா.பெஞ்ஜமின் அவர்கள் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் யாமினி இளையராஜா - மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தினேஷ் - 155வது வட்டக் கழக செயலாளர் ராஜ்குமார் பச்சையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதுரவாயல் தெற்கு பகுதி செயலாளர் காரம்பாக்கம் கணபதி, முன்னாள் எம்.எல்.ஏ., வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் அயப்பாக்கம் அ.ம. துரை வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து!
பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.
பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது.
அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
@Subramanian_ma@PrabhakarRaja88
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!