புதிய தலைமுறையின் மூத்த ஊடகவியலாளர் விஜயன் அவர்களை, விசாரணை என்ற பெயரில் கடந்த இரண்டு தினங்களாகக் காவல் நிலையத்திற்கு அழைத்து அலைக்கழித்தது ஏற்புடையதல்ல.!
............................................
தவெக அரசைக் கவிழ்க்க, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா அவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி, திருநாவுக்கரசு என்பவர் விலை பேசினார் எனவும், மேலே குறிப்பிட்ட திருநாவுக்கரசு, விஜயன் அவர்களுடன் தொடர்பில் இருந்தார் எனவும் காவல்துறையால் காரணம் சொல்லப்படுவதாகத் தெரிகிறது.
பொதுவாக ஊடகவியலாளர்கள், ��ள்ளூர் மற்றும் உலக அரசியல் விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், கள நிலவரங்களை அறிந்துகொள்ளவும் எல்லா அரசியல்வாதிகளிடமும் பேசுவது புதியதல்ல. அந்த வகையில், ஊடகவியலாளர் என்ற ஸ்தானத்திலிருந்து பேசியிருந்தால் கிரிமினல் நோக்கமுடையதாகக் கருதக் கூடாது.
மேலும், விசாரணையின்போது அவருக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் நடத்தியதும், அவரது கைபேசியைப் பிடுங்கி வைத்துக்கொண்டதும் வரம்பு மிஞ்சிய செயலாகும்.
காவல்துறை ஊடகவியலாளர்களைக் கவனத்தோடும் கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் எனவும், விஜயன் அவர்களுக்குக் கடந்த இரண்டு தினங்களாகக் கொடுக்கப்பட்ட மன உளைச்சலுக்குக் காவல்துறை அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி சார்பாக
கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.07.2026
’வெக்கை’, ‘பிறகு’, ‘அங்காடி’, உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் படைப்பாளியும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையும், சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான, கோவில்பட்டியை அடுத்த ஆண்டிபட்டியைச் சேர்ந்த திரு. பூமணி என்ற பூ.மாணிக்கவாசகம் ��வர்களின் மறைவிற்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிலப் பத்திரப்பதிவு மோசடி!
உடந்தையாக இருந்த மேலிடப் புள்ளிகள் யார்?
.............................................
உலகப் புகழ்பெற்ற பழன��� முருகன் கோவிலுக்குச் சொந்தமான, பழனியின் மையப்பகுதியில் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த ₹100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக மூன்று தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது எப்படி?
இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று?
பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை, கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், பழனி ���ருகே உள்ள பாப்பாங்குளம் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும்; இதற்கு உடந்தையாகச் சார்பதிவாளர் மணிகண்டன் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது.
இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை இருப்பது தெரிந்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
இந்த குற்றச்சாட்டு வெளியானவுடன், அடிமட்ட அளவில் சார்பதிவாளர் ��ள்ளிட்ட ஒருசிலர் பெயரைக் குறிப்பிட்டு வெறுமனே ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மை வெளிவராது.
ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு மாதத்தில், சட்டமன்றத்திற்கு உள்ளும், பொதுவெளியிலும் விஜய் அவர்கள் தூய ஆட்சியைப் பற்றி வலியுறுத்தி வருகிறார். ஆனால், பழனி முருகன் கோவில் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக சில தனிநபர்களின் பெயரில் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலிடப் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் இந்த குற்றம் நடைபெற வாய்ப்பில்லை.
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆட்சி வந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். ஒரு அரசை வீழ்த்த 100 குற்றச்சாட்டுகள் தேவையில்லை; வலுவான ஒரு குற்றச்சாட்டே போதுமானது.
எனவே, விஜய் அரசு பழனி முருகன் கோவில் மோசடி நிலப்பத்திரபதிவு உண்மைத்தன்மையை நடுநிலையான, நேர்மையான, சுதந்திரமா�� விசாரணை, குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியின் (Sitting Judge) கீழ் நடத்தப்பட்டு, அந்த மேலிடப்புள்ளி யார் என்பது ஆன்மீகப் பெரியோர்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டு சமந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.07.2026
அரசின் புகழ்பாடிகளாக சில அரசியல் கட்சிகள் இருப்பது இயல்புதான்!'
ஆளுங்கட்சியின் புகழ் பாடிகளாக சில அரசியல் கட்சிகள் இருப்பது என்பது இயல்பான ஒன்றுதான் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
#ssnews#NewsUpdate#dailynews#Krishnasamy #PuthiyaTamilagam #Ravikumar
'முதல்வரை யார் சந்திக்க வேண்டும் என்பதை வடிகட்டி அனுப்புகிறார்கள்!'
முதல்வரை யார் சென்று சந்திக்க வேண்டும் என்பதை தனிப்பட்ட நபர்கள் முடிவு செய்கிறார்கள் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
#ssnews#dailynews#NewsUpdate#Krishnasamy #PuthiyaTamilagam #TamilNaduPolitics #PoliticalNews
அண்மை காலமாக தங்கள் பதவிகளை திடீரென ராஜினாமா செய்து வரும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்கவும்; உரிய விளக்கம் கிடைக்கும் வரை அத்தொகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கவும் வலியுறுத்தி மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சி சார்பாக மனு அளித்தோம்.
மிகவும் சிக்கலான பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர் பின்னணிப் பாடகி ஜானகி!
.............................................
தமிழ் திரையுலகில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள்; மிக முக்கியமாக, 'சிங்கார வேலனே தேவா' போன்ற மிகக் கடினமான, நுணுக்கங்கள் நிறைந்த பாடலைத் தன் அசாத்தியக��� குரல் வளத்தால் பாடிப் புகழ்பெற்றவர் அவர். அவரது மறைவிற்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
• டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
11.07.2026
நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் அவர்கள் ரத்து செய்ய வேண்டும்!
அரசு நெய்யில் ’ஸ்வீட்’ செய்யக்கூடாது!
..................................................................
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள். அதற்கான காரணம் என்ன? இது திட்டமிட்டு நடந்த செயலா அல்லது விபத்தா? ஏறக்குறைய ஒரு வருடமாகியும் அதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிகழ்வு குறித்து கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் தலை���ையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் கலைக்கப்பட்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனா உட்படப் பலரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியச் ச��ட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை தந்திடவும், அந்த ஆணையை விஜய் அவர்களே நேரடியாக வழங்கிடவும் நாளை (10.07.2026) அன்று அவர் கரூர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த.வெ.க சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.
முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள அந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது. அவர்கள் அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறிவிடுவார்கள். அதனால் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடலாம்; 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமலும் போய்விடும்.
எனவே, நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை விஜய் அவர்கள் ரத்து செய்ய வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன��.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
09.07.2026
தமிழக அரசின் சார்பாக மூன்று மாதங்களுக்கான, காவிரி நீரைப் பெற எவ்வித கோரிக்கையும் வரவில்லை - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி!
காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதற்காக கர்நாடகத்திடம் எட்டு கோடி தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டதா விஜய் அரசு?
...............................................
டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குவது காவிரி ஆகும். ��தை மட்டுமே நம்பி ஏறக்குறைய 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி நடைபெறுகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிவரும் டெல்டா பகுதிக்கு உரிய நேரத்தில் காவிரி நீர் வந்து சேரவில்லை எனில், கோடிக்கணக்கான மக்களின் உணவுத் தேவைக்குப் பெரும் குந்தகம் ஏற்படும்.
காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு ஆண்டில் 177.25 டி.எம்.சி நீரை கர்நாடக அணைக்கட்டுகளிலிருந்து தமிழகத்திற்கு மாதந்தோறும் பிரித்துத் தர வேண்டும். குறிப்பாக வறட்சியான – distress காலமாக கருதப்படக்கூடிய மே மாத 2.5 tmc, ஜூன் மாத 9.19 tmc, ஜூலை மாத 31.24 tmc என மொத்தம் 42.98 டி.எம்.சி தண்ணீர் இந்த மூன்று மாதங்களில் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று மாதங்களில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் திறந்து விடப்படவில்லை. இதன் காரணமாக, ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படவில்லை; குறுவை சாகுபடியும் நடைபெறவில்லை.
"அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்" என்பது பழமொழி. ��னால், நாம் அழுது பெற வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற உத்தரவின்படியும், காவிரி நதிநீர் ஆணையத் தீர்ப்பின்படியும் நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கீட்டைப் பெறுவதற்குத் விஜய் அரசு போதிய அழுத்தம் கொடுத்தாலே போதும். ஆனால், தமிழக அரசின் சார்பாக மூன்று மாதங்களுக்கான நீரைப் பெற எவ்வித கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அவர்கள் கூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
எட்டு கோடி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் நலனை விட்டுக் கொடுத்துவிட்டு ஆட்சியில் நீடிப்பதால் என்ன பயன்?
காங்கிரஸின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதற்காகத் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனையே கர்நாடகத்திடம் தாரைவார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? மக்கள் மீது அக்கறை கொணடவர்கள் தங்களது ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடுவார்கள். ஆனால் விஜய் அவர்களோ, ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக எட்டு கோடி தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்து ஆட்சியைத் தக்க வைக்கத் தயாராகிவிட்டார் என்ற தோன்றுகிறது; இது ஏற்புடையதல்ல; தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
எனவே, தமிழகத்திற்கு மே, ஜூன், ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரைப் பெற முதல்வர் விஜய் அவர்கள் உரத்த குரல் கொடுக்க வேண்டுமெனவும், உடனடியாக தமிழக நீர்வளத்துறை அமைச்சரை கர்நாடகத்திற்கு நேரடியாக அனுப்பி, தமிழகத்திற்கான உரிய பங்கீட்டைப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் என வலியுறுத்துகிறேன்.
• டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.07.2026
@CMOTamilnadu
Coimbatore, Tamil Nadu: On the Cauvery dispute, Puthiya Tamilagam Party leader Dr. Krishnasamy says, ''Already our share for the month of May is 9.214 and also for the July also 31.24, around 41 TMC, it is not a small thing. So by this time, the Tamil Nadu government should have given much pressure on the state of Karnataka because they are sharing, they are with the Congress government. So they are not ready to give pressure to the Karnataka government...''
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கினால் ��வர்கள் நேர்மையாக சாட்சிகளை வழங்க முடியாது - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
https://t.co/2oUU9J3p7c| #Krishnasamy #KarurStampede #CMVijay #KarurCase #ABPNADU