இதில் உய���ரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(4/4)
தமிழகத்தில் இதுபோன்ற விபத்துகள் இனி எங்கும ஏற்படாத வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.(3/4)
இந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்து எவ்வாறு நிகழ்ந்தது? உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப் பட்டுள்ளதா? என்பதை உரிய விசாரணை செய்து, இந்த கோரவிபத்து ஏற்பட காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவ��ிக்கை எடுக்க வேண்டும்.(2/4)
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் தனியார் பட்டாசு ஆலை வெடிவ��பத்தில் 8 நபர்கள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. இதில் பலத்த காயமடைந்த ஏழு பெண்கள் உள்பட16 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.(1/4)
பலியான விமானிகளின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உடன் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மாக்கள் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிற���ன்.(2/2)
அருணாச்சலப் பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த தேனி மாவட்டம் ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்த மேஜர் ஜெயந்த் உள்பட இரண்டு விமானிகள் ப��ியாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. (1/2)
அதேபோன்று “நாட்டு நாட்டு" பாடலின் மூலம் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்று நம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த ஆர்ஆர்ஆர் திரைப்படக்குழுவினருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.(3/3)
உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படத்தை உருவாக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.(2/3)
தாயை பிரிந்து தவித்த இரண்டு குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலி���ென்ட் விஸ்பரர்ஸ்' ஆஸ்கர் விருது வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.(1/3)
அன்பு சகோதரர் கு.சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெ���ிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆ��்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்(2/2)
திருவாரூர் மாவட��டம், மன்னார்குடி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.சீனிவாசன் அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கு.சீனிவாசன் அவர்கள் நம் இருபெரும் தலைவர்கள் மீதும், என் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்.(1/2)
தனது தாயாரை இழந்து வாடும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித���துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(3/3)
அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.(2/3)
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)