200 யூனிட் கரண்ட் வேண்டாம், ரெகுலரா கரண்ட் வந்தா போதும்,
இலவச பஸ் பயணம் வேண்டாம், ஒழுங்கா பஸ் சர்வீஸ் விட்டா போதும்,
மகளிர் தொகை 2500 ₹ கூட வேண்டாம், பழைய தொகையை ஒழுங்கா குடுத்தா போதும்ன்னு,
அவங்க அவங்க வாயால மக்களையே சொல்ல வச்ச பாத்தியா.. நீ கில்லி தலைவா.
5 வருஷ ஆட்சிய பார்த்து ரியாலிட்டி பார்த்து தெளிஞ்சா தான் உண்டு.. எடுத்து சொல்லியோ, விளக்கம் கொடுத்தோ ஒன்னும் பண்ண முடியாது. அதனால இன்னும் 4 வருஷம் வெயிட் பண்றது தவிர வேற வழியில்லை..
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு.
வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க.
எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும்.
உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது.
ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது.
தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான்.
பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
1949 முதல் திமுகவை மட்டுமே குறிவைத்து சுவைத்து கொண்டிருக்கும் வினோத முற்போக்காளர்கள், நவீன புரட்சியாளர்கள் மற்றும் மாற்றம் தேடும் இன்ன பிற நல்ல உள்ளங்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்!
IG: kakashihatakewsr
ஒன்னு சொல்லுறேன்.
அடுத்த தேர்தல் கிட்ட அஜித் வெளிப்படையா திமுகவுக்கு ஆதரவு கொடுக்குறேன்னு சொன்னா, திமுகவுக்கு actually வரவேண்டிய வாக்குகள் குறையும்.
ஏன்னா, "ஐயோ பாவம் விஜய், அவருக்கு எதிரா திமுக எல்லாரையும் இறக்குது, எல்லாரும் ஒன்னு கூடுறாங்க"ங்கிற narrative உருவாகும்.
ஆனா அஜித் Tvk/Admk-க்கு ஆதரவு கொடுக்குறேன்னு சொன்னா, அந்த கட்சி குறைந்தபட்சம் 200 தொகுதில ஜெயிக்கும்.
இங்க திமுகவுக்கு மட்டும் தான் மக்கள் on the spot-ல rules, regulations, ethics உருவாக்கி அதை நாம follow பண்ணனும்னு எதிர்பார்பாங்க.
கரூர் சாவுகள் அப்ப (இப்பவும் கூட) "ஜெயா மட்டும் இருந்துந்திருந்தா விஜய இந்நேரம் ஒழுச்சி இருப்பாங்க" "விஜய்க்கு கட்சியே ஆரம்பிக்க தைரியம் வந்துருக்காது"னு பேசின மக்கள், ஒரு நிமிஷம் அவங்க சொல்றத யோசிச்சி பார்த்தாலே, திமுகதான் உண்மைய ஜனநாயகத்தோட நடந்துக்குது புரிஞ்சிருக்கும்.
ஏன், Tvk- க்கு ஓட்டு போட்ட மக்கள் கிட்ட கேட்டு பாருங்க: பல ஊழல் வழக்குகளில் திருப்பி திருப்பி ஜெயிலுக்கு போன ஜெயா ஆட்சில ஏன் ஊழலுக்கு எதிரா விஜய் கட்சி ஆரம்பிக்கல, அவங்க உயிரோட இருந்திருந்தா கட்சி ஆரம்பிச்சி இருப்பாரா விஜய்னு கேட்டு பாருங்க. அவங்களே ஒதுப்பாங்க, விஜய்க்கு அந்த தைரியம் கிடையாதுனு/, ஜெயா விட்டுருக்க மாட்டாங்கனு.
ஆனாலும் திமுக தான் தினம் தினம் கற்பை நிரூபிக்கணும் மக்களுக்கு.
திமுகவுக்கு ஆதரவு கொடுக்க வரவங்க, இந்த unique condition புரிஞ்சிட்டு வாங்க.
Because DMKians cannot express anything in anger or frustration.
திமுக மேல ரத்தம் கொதிக்கிற மாதிரி பழி போட்டா கூட, அமைதியா தான் பேசணும். Data-லாம் காட்டி பதில் சொல்ல முடியாத மாதிரி மடக்குனா, அப்புறம் "இதுக்கு தாண்டா கூப்புல இருந்திங்க/கூப்புக்கு போக போறீங்க" "நீங்க மட்டும் தான் பெரிய புத்திசாலினு நினைப்பா"னு கோவப்படுவாங்க, கூப்புலயும் உண்மையாவே உட்கார வைப்பாங்க.
Amazon, Flipkart இதுல எல்லாம் தெளிவா brand பார்த்து, review படிச்சு பொருட்களை வாங்க தெரிஞ்ச Gen Z க்கு, தன்னோட தொகுதியில போட்டியிட்ட MLA பெயர் கூட தெரியாம, அவரைப் பத்தி எதுவுமே தெரியாம, ஆட்டு மந்தை மாதிரி கூட்டமா போய் ஓட்டு போட்ட இவனுங்களை என்னத்த சொல்றது..??🤷♂️
கொஞ்சம் கூட தெளிவே இல்லாத Gen Z கூட்டத்துக்கு ஏத்த அமைச்சரவை தான்..🤦♂️🤦♂️
தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் அங்கும் இங்கும் நடந்த குற்றங்களுக்கு அந்த அரசுதான் காரணம் என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கி நாடகம் ஆடிய நடிகர் விஜய் ஆட்சியில் இந்த 10 நாட்களில் வரிசையாக ஏராளமான கொடுங்குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
அதை நம்பி கூக்குரலிட்ட அந்த 1.70 கோடி அறிவுக்குருட்டுக் கூட்டம் இப்போது வாயை மூடிக்கொண்டு நிற்கிறது.
விஜய் ஆட்சியில் 10-வயது சிறுமிகளுக்குக் கூட பாதுகாப்பில்லை என்பதற்கெல்லாம் அவரும், அந்த பொறுப்பற்றக் கூட்டமும் என்ன சொல்லப்போகின்றனர்?
குற்றஞ்சாட்டுவது எவ்வளவு எளிது என்பது இப்போதாவது புரிகிறதா?
- ஜேம்ஸ் வசந்தன் FB பதிவு
நிறைய யோசனைக்கு பிறகே இதை எழுதுகிறேன். திமுக ஆட்சியின் போது நடந்த குற்றச்செயல்கள் மிகுந்த ஊடக வெளிச்சம் பெற்றன. குறிப்பாக தவெகவின் ஊடக, சமூக ஊடக சூப்பர் பவர், அதை தமிழ்நாட்டின் மூலை முடுங்கெங்கும் கொண்டு சென்றன. தமிழ்நாட்டின் பெண்கள் மீதும், திமுகவை ஆதரித்தவர்கள் மீதும் ஒரு மிகப்பெரிய உளவியல் தாக்குதல் நடத்தப்பட்டது. எந்தளவுக்கென்றால் - நீங்கள் திமுகவை ஆதரிப்பவர்கள் என்றால், உங்கள் வீட்டு பெண்களை ரே* செய்ய நீங்கள் துணை போகிறவர்கள் என்பது போன்ற கமெண்டுகளை நீங்கள் தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் ஐடிகளில் இருந்து பார்க்கலாம். இதை படிக்கும் யாருக்கும் மனம் பதறும். திமுக ஆட்சியால் பலன் பெற்றும் திமுகவிற்கு வாக்களிக்காமல் தவெகவிற்கு வாக்களித்த பல பெண்களுக்கு பின்னால் இந்த “உளவியல்” தாக்குதலும் இருக்கிறது.
நிற்க. பெண்கள் பாதுகாப்பில் மட்டுமல்ல. பெண்கள் முன்னேற்றத்திலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது என்கிற தரவுகள் நாம் தந்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.
கடந்த இருபது நாட்களில் தவெக ஆட்சியமைத்த பின்னர் சட்ட ஒழுங்கு மட்டுமல்ல.. ஆட்சி நிர்வாகமே தறிகெட்டு நிற்பது கண்கூட தெரிகிறது. ஆனாலும், Fake news factory வைத்தே, அண்ணன் அதிரடி, அண்ணன் பவருடி என கண்டெண்ட் போட்டு காப்பாற்றி விடலாம் என நினைக்கிறார்கள்.
மாண்புமிகு விஜய் அவர்களே - நீங்கள் பிராமிஸ் செய்தது ஒரு உட்டோப்பியன் கனவு. அதற்கு பலிகடா ஆனது பல பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள். அதில் ஒருவர் தான் - அந்த இருவயது சிறுமியின் உறவினர் பெண்.. உங்களுக்கு ஓட்டு போட்டோமே - ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லையே என்கிறார் அவர்.
அவர்கள் உங்களிடம் வைத்திருப்பது ஒரு குறைந்தபட்ச எதிர்ப்பார்ப்பு தான். ஆனால், உங்களுக்கும் தெரியும் - நீங்கள் சராசரி அரசியல்வாதியல்ல, சூப்பர் மேன் அரசியல்வாதி.. என்னால் இவர்களை கவர்ந்தவிட முடியும் என நீங்கள் பலமாக நம்புகிறீர்கள் என..
உங்களுக்கு பிடித்த எம்ஜிஆரின் பாடல் ஒன்றையே கூறி முடிக்கிறேன்.
தவறு என்பது தவறி செய்வது,
தப்பு என்பது தெரிந்து செய்வது.
தவறு செய்தவர் திருந்தப் பாக்கணும்
தப்பு செய்தவர் வருந்தி ஆகணும்.
நன்றி!
சந்தோஷம்ங்கிறது அதை அனுபவிக்கும் போது தெரியாது.அது இல்லாம போகும்போதுதான் அதோட அருமை புரியும்.மக்கள கஷ்டபட்டுத்தி அப்பறம் ஒழுங்கா கரண்ட விட்டு ஒரு ஸ்டாடர்ஜி பண்ணலாம்னு இருக்கீங்கன்னு புரியுது.ஆனா இப்ப மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க.கொஞ்சம் சீக்கிரம் அந்த ஸ்டாடர்ஜிய அமல்படுத்துங்க