#Gladiators - has special songs motivationally and Emotionally💪
It's a different film. Trailer is coming soon and it has big surprise.
#AjithKumar#DareDevil@gvprakash bro , waiting for your background score and songs 💪
இன்று, சென்னை - தாம்பரத்தில் நடைபெற்ற, இராணிப்பேட்டை மாவட்ட சமூக முன்னேற்ற சங்க பொறுப்பாளர் வே.ஜீவரத்தினம் - தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகள் ஜீ.கோமளவள்ளி - ச.யாகேஷ் கண்ணா இணையரின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய போது.!
சென்னை - வேளச்சேரியில், தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக்ஸ் அசோசியேஷன் சார்பில், மாநில அளவில் நடைபெறும், "GYMNASTICS CHAMPIONSHIP- 2026" நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றிய போது.!
#gymnastics
சென்னை - வேளச்சேரியில், தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக்ஸ் அசோசியேஷன் சார்பில், மாநில அளவில் நடைபெறும், "GYMNASTICS CHAMPIONSHIP- 2026" நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றிய போது.!
#gymnastics
On behalf of the Government and the people of Nepal, I extend our deepest gratitude to Your Excellency Smt Droupadi Murmu for your kind concern and also for the generous support and solidarity extended by your government following the recent calamity in Nepal.
I was lucky enough to visit Nepal last year and experience firsthand the kindness of its people and the incredible beauty of the country. It’s devastating to see what has happened. My thoughts and prayers are with everyone affected, and with the families and communities facing such heartbreaking loss. 🇳🇵
Happy Birthday, dear @iamnagarjuna 💐
May God bless you with good health, happiness and many more wonderful years ahead.
Many congratulations and best wishes on your landmark 100th film #King100. 🤗
Happy birthday, Babu @iamnagarjuna
I absolutely loved #KING100 glimpse. You are amazing in it as always. I pray god for your good health and success 🔥
https://t.co/Iy2Zuf2W2B
மேலூரில் மட்டும் தான் ஆன்லைன் மோசடியா?
தமிழகம் முழுவதும் ஆன்லைன் மோசடி வலையமைப்பு உள்ளதா?
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘FQL’ என்ற ஆன்லைன் செயலி மூலம் அதிக இலாபம், இரட்டிப்பு இலாபம் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகள் பெறப்பட்டு, தற்போது பெரும் மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உழைப்பால் ஈட்டிய பணத்தை இழந்திருக்கக்கூடும் என்ற நிலையில், இந்த மோசடியின் உண்மையான அளவு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை முழுமையான விசாரணையின் மூலம் அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
இந்த மோசடியின் பின்னணியில் செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டப்படி கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தச் சம்பவம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் மட்டுமே தொடர்புடையதா? அல்லது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் வெவ்வேறு செயலிகள், முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களில் இதேபோன்ற மோசடிகள் நடைபெற்று வருகின்றனவா? என்பதையும் அரசு விரிவாக விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பதிவாகியுள்ள இணையவழி மற்றும் முதலீட்டு மோசடி புகார்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, ஒரே மாதிரியான செயல்முறைகள், வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் முகவர் வலையமைப்புகள் ஏதேனும் தொடர்புடையவையா? என்பதை புலனாய்வு செய்ய வேண்டும்.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் வங்கிக் கணக்குகள், சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கண்டறியப்படும் சொத்துகள் மற்றும் பணப் பரிமாற்றங்களை சட்டப்படி உடனடியாக முடக்கி, மோசடியில் பறிபோன பொதுமக்களின் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
அதேபோல், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரிடமிருந்தும் முறையாக புகார் பெற்று, அவர்களின் பண இழப்பு குறித்த முழுமையான ஆவணங்களைச் சேகரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சட்ட உதவியும் வழங்க வேண்டும்.
எளிய மக்களின் பல ஆண்டுகால உழைப்பையும் சேமிப்பையும் ஆசை வார்த்தைகளைக் கூறிச் சுரண்டும் இத்தகைய இணையவழி மற்றும் முதலீட்டு மோசடிகளை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது.
மேலூர் FQL மோசடி தொடர்பாக உண்மையான இழப்புத் தொகை, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மோசடியில் ஈடுபட்டவர்களின் முழு வலையமைப்பு ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை விரைந்து மீட்டுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#FQLScam
#OnlineInvestmentFraud
#tamil
#FQLமோசடி
#மக்கள்பணம்_மீட்கவேண்டும்
சென்னை - வேளச்சேரியில், தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக்ஸ் அசோசியேஷன் சார்பில், மாநில அளவில் நடைபெறும், "GYMNASTICS CHAMPIONSHIP- 2026" நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றிய போது.!
#gymnastics
"யோவ் #தவெக.. ! எங்க இருந்துயா இது போன்று எம்எல்ஏ கேண்டிடேட் தேர்வு செஞ்சீங்க...???"
குடியாத்தம் தொகுதியின் TVK MLA சிந்து அவர்களுடைய பேச்சும், தமிழ் உச்சரிப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
"எனக்கு வரும் கடிதங்கள் முதற்கொண்டு தனி என்று எழுதப்படுவதன் மூலம் ஏதோ தனிமைப்படுத்துவதை போல் உள்ளது.. எனவே தனி என்ற சொல்லை நீக்கிவிட்டு உரிமை, சிறப்பு என்பதாக மாற்றலாம்" என்று தோழர் சிந்து அவர்கள் கூறியது எப்பேர்பட்ட தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கோரிக்கை...!
தமிழக வெற்றிக் கழகம் தோழர் சிந்து அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சிறப்பானதொரு களப் பணியாளராக நிச்சியம் வலம் வருவார்..!
தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்துவதா?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?
தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?
வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?
இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?
இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும்
துணிவு எங்கிருந்து உங்களுக்கு
வந்தது?
குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை;
காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா?
மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை;
காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா?
சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்;
ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?
ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது. அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. "ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்சொல்லால் தரப்பட்டவள்..."- ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல்,
இதை எல்லாம் அறியாமல்,
அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல்,
அந்த மண்ணின் வரலாற்றை உணராமல்,
“இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா?
அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?
“எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!” என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்?
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” என்று சொல்வீர்களா?
ஒரு மக்கள் நலத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டதிற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா?
மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?
தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர்களுக்கு நல்லாட்சி தர முடியாது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல;
அது எமது மண்ணின் அடையாளம்!
அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல;
மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு!
(1/2)
அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றிருக்கும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அபாரமான திறமையாலும், தளராத தன்னம்பிக்கையாலும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் வீரர் பிரக்ஞானந்தா அவர்களின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
@rpraggnachess
உலக வரலாற்றில் அடுத்தவரின் உயிர் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் புரிந்த முதல் அரசியல் புரட்சிப்பெண்!
தன்னுடைய மூன்று அண்ணன்மார்களின் உயிர், தூக்குக் கயிற்றின் எதிரே நிற்கும்போது, தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது அதைக் காக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, தன் உடலுக்குத் தீயிட்டு, ஒரு புரட்சித்தீயை இந்த நிலத்தில் பற்றவைத்த பெரும் நெருப்பு!
தமிழர் பண்பாட்டு மரபில் தன்னைச் சார்ந்தவர் நலன் காக்க தம்முயிர் துறந்து தெய்வங்களான தமிழின முன்னோர்கள் போல, இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்து உலகத்தமிழர் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து வாழும் நம் இனத்தின் காவல் தெய்வம்!
தம்முயிரையே ஈகம் தந்த புனிதப்போராட்டத்தின் மூலம் எழுவர் விடுதலைக்கு வித்திட்ட வீரத்தமிழச்சி தங்கை செங்கொடிக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்துவோம்!
நாம் தமிழர்!