நாம் தமிழர் கட்சி - காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வணிகர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி லெட்சுமணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ராம.நெல்லியான் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராம.நெல்லியான் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
தனது ஒப்பற்ற தனித்திறனாலும், வீரியமிக்கப் பேச்சாற்றலாலும் வெகுமக்களைக் கவர்ந்து, கடைக்கோடி மக்களுக்கும் கருத்துகளைக் கடத்தி, அரசியல் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆதிக்கம் செய்யும் வல்லமை கொண்ட பேராற்றலாளன்!
கடும் அடக்குமுறைகளையும், கொடிய அவதூறுப்பரப்புரைகளையும் எதிர்கொண்டபோதிலும் கொண்ட கொள்கைக்காக, ஏற்றுக்கொண்ட தலைமைக்காகத் தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமற்று நிற்கும் உளத்தூய்மையும், உள்ளத்துணிவும் கொண்ட துடிப்புமிக்கச் செயற்பாட்டாளன்!
எப்போதும் என்னுடைய தோளுக்குத் துணையாக நிற்கும் படைத்தளபதிகளுள் ஒருவன்! நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச்செயலாளர்!
என்னுடைய ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!
@Saattaidurai
தாய்மொழியில் பயின்று தம்முடைய கூர்த்த அறிவாற்றலால் இந்தியாவை அணுவாற்றல் மிக்க நாடாக உயர்த்திய பெருந்தமிழர்..!
தம் அறிவியல் தொழில்நுட்பத் திறன் கொண்டு இந்தியப் பெரு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திய ஏவுகணை நாயகன்..!
குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து, குடிசையில் வாழும் மக்களின் குரலாக ஒலித்த பெருந்தகை!
முதல்முறையாக இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனின் உயர்வுக்காகவும் சிந்தித்த ‘இந்தியாவின் முதல் குடிமகன்’!
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பாத சுமையைக் குறைத்த அறிவியல் மாமேதை..!
மாணவ கண்மணிகளை மகத்தான இலட்சியங்களைக் கனவு காண அறிவுறுத்திய மாபெரும் தலைவர்..!
அறிவியலாளர், ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், மனிதநேய மிக்க மாண்பாளர், எளிய மக்களிடம் எவ்வித பகட்டும் இன்றி இனிமையாகப் பழகும் உயர்ந்த பண்பாளர்..!
இந்திய விண்வெளி திட்டங்களின் விடிவெள்ளி, தமிழினத்தின் அறிவியல் அடையாளம் பெருமதிப்பிற்குரிய ஐயா அப்துல்கலாம் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தில் வயலில் வேளாண் பணி செய்து கொண்டிருந்த அன்புச்சகோதரிகள் பிரான்சிஸ் என்ற சவுரியம்மா மற்றும் பெரிய கருப்பி ஆகிய 2 பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எதிர்பாராத இயற்கை பாதிப்பில் உயிரிழந்த சகோதரிகள் இருவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். எளிய பின்புலம் கொண்ட சவுரியம்மா மற்றும் பெரிய கருப்பி இருவரும் விவசாயப்பணி செய்து வாழ்ந்து வந்த நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்ததால் அப்பெண்களை நம்பியிருந்த அவர்களுடைய குடும்பம் ஆதரவற்று நிற்கிறது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் பல இலட்சங்கள் இழப்பீடு அறிவிக்கும் தமிழ்நாடு அரசு, மக்கள் பசி தீர்க்கும் உயர் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இயற்கை சீற்றத்தால் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்கி, அவர்களின் குடும்பத்தை சூழ்ந்துள்ள இப்பெருந் துயரிலிருந்து மீள்வதற்கு உதவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மின்னல் தாக்கி உயிரிழந்த பிரான்சிஸ் என்ற சவுரியம்மா மற்றும் பெரிய கருப்பி இருவருக்கும் என்னுடைய கண்ணீர் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி இரா.இராஜாராம் அவர்களின் சகோதரர் தம்பி இரா.அன்பழகன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
சகோதரனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி இரா.அன்பழகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்!
சவுதி நாட்டில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழரான தம்பி சிவராஜா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது தாய்நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து பொருளாதாரத்தேடலுக்காக சவுதி நாட்டுக்குச் சென்ற தம்பி அனோஜன், மதம் சார்ந்தும், இறைக்கோட்பாடுகள் சார்ந்தும் விமர்சனத்தை வைத்து, சமூக வலைத்தளத்தில் விவாதித்ததற்காக அந்நாட்டு அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தம்பி அனோஜன் சமூக வலைத்தளத்தில் தான் எழுதியவைகளை உடனடியாக நீக்கியதோடு, அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
விளைவை அறியாது, மற்றவர் உணர்வை காயப்படுத்தும் விதமான தன்னுடைய புரிதலற்றச் செயல்பாட்டுக்கும், பெருந்தவறுக்கும் முழுமையாக வருந்தித் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் தம்பி அனோஜனைத் தண்டிப்பது என்பது ஏற்புடையதல்ல! அதுவும் உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக தம்பி அனோஜன், சமூக வலைத்தளத்தில் மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும் தன்னுடைய கருத்தின் விளைவை உணர்ந்து, பதிவுகளை நீக்கி, சவூதி அரேபிய அரசிடமும், இசுலாமிய உறவுகளிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறது. அப்படியிருக்க, அவருக்கு மரணத்தண்டனை அளிப்பது என்பது எவராலும் ஏற்க முடியாதது. மனித உரிமை குறித்துப் பெரிதும் விவாதிக்கப்பட்டுப் பேசப்படும் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் தற்காலச்சூழலில் இணையதளத்தில் எழுதிய அவதூறானக்கருத்துக்கு மரணத்தைத் தண்டனையாக விதிப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், பரிவையும் போதிக்கும் மகத்துவம் மிகுந்த மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், மக்களை நன்னெறிப்படுத்தி வழிகாட்டிய போற்றுதற்குரிய இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகையத் தவறை செய்து, வரலாற்றுப்பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை சவுதி நாட்டின் ஆட்சியாளர் பெருந்தகைகள் உணர வேண்டும்.
‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று போதித்த போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், தமது இறுதிப் பேருரையில், “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்கிறார். மேலும், மன்னிப்பை இறைவனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகவும், மனிதன் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணாதிசயமெனவும் உலகுக்கு உரைக்கிறார். நபி பெருமானார் காட்டிய அத்தகைய உயர்ந்த அன்பு வழி நின்று, அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி நாட்டின் அரசு வழங்க வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்பார்ப்பும், கனிவானக் கோரிக்கையுமாகும்.
ஆகவே, உலகம் தழுவி வாழும் மானுடப்பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தம்பி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இம்மரணத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும், தம்பி சிவராசா அனோஜனை மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் சவூதி அரசோடு பேசி, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மக்களிடம் ஏற்கனவே பன்மடங்கு அதிகமாக மின்கட்டணம் வசூலித்து வரும் நிலையில், ஓர் அலகு மின்சாரம் 35 ரூபாய்க்கு தனியாரிடம் வாங்கினால் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகக் கட்டணத்தை உயர்த்தப்போகிறீர்கள்? மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு மின்சாரத்தைச் சுமார் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தவெக அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் சொந்த மின் உற்பத்தி திட்டங்களை வலுப்படுத்தாமல், அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவையாக உள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நீண்டகாலமாக பெரிய முதலீடு ஏதும் செய்யாமல் முந்தைய திமுக, அதிமுக அரசுகள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால் அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் 2 இலட்சம் கோடிகள் அளவிற்கு கடனில மூழ்கியுள்ளது. அதையே தவெக அரசும் தொடர்ந்தால் மேலும் மேலும் கடன்தான் அதிகமாகும். உற்பத்தியில் முதலீடு செய்வதுதானே நிலையான தீர்வை நோக்கி நகரும். ஒவ்வொரு முறையும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதையே தீர்வாகக் கூறிக்கொண்டிருந்தால், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது எப்போது? இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு எப்போது வரும்? அதற்கான திட்டமும் காலக்கெடுவும் எங்கே? மின் உற்பத்திக்கு அணு மின் திட்டமும், அனல் மின் திட்டமும் மட்டும்தான் உள்ளதா? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை உள்ளிட்ட மாற்று மின்பெருக்கத் திட்டங்களே இல்லையா? அவற்றில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தாதது ஏன்?
கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது, மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் கையூட்டுக்காக (கமிசன்) திமுக அரசு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் விஜய் அவர்கள், இன்று தனது ஆட்சியில் அதைவிட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது யாரிடம் கையூட்டு (கமிசன்) வாங்க? தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழல் முறைகேடுக்கு வழிவகுத்தது என்று குற்றஞ்சாட்டிய முதல்வர் விஜய் அவர்கள், அதைவிட அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்வது ஏன்? அன்று தவறு என்று சொன்ன கொள்கை, இன்று ஆட்சிக்கு வந்ததும் சரியாகிவிட்டதா? 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் மின்சாரம் ஓர் அலகு 4.85 ரூபாய் முதல் 5.85 ரூபாய் வரை அளவிற்குத் தனியாரிடம் வாங்கப்பட்டது. அவசரத் தேவைக்காக அதனை 21 ரூபாய் அளவிற்கு உயர்த்தி வாங்கிய பொழுது திமுக அரசை கடுமையாக எதிர்த்தோம். ஆனால், முந்தைய திமுக ஆட்சியின் கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது தற்போதைய தவெக அரசின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகம் உயர்ந்துள்ளது எப்படி? அதற்கான நியாயத்தை மக்களிடம் விளக்க தவெக அரசு தயாரா?
தவெக ஆட்சிக்கு வந்து, கடந்த 5 மாதத்தில் மின்கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதாக அல்லல்பட்டு மக்கள் போராடி வரும் நிலையில், இப்பொழுது ஓர் அலகு 35 ரூபாய் கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்தால், அதனை காரணமாக வைத்து மேலும் எத்தனை மடங்கு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்கப்போகிறீர்கள்? மின்தேவை அதிகரிப்பதை முன்கூட்டியே கணித்து, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையல்லவா? பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு அவசரமாக அதிக விலைக்கு வாங்குவதற்கு அரசு எதற்கு? நிர்வாகம் எதற்கு? தனியாக மின்துறைதான் எதற்கு?
அரசினுடைய மின் நிலையங்களில் நிறுவப்பட்ட உற்பத்தித்திறன் எவ்வளவு? தற்போது பயன்படுத்தப்படும் திறன் எவ்வளவு? முழுமையாக உற்பத்தி செய்ய முடியாததற்கான காரணங்கள் என்ன? தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்திலேயே, மின்வெட்டு ஏற்படும் அளவிற்குத் தமிழ்நாடு மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. அவற்றைச் சரிசெய்ய தவெக அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? அவற்றையெல்லாம் செய்யாமல் ஆய்வு என்ற பெயரில் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் சென்று வந்தது தங்கள் கட்சியின் விர்சுவல் வாரியர்ஸ் ரீல்ஸ் போடுவதற்கு மட்டும் தானா?
மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த அவசரத் தேவையைக் காரணமாக்கி எந்த விலையிலும் மின்சாரம் வாங்கலாம் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறைந்த செலவில் மின்சாரம் பெறுவதற்கான மாற்று வாய்ப்புகள் ஆராயப்பட்டனவா? கொள்முதல் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது? எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு மின்சாரம், எத்தனை நாட்களுக்கு வாங்கப்படுகிறது? இதனால் ஏற்படும் மொத்தக் கூடுதல் செலவு எவ்வளவு? ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தூயசக்தி என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் தவெக அரசு வெளிப்படையாகப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்.
இந்தக் கூடுதல் செலவை எப்படியாயினும் நாளை மின்கட்டண உயர்வாக மக்கள் தலையில் சுமத்தப் போகிறீர்கள். ஆக அரசின் திட்டமிடல் குறைபாட்டிற்காக எளிய மக்களும் விவசாயிகளும் சிறு தொழில்முனைவோரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டுமா? தனியார் மின் நிறுவனங்களின் வருமானத்தை உயர்த்துவதற்கா மக்கள் உங்களுக்கு அதிகாரத்தை வழங்கினார்கள்? என்ற என்னுடைய கேள்விகளுக்கு தவெக அரசிடம் என்ன பதில் உள்ளது?
ஆகவே, அரசின் மின் நிலையங்களைச் சீரமைத்தல், நிலுவைத் திட்டங்களை நிறைவேற்றுதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் மாற்று மின் உற்பத்தி திட்டங்களையும், மின்சேமிப்பு வசதிகளையும் விரிவுபடுத்துதல், மின் விநியோக இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அதிக விலையிலான மின் கொள்முதல் முடிவை உடனடியாக மறுஆய்வு செய்து, தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வதோடு, கூடுதல் கொள்முதல் செலவை மக்கள்மீது சுமத்தக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும்,
பொதுவாழ்விலும், அரசாங்கத்திலும் தூய வாழ்க்கை நிலவவேண்டும். மக்களின் துன்பங்களைத் தீர்க்க அரசே முன்வரவேண்டும்,
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 சூலை 27 முதல் தொடங்கி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி!
நமது ஐயா சங்கரலிங்கனாரின் நினைவுநாள் இன்று!
இங்கு நாடு தமிழ்நாடாக ஆகியிருக்கிறது; ஆனால் தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடாக மாறியிருக்கிறது!
ஆட்சி மொழியாக, அதிகார மொழியாக, பேச்சு மொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழியாக, பண்பாட்டு மொழியாக எவ்விடத்திலும் தமிழ் இல்லை! வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை!
இந்நிலையை மாற்றி எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற நிலையை உருவாக்குவதுதான் நம் உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டும்.
உணர்வுப்பூர்வமாக அப்பெருமகனின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளையும் அதை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை ஏற்பதுதான் நாம் செலுத்துகிற உண்மையான புகழ்வணக்கமாக இருக்க முடியும்.
போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரியப் பெருந்தகை நமது ஐயா ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும், தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமை பாதுகாப்புக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் தொடரட்டும்! சிறக்கட்டும்!
@draramadoss
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம்; அரசுக்கு வேறு சட்டமா? பட்டினப்பாக்கம் நிலப்பயன்பாட்டு மாற்றத்தை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றுவதற்குச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இடநெருக்கடி மிகுந்த பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மீனவச்சொந்தங்களும், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துவரும் நிலையில், நிலப் பயன்பாடு மாற்ற நடவடிக்கைகளை தவெக அரசு முன்னெடுப்பது, மக்களின் உணர்வுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்காத ஆணவப்போக்கையே காட்டுகிறது.
குடியிருப்பு, பொழுதுபோக்கு மற்றும் திறந்தவெளி வகைப்பாடுகளில் இருந்த நிலத்தை இடைத்தேர்தல் முடிந்த அடுத்தநாள் வணிகப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தவெக அரசுக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் இடைத்தேர்தலுக்கு முன்பே ஏன் மாற்றவில்லை?
ஒருபுறம் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில் கடற்கரை விதி மீறல் என்றுகூறி மக்கள் கட்டிய 129 கட்டிடங்களை காலி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.
மறுபுறம் கடற்கரை பகுதியான பட்டினப்பாக்கத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி தலைமைச் செயலகம் கட்ட வேக வேகமாக அரசே முயல்வது நியாயம்தானா? கடற்கரையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு மட்டும்தானா? அரசுக்கு இல்லையா? மக்களுக்கு ஒரு நீதி? அரசுக்கு வேறு நீதி என்பது நீதியல்ல; பெரும் அநீதி!
தனியார் கட்டடங்களுக்குக் கடலோரப் பாதுகாப்பு விதிகளைச் சுட்டிக்காட்டும் அரசு, தனது திட்டத்திற்கான கடலோர ஒழுங்குமுறை அனுமதிகள், சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளை மக்களின் பார்வைக்கு முன்வைக்க வேண்டாமா? நிலப் பயன்பாட்டின் பெயரை மாற்றிவிட்டால் மட்டும் கடற்கரையின் இயற்கைத் தன்மையும் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளும் மாறிவிடுமா?
பட்டினப்பாக்கம் என்பது அரசின் வரைபடத்தில் குறிக்கப்பட்ட வெறும் நிலப்பரப்பு அல்ல! அது மீனவ மக்களின் வாழ்வோடும் தொழிலோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த உயிர்நாடி பகுதி. எனவே, கடலுக்குச் செல்லும் வழிகள், படகுகளை நிறுத்தும் இடங்கள், மீன்பிடித் தொழிலுக்கான தேவைகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் ஆகியவை உறுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அதை பாதிக்கும் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஆட்சியும் அதிகாரமும் வழங்கப்படுகிறதே தவிர, அவர்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி, வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் திட்டங்களைத் திணிப்பதற்காக அல்ல. மக்கள் கொடுத்த ஆட்சியை வைத்துக்கொண்டு மக்களையே வஞ்சிப்பது மாபெரும் துரோகம்!
ஆகவே, தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்தி, அந்நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றும் ஒப்புதலை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், மீனவச்சொந்தங்களின் துணையுடன் மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசுக் கட்டடத்தின் பிரம்மாண்டத்தைவிட மக்களின் வாழ்வும் உரிமைகளுமே உயர்ந்தவை! மக்களை வஞ்சிக்கும் வளர்ச்சியை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஏற்காது!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மார்ட்டின் அவர்களின் மாமாவும் மாவட்டப் பொறுப்பாளருமான அன்புத்தம்பி ஜா.அல்போன்ஸ் ஜெயராஜ் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி ஜா.அல்போன்ஸ் ஜெயராஜ் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஜா.அல்போன்ஸ் ஜெயராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
ஆட்சிக்கு வந்து முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதியளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதனை நிறைவேற்றக்கோரினால் கைது செய்வதா? செவிலியர்களுக்குச் செய்த துரோகத்திற்கு தவெக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் போராடிய செவிலித் தங்கைகளை காவல்துறையைக் கொண்டு வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நோயுற்ற மக்களை இரவும் பகலும் கண் விழித்து காக்கும் தாயினும் சிறந்த செவிலியர்களை, உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது. செவிலியர் தங்கைகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தவெக அரசு, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை ஏவி அடக்கி ஒடுக்கி கைது செய்வது வெட்கக்கேடானது!
கடந்த ஆட்சியில் இதே வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகச் செவிலியர்கள் போராடியபோது ஆதரவு தெரிவித்த தவெக, ஆட்சிக்கு வந்தால் முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதியும் அளித்தது. அன்று நியாயமாகத் தெரிந்த செவிலியர் கோரிக்கைகள், இன்று அதிகாரத்தில் அமர்ந்ததும் செல்லாததாகிவிட்டதா?
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு; ஆளுங்கட்சியானதும் இன்னொரு நிலைப்பாடு என்பதுதான் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியலா? கொரோனா காலத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காத்த செவிலித்தங்கைகளை காயப்படுத்துவது நியாயம்தானா? அன்றைக்கு தேவதைகளாக தெரிந்தவர்கள் இன்றைக்கு தேவையில்லாதவர்கள் ஆகிவிட்டார்களா? அதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி, தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர்களின் ஐந்து பிரதிநிதிகளைக் கைது செய்ய தவெக அரசு முயல்வது அதிர்ச்சியளிக்கிறது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர்களைக் கைது செய்வது, இனி அரசின் வார்த்தையை மக்கள் நம்ப முடியாத நிலையை உருவாக்கும் கொடுஞ்செயல்! பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டப் பிரதிநிதிகளைச் சிறைப்பிடிப்பது சனநாயக அரசுக்கு இழுக்காகும்.
வாக்குகளைப் பெறுவதற்கு ஆதரவு! வாக்குறுதியை நிறைவேற்றக் கேட்டால் கைது! இதுதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறிய மாற்று அரசியலா? இதுதான் தவெக அரசு பெண்களை காக்கும் முறையா? வீதியில் கதறும் செவிலித்தங்கைகளின் கண்ணீருக்கு முதல்வர் விஜய் அவர்கள் என்ன பதில் கூறிப்போகிறார்? செவிலியர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அவர்களையே காவல்துறையால் அடக்குவது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகம் இல்லையா? இதுபோன்ற துரோகங்களை அரசு செய்தால் அரசின் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? வருங்கால இளந்தலைமுறை பிள்ளைகள் இனி அரசின் வார்த்தையை நம்ப எப்படி மக்கள் தொண்டு செய்ய முன்வருவார்கள்?
அரசு மருத்துவனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தர நிதி இருக்கும் அரசிடம், அந்த குழந்தைகளை நல்லபடியாக பிறப்பிக்கும் செவிலித்தாய்களுக்கு உரிமை வழங்க பணம் இல்லையா? மக்களின் உயிரைக் காக்கும் செவிலியர்களுக்குத் தங்களுடைய பணிக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு கேட்க உரிமை இல்லையா? அவர்களின் உழைப்பைப் பெறத் தெரிந்த அரசுக்கு, அந்த உழைப்பிற்குரிய ஊதியத்தையும், மரியாதையையும் வழங்கத் தெரியாதா?
ஆகவே, தவெக அரசு இனியும் வெற்று வாய்மொழி உறுதிகளை வழங்கிக் காலம் கடத்தாமல், பணிநிரந்தரம், உரிய ஊதியம் உள்ளிட்ட செவிலியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், போராடும் செவிலித்தங்கைகளின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த செய்தித்தொடர்பாளர் அன்புத்தம்பி ராஜா ( எ ) முத்துக்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இராமையா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராமையா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
சனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் காக்க, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பிவந்தது.
தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது.
வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்?
எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?
படிவம் 6 தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிக்காகப் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, செப்டம்பர் 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அக்டோபர் 5 அன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றம் வழங்காத ஒப்புதலை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது ஏன்? உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கொடுத்தது யார்?
எந்த அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பும், விளக்கமளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதா? முறையீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன? என்பதற்குத் தெளிவான பதில் வேண்டும். எதிர்ப்புகள் பதிவான கோப்புகள் எவை, அவற்றுக்கான பதில்கள், ஒப்புதல் வழங்கப்பட்ட பதிவுகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இயல்பானவைதான், ஆனால் முடிவுகள் ஒருமித்த முறையில் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களில் எனில், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் விதிகளின்படியே அம்முடிவு தோற்றுப்போன முடிவாகும். அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்களும் செல்லத்தக்கவை அல்ல!
இது ஒரு கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்வியல்ல; மக்களுக்காக மக்களே வழங்கிய மக்களின் தீர்ப்பை நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டிய தேர்தல் முறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி. வாக்களித்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வருங்காலத் தலைமுறையிடம் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் கேள்விகளுக்கு வெறும் அமைதி மட்டுமே பதிலாக இருக்க முடியாது.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, பெயர் நீக்கங்கள், தரவுகள் கையாளப்பட்ட விதம், ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை ஆகியவற்றை நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் வாயிலாக ரத்து செய்வதுடன், சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதிசெய்தப் பின்னர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
‘உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்குப் பதிலாகப் பசியில் இருப்போர்க்கு வயிறார உணவு கொடுப்பதே கடவுளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்’ என்று கற்பித்து வடலூரில் அணையா அடுப்பை ஏற்றி வழிகாட்டிய வள்ளல்..!
வாடிய பயிரைக் கண்டு வாடிய உயிர்ம நேயர்..!
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் கண்ட புரட்சியாளர்..!
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக! அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க! என்று முழங்கிய பேராண்மையாளர்!
தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர்..!
உண்மை ஒளியைக் காண வடலூர் பெருவெளியை அமைத்த அருளாளர்..!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கவென திருவருட்பா அருளிய தெய்வத் திருமகன்..!
‘தமிழர் மெய்யியல் மீட்பர், திருவருட்செல்வர் வள்ளலார் பெருமானார் திருப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
கமுதி அருகே அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி பலியான 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு உரிய துயர் துடைப்பு உதவிகளை வழங்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அச்சங்குளம் கிராமத்தில் தம்பி மோகன் - லதா இணையரின் 11 வயதான நிறைமதி என்ற பெண் குழந்தையும், 6 வயது பால பிரவீன் என்ற ஆண் குழந்தையும் கடந்த (30.09.2026) அன்று காலை 8 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (RO Plant) ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயரச் செய்தியறிந்து வேதனையுற்றேன்.
உயிருக்கும் மேலாக நேசித்து வளர்த்த இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டு ஆற்றமுடியாத பெருந்துயரத்தில் வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
இந்த விபத்துக்கு காரணமான, அந்த RO Plant-க்கு அரசு மின் இணைப்பு இல்லாமல் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்த ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கடந்த 8 ஆண்டு காலமாக மின்சாரத் திருட்டை ஆதரித்த மின்வாரிய அலுவலர் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறிப்பாக, செயல்படாமல் இருந்த RO Plant -ல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ள மின்கசிவைச் சரிசெய்யக்கோரி அந்த கிராம இளைஞர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் பறிபோய் இருக்காது.
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரும், தொடர்புடைய மின்வாரிய ஊழியர்களுமே இந்த இரண்டு பிஞ்சுகளின் உயிரிழப்புக்கு முதன்மை காரணமானவர்கள்.
இதனால் தமிழக அரசு உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 25 லட்சம் வீதம் 2 குழந்தைகளுக்கும் சேர்த்து ரூபாய் 50 லட்சத்தைத் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் எனவும்,
புகார் அளித்தும் கவனக்குறைவாகச் செயற்பட்ட அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் அன்புத்தங்கை மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து இன்று 02-10-2026 தென்தாரை பெரிய காளியம்மன் கோவில் அருகில் நடைபெற்று வரும் பரப்புரைப் பொதுக்கூட்டம்.
🔴நேரலை : https://t.co/zd9ok39jTN