விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கட்டனார்பட்டியில், வனஜா ஃபயர் வொர்க்ஸ் என்கின்ற பெயரில், இயங்கிவந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 நபர்கள் உயிரிழந்தனர்!
இதனைய���ுத்து, அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று, சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழர் தேசம் கட்சி வழிவகை செய்யும் எனவும் உறுதியளித்தேன்!..
இன்றைய தினம் 13.03.2026,வெள்ளிக்கிழமை - திருச்சி மாவட்ட, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற, இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தேன்!
எனக்கு இந்த மகிழ்வான தருணத்தை வழங்கிய திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சிக்கும், எனது அன்பிற்குரிய இசுலாமிய சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
இராமேஸ்வரம் அருகே கடல்சார் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து! விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்!!
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அருகே கடல்சார் பணிகளுக்காக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைகிறேன்.
வாழ்வாதாரத்திற்காக உழைக்கச் சென்ற தொழிலாளர்களின் உயிரிழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு உடனடியா��� தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிதியுதவி வழங்க வேண்டும்.
கடல்சார் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்புத் தன்மையை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒ���ுவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கி, அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!
இன்றைய தினம் 10.03.2026, செவ்வாய்க்கிழமை - தமிழர் தேசம் கட்சி நடத்திய முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டின் தீர்மா��� விளக்க பொதுக்கூட்டம், ஒருங்கிணைந்த. சிவகங்கை மாவட்டம் சார்பாக , சிவகங்கையில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று எழுச்சியுரையாற்றினேன்!
இந்நிகழ்வில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரை��ர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த தாய்மார்களுக்கும், பெரியோர்களுக்கும், இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
Tamil Nadu
Here it comes !
India’s first Conservation Centre for the Slender Loris has been opened today at Kadavur in Dindigul district by the Hon'ble Forest Minister virtually, marking a significant milestone for the protection of one of the country’s most elusive and endangered primates. Built at a cost of Rs 16.04 Crores, the Centre will serve as a dedicated hub for habitat protection, population estimation & conservation action including walking trails. The moment is especially meaningful as it builds on the landmark step taken by the Government of Tamil Nadu in 2022, when India’s first Slender Loris Conservation Reserve was notified at Kadavur to an extent of 11,800 Ha in Karur and Dindigul Districts. From Notifying the reserve to now establishing a dedicated conservation centre, this journey is like a dream come true @RRajakannappan@tnforestdept #slenderloris
முத்தரையர்களின் அரசியல் அதிகாரமீட்பு மாநாடு 2026 -ன் தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம்!
அறிவிப்பு:---
பேரன்புடையீர்! வணக்கம்!
கடந்த 25.01.2026 தேதியன்று திருச்சி ஆலம்பட்டிபுதூரில் தமிழர் தேசம் கட்சி நடத்திய "முத்தரையர்களின் அரசியல் அதிகாரமீட்பு மாநாடு" வெற்றி மாநாடாக அமைந்து தமிழக அரசியல் மட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி பலதரப்பில���ம் கவனங்களை ஈர்த்தது.
மேற்படி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 183 தீர்மானங்களை விளக்கி மாவட்ட தலைநகரங்களில் "தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம்" நடத்துவதென நேற்றைய தினம் (17.02.2026) நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவித்திருந்தோம்.
அதன்படி முதற்கட்டமாக நடைபெறவேண்டிய பொதுக்கூட்டங்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் ���ுழு ஒத்துழைப்பு நல்கிடுவீர்!
பேரன்புடையீர்! வணக்கம்!
தமிழர் தேசம் கட்சி, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க "முத்தரையர்களின் அரசியல் அதிகாரமீட்பு மாநாடு" எதிர்வரும் 25.01.2026 தேதியன்று திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டிபுதூரில் நடைபெறுவதையொட்டி அமைக்கப்பட்டுள்ள 9 மாநாட்டுக் குழுக்களுடன் கூடுதலாக 2 குழுக்களை பின்வருமாறு அமைத்து ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மேற்கண்ட குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் குழு உறுப்பினர்களைத் தேர்வுசெய்து திட்டமிட்டுக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கட்சியினர் ���ுழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்!
பேரன்புடையீர்! வணக்கம்!
தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க "முத்தரையர்களின் அரசியல் அதிகாரமீட்பு மாநாடு" எதிர்வரும் 25.01.2026 தேதியன்று திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டிபுதூரில் நடைபெறுவதையொட்டி மாநாட்டுப்பணிகளை திறம்பட முன்னெடுப்பதற்கு ஏதுவாக பின்வருமாறு குழுக்கள் அமைத்து ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
கு���ுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் குழு உறுப்பினர்களைத் தேர்வுசெய்து திட்டமிட்டுக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்!