நவீன யுகத்தில் வாழ்வில் கடன் இல்லாமல் வாழவே முடியாத நிலையில் கடன் ஒரு விதத்தில் 99 சதவீதத்தினருடன் இருக்கிறது!
சிலருக்கு கடன் கட்டுக்குள் இருக்கும் வரை பிரச்னை இல்லை அதை மீறும் போது,வருமானம் இழக்கும் போது தடுமாறும் சூழல் ஏற்படுகிறது!
பெரும்பாலான கடன்கள் தனக்காக யாருக்கும் ஏற்படுவ��ில்லை குடும்பத்திற்காக, கூட பிறந்தவர்களுக்காகவே ஏற்படுகிறது!
ஒரு கட்டத்தில் கடன் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு வரும் போது பலர் பதட்டத்தில் தன்னிலை இழக்கின்றனர்.
அவர்களுக்காகவே இந்ந பதிவு!
யாரும் வேணுமென்றே அடுத்தவரிடம் கையேந்தனும்,வட்டி கட்டனும் என கடன் வாங்குவதில்லை வாழ்க்கை நிர்பந்தம் சிலரை கடனில் தள்ளி விடுகிறது.
முதலில் பெரிய கடனில் மாட்டிவிட்டோம் என பதட்டப்பட���தீர்கள்.
இரண்டாவது உங்களை நம்பி கடன் கொடுத்தவர்களை சலித்து கொள்ளாதீர்கள்.ஒரு நேரத்தில் தடுமாறி நீங்க நிற்கும் போது அவர்கள் தான் உதவினார்கள் வட்டியாக இருந்தாலும் சம்மதித்து வாங்கி இருப்பீர்கள்.
எடுத்தவுடன் உங்களுக்கு பெரிய கடன் வந்து விடவில்லை சிறுக சிறுகதான் வந்து இருக்கும்.
சிறிய கடன் முதலில் அடைத்தாலே உங்களுக்கு தன்னம்பிக்கை வந்து விடும்.கடன் கொடுத்தவர்கள் கேட்டா��் உங்களை அழைத்தால் உடனே போன் எடுங்கள் தயந்து பேசுங்கள்!டைம் கேளுங்கள்!
சிலர் பண விசயத்தில் தயவு பார்க்க மாட்டார்கள் அவர்கள் அப்படித்தான் என கடந்துவிடுங்கள்!
எந்த அளவுக்கு உங்கள் வாக்கில் உண்மை உள்ளதோ அந்த அளவுக்கு உங்களுக்காக இரக்கப்படுவார்கள்.அவர்களும் ஒரு நேரத்தில் உங்களுக்கு உதவும் போது கடவுளாக தெரிந்தவர்கள் என்பதை மனதில் வையுங்கள்!
இனி ஜோதிடத்திற்கு வருகிறேன்!
செவ்வாய் கிழமை காலை செவ்வாய் ஒரை 6-7 மணிக்கு நன்றாக குளித்துவிட்டு யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ அவர்கள் பெயரை ஒரு பேப்பரில் எழுதி அதில் ��ிறிய தொகையை முருகன் படத்திற்கு முன்பு வைத்து வேண்டுங்கள் கடன் அடையும்.
அபிராமி அந்தாதியின் 54வது பாடல்:
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டுநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்கல்லாமை கற்ற கயவர் தம்பால், ஒருகாலத்திலும்செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே!
பாடல் விளக்கம்:
நம்மிடம் பொருள்
இல்லாத குறையை (வறுமையை) பிறரிடம் கூறி, அவர்களிடம் கையேந்தி இழிவுபட்டு நிற்கக்கூடாது என்று உங்கள் மனதில் நினைப்பீர்களானால், என்றும் அழியாத தவப்பேற்றை அருள்பவளும், கல்வி அறிவு இல்லாத கயவர்களிடம் நாம் சென்று சேராதபடி காப்பவளுமாகிய திரிபுரை (அன்னை அபிராமி) அம்மையின் திருவடிகளைச் சரணடையுங்கள்.
பாடலின் பலன்:இப்பாடலைத் தினமும் நம்பிக்கையுடன் பாடி வந்தால், ஒருவரிடமும் கையேந்தும் நிலை வராது; நம் வறுமை மற்றும் கடன்கள் தீரும்.
மற்றபடி நாணயத்திற்காக கடுமையான உழைப்பு ஆன்��ிக வழிபாடு இவற்றுடன் கடுமையாக உழைத்தால் கடனையும் வெல்லலாம்.
#மீள்பதிவு
அன்புடன்
தேஜஸ் 🙏
ஜோதிடம் & வாழ்வியல் வழிகாட்டி.
ஃபோர்ட்டலேசா பிரேசில்.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நம்ம கல்பாக்கம்: ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுத் தருணம்!
நாம் வழக்கமாக சினிமா நடிகர்களின் பட வெளியீ���்டையோ அல்லது கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளையோ தான் சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்க்கிறோம். ஆனால், நம் எதிர்காலத்த���யே மாற்றப் போகும் ஒரு மாபெரும் நிஜ மாயாஜாலம், சென்னையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது. ஆம்! கடந்த வாரம், ஜூன் 26, 2026 அன்று, இந்தியா உலக அறிவியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை எழுதியுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் பல கோடிகளைச் செலவழித்து, "இது எங்களுக்கு சாத்தியமில்லை" என்று கைவிட்ட ஒரு அதிநவீன அணுசக்தித் தொழில்நுட்பத்தை, நமது இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இந்தச் சாதனை வெறும் இயந்திரங்களின் வெற்றியல்ல; இது இந்தியாவின் பெருமை, நமது விஞ்ஞானிகளின் பல தசாப்த காலத் தவம்!
இதைப் பற்றி ஒவ்வொரு சாமானியனும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏன் தெரியுமா? இது நமது குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்புக்கான உத்தரவாதம். வாருங்கள், கல்பாக்கத்தில் என்ன சாதித்திருக்கிறார்��ள் என்பதை பார்ப்போம்.
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்: PFBR⚛️(Prototype Fast Breeder Reactor)
கடந்த ஏப்ரல் 6, 2026 அன்று, கல்பாக்கத்தில் உள்ள PFBR அணு உலை தனது முதல் 'கிரிட்டிக்காலிட்டி' (Criticality - தடையற்ற தொடர் அணுர்வினை) நிலையை அடைந்து வெற்றி பெற்றது. இது உலகளாவிய அளவில் ஒரு மாபெரும் சாதனை.
இது ஏன் அவ்வளவு சிறப்பு?
சாதாரண அணு உலைகளை ஒரு விறகு அடுப்பு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் ஒரு கிலோ விறகை வைத்தால், அது எரிந்து வெப்பத்தைக் கொடுத்துவிட்டு சாம��பலாக மாறிவிடும். ஆனால், கல்பாக்கத்தில் நமது விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த 'Fast Breeder Reactor' என்பது ஒரு அட்சய பாத்திர அடுப்பு! இதில் நீங்கள் ஒரு கிலோ எரிபொருளைப் போட்டால், அது உங்களுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுப்பது மட்டுமில்லாமல், மீதமாக 1.2 கிலோ புதிய எரிபொருளை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும். அதாவது, தான் பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை இது உற்பத்தி செய்யும் (Breeding). கேட்பதற்கே மாயாஜாலம் போல இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை!
நம் மண்ணின் வளம், நம் கையில் (தோரியம் கனவு):
இந்தியாவில் யுரேனியம் (Uranium) என்ற அணு எரிபொருள் மிகக் குறைவு. நாம் வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். ஆனால், கேரளா மற்றும் தமிழகத்தின் கடற்கரை மணலில் 'தோரியம்' (Thorium) என்ற கனிமம் கொட்டிக் கிடக்கிறது. உலகத்திலேயே அதிக தோரியம் வளத்தைக் கொண்ட நாடு இந்தியாதான்!
டாக்டர் ஹோமி பாபா மற்றும் அப்துல் கலாம் கண்ட கனவு இதுதான்: "நமது சொந்த மண்ணில் உள்ள தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும்." கல்பாக்கத்தின் இந்த வெற்றி, அந்த மாபெரும் கனவின் வாசற்படியைத் திறந்து வைத்துள்ளது. இனி மின்சாரத்திற்காக எந்த ஒரு வெளிநாட்டிற்கும் நாம் கையேந்த வேண்டியதில்லை. அடுத்த 300 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ள முடியும்!
உலகை வியக்க வைத்த "பசுமை ஹைட்ரஜன்" சாதனை (Green Hydrogen)
இப்போது ஜூன் 26-ஆம் தேதி நடந்த அந்த மாபெரும் ம��யாஜாலத்திற்கு வருவோம். கல்பாக்கத்தில் உலகின் முதல் அணு-ஆற்றல் உதவியுடன் செயல்படும் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ஏன் மு��்கியம்?
எதிர்காலத்தின் எரிபொருள் ஹைட்ரஜன்தான். பெட்ரோல், டீசல், நிலக்கரி என அனைத்தையும் எரித்தால் கரும்புகை (கார்பன்) வரும், சுற்றுச்சூழல் சீரழியும். ஆனால், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தினால் புகைக்குப் பதிலாகக் கடைசியாக வருவது சுத்தமான 'தண்ணீர்' மட்டுமே!
ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. இந்த நல்ல ஹைட்ரஜனைத் தயாரிக்க, தண்ணீரை (H2O) பிரித்து எடுக்க வேண்டும். அப்படிப் பிரிக்க, மிகப்பெரிய அளவில் மின்சாரம் தேவைப்படும். அந்த மின்சாரத்தைத் தயாரிக்க மீண்டும் நிலக்கரியை எரிக்க வேண்டும்! இது "சுத்தமான வீட்டிற்குள் குப்பையைக் கொண்டு வருவது" போல முரண்பாடாக இருந்தது.
நமது விஞ்ஞானிகளின் அசாதாரண தீர்வு:
கல்பாக்கம் IGCAR (இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்) விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான வழியைக் கண்டுபிடித்தனர். அணு உலையில் மின்சாரம் தயாரிக்கும் போது, வெளிப்படும் அபரிமிதமான வெப்பத்தை வீணாக்காமல் நேரடியாகப் பயன்படுத்தி, 'காப்பர்-குளோரின் சுழற்சி' (Copper-Chlorine cycle) என்ற முறையில் தண்ணீரைச் சூடாக்கி, பிர��த்து ஹைட்ரஜனை உருவாக்கியுள்ளனர்.
அதாவது, எந்த ஒரு மாசும் இல்லாமல், வளிமண்டலத்தில் ஒரு துளி கார்பனைக் கூட வெளியிடாமல்,
இன்றைய தினம் சட்டப்பேரவையில், தமிழக முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்கள், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக வேறு சில இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், புதிய இடம் எது என��பதையும் முதலமைச்சர் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதப்படுத்துவதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உ��்ளது.
பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுத்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, நிலம் கையகப்படுத்துவது, தேவையான உரிமங்கள் பெறுவது என, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும்.
இன்றைய தேவைக்கே சென்னை விமான நிலையம் போதுமானதாக இல்லை என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு சுமார் 1,300 ஏக்கர். ஆனால், ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர், நவி மும்பை விமான நிலையம் 2,866 ஏக்கர், டெல்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.
இவ்வளவு குறைந்த பரப்பளவில் இயங்கும் சென்னை விமான நிலையம், குறைந்தபட்சம் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். ஆனால், விமான நிலையத்தில் தரையிறங்கும் பகுதியில் இருந்து வெளியே வந்து, உள்ளூர் போக்குவரத்தை அடைவதற்கே பயணிகள் இன்று பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சென்னை, இன்று விமானப் பயணிகள் கையாளும் திறனில் 5-வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட சென்னை விமான நிலையத்தை விட டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் முன்னிலையில் உள்ளன.
மேலும், சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸிவேக்கள் மற்றும் ஏர்பிரிட்ஜ்���ள் இல்லாத காரணத்தால், பெரிய விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட Code F விமான நிலையமாக சென்னை விமான நிலையம் வகைப்படுத்தப்படவில்லை. இதனால் A380 போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க, சென்னை விமான நிலையம் ஏற்றதாக இல்லை. தென்னிந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் பெரிய விமானங்களை கையாளும் Code F விமான நிலையங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிகள் வரலாம், போகலா��். ஆட்சிகள் மாறலாம். ஆனால் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகத்தின் காரணமாக, ஒரு தரமற்ற கட்டிடத்தை விமான நிலையம் என்று அழைக்கும் நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று வருந்தக்கூடாது. எனவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான பொருத்தமான இடத்தை உடனடியாகத் தேர்வு செய்து, விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான செய்திகளின்படி, பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான 5,746 ஏக்கரில் சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஏற்கனவே கையகப்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பரந்தூர் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், அந்த 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு இனி என்ன செய்யப் போகிறது? இதற்கான தெளிவான பதிலையும் தவெக அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.