இது என்னடா வம்பா போச்சு????
விஜயகாந்த் பையன் என்பதற்காக உங்களை தமிழக மக்கள் என்ன தான் பண்ணனும்னு சொல்றீங்க..
கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க விஜய பிரபாகரன் அவர்களே..
அதாவது சமீபத்தில் மேடையில் பேசும்போது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் அவர்கள் பேசிய காணொளி பார்க்க நேர்ந்தது..
அதில் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்த போது பல பேர் பல விதமான விமர்சனங்கள் முன் வைத்தார்கள்.. அதில் ஒரு சில பேர் கேப்டன் என்ற வைரத்தை தான் இழந்து விட்டோம்.. விஜய் என்னும் தங்கத்தை இழந்து விடாதீர்கள், என்று கூறி இருந்தனர்..
இதை சுட்டிக்காட்டி பேசிய விஜய பிரபாகரன் அவர்கள்.. வைரத்தை இழந்தோம் என்று சொல்கிறீர்கள்.. வைரத்தின் மகனை இழக்க மாட்டோம் என்று ஏன் யாரும் சொல்லவில்லை.. ஏன் எனக்கு வாய்ப்பு தர மறுக்கிறீர்கள்.. என்று ஆதங்கத்துடன் பேசி உள்ளார்..
அதாவது விஜய பிரபாகரன் அண்ணா.. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மீது தமிழக மக்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம்.. அது என்றுமே மாறாது. ஒரு போதும் மாறாது..
அவர் அவரது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்.. அப்படி அவர் அந்த இடத்திற்கு சும்மா வரவில்லை.. அவரது அப்பா ஒன்னும் பெரிய அரசியல் தலைவரோ அல்லது இவரைப்போல மக்கள் சேவை செய்தவராகவோ தெரியவில்லை.. அவர் தன்னுடைய சொந்த உழைப்பால் உழைத்து மக்கள் சேவை செய்து ரொம்ப கஷ்டபட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ஆனவர்.. சும்மா அவர் பெயர் மட்டும் வைத்து உங்களுக்கு வாய்ப்பு தர முடியாது.. அதற்கு சில விஷயங்கள் நீங்கள் சரியாக செய்திருக்க வேண்டும்..
அவர் யாரை, எந்த கட்சியை எதிர்த்து கடைசி வரை அரசியல் செய்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?? அவர் மண்டபத்தை இடித்து அவருக்கு அரசியல் ரீதியாகவும் , மற்று பல வழிகளிலும் நெருக்கடி கொடுத்த கட்சி எது தெரியுமா.. தன் அரசியல் காலம் முடியும் வரை ஒரே ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை அது எந்த கட்சி என்று தெரியுமா??
மேடையில் வடிவேல் என்ற ஒரு காமெடியன் எந்த கட்சிக்காக விஜயகாந்த் அவர்களை கேவலமாக விமர்சித்தார் தெரியுமா?? அவர் அவ்வளவு கேவலமாக விமர்சிக்கும் போது அந்த கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் கூட எப்படி சிரித்து கொண்டிருந்தார்கள் என்றாவது தெரியுமா..
தெரிஞ்சா நீங்க அந்த கூட்டணியில் இப்போ இருந்திருக்கவே மாட்டீங்க.. இப்போ வந்து வைரம் தங்கம்.. வைரத்தின் மகன் என்று வசனம் பேசுறீங்க.. முதல்வர் விஜய் அவர்கள் எப்படி வேணா இருக்கட்டும்.. விஜயகாந்த் அவர்கள் யாரை எந்த கட்சியை தீவிரமாக எதிர்த்தாரோ அந்த கட்சியை தான் விஜய் அவர்களும் தீவிரமாக எதிர்த்து வருகிறார்.. அது தான் அவர் அவரது அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு செய்யும் உண்மையான மரியாதை..
திமுக ஆட்சியை. திமுகவின் குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று மேடைக்கு மேடை பேசி வந்தவர் விஜயகாந்த் .. அந்த அண்ணனின் ஆசை தம்பி விஜய் இன்று நிறைவேற்றி உள்ளார்.. நியாயமாக நீங்கள் செய்ய வேண்டியது அவர் செய்கிறார்.. அப்போ மக்கள் யாரை கொண்டாடுவாங்க.. அவரை தானே..
நீங்க என்ன பண்றீங்க.. விஜயகாந்த் அவர்களுக்கு பல வழிகளில் நெருக்கடி கொடுத்த அந்த கூட்டணியில் இருக்கீங்க.. ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு ஆசைப்பட்டு . அப்பாவை அவமானப்படுத்தி கிண்டல் கேலி பண்ணி அரசியல் செய்த அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வர் விஜய் அவர்களை விமர்சிக்கிறீர்கள்.. உங்களுக்கெல்லாம் விஜய் அவர்களை பற்றி பேச தகுதியே இல்ல...
வைரத்தின் மகனை கண்டுக்கவில்லை.. வாய்ப்பு தரவில்லை என்று மக்களை பார்த்து கேட்கிறீர்கள்.. மக்கள் எல்லாம் பார்த்து கூர்ந்து கவனித்து வருவதால் தான் சரியான நபரை தேர்ந்தெடுத்துள்ளார்கள்..
இங்க வந்து அழுகிறது விட்டுட்டு அப்பாவின் ஆசை நிறைவேற்றிய முதல்வர் விஜய் அவர்களுடன் இணைந்து அரசியல செய்தால் உங்களுக்கு எதிர்காலம் இருக்கு..
எவ்வளவு நாள்தான் கேப்டன் கேப்டன் என்று சொல்லி ஓட்டு கேக்க முடியும்.. உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள். அதன் பிறகு மக்கள் முடிவு செய்வார்கள்.. தங்கமா ?? வைரமா?? என்று..
இது genzi காலம்..புரியும்ன்னு நினைக்கிறேன்.. @PremallathaDmdk
#cmvijay #tvk
#captainvijayakanth #vijayaprabakaran #dmdk
அமைச்சரா அறிவிச்ச நாள்ல இருந்து இப்ப வரைக்கும் எத்தனையோ மறைமுகமான தாக்குதல், அவதூறுகள் இவங்க மீது மன்னார்குடியில 🖤❤️ தோத்தவன் பண்ணிட்டு இருக்கான்...
DMK IT Wing வச்சிகிட்டு அவதூறுகள்!
அதன் தலைமை யாருன்னு ஊருக்கே தெரியும்! இவரை விட சிறந்தவர் என்று பெயர் வாங்கிட கூடாதுன்னு பொறாமை. அதானடா @TRBRajaa😡
நல்ல விதமாக பொறந்து இருந்தா இப்படி ஒரு பெண் மேல அவதூறு பரப்பிட்டு இருக்க மாட்டான் 🖤❤️
ஆனா எதுக்கும் அசராம பெண் சிங்கம் மாதிரி நிக்கிறாங்க அமைச்சர் அவர்கள் 🥳😍
@Keerthana4VNR 🔥🔥🔥
திமுக வரலாற்றை புரட்டி பார்த்தால் மயக்கம் தான் வரும்😡😡😡
1977 எம்.ஜி.ஆர் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. திமுக தலைவர் கருணாநிதி பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். "உடன் பிறப்பே… பார்த்தீரா நடிகரின் ஆட்சியை..." "நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்" என்று...
அடுத்த நாள் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் "ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சித் தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக் கணைகளை வீசி, "அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே" என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. "உடன்பிறப்பே. பார்த்தாயா? நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா. மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல்? (நாஞ்சில் மனோகரன்) இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணி முத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல்" என்று தொடங்கி "நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து இலட்ச ரூபாயில் பங்களா எப்படி வந்தது" என்று போட்டு தாக்கியிருந்தார்.
மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் "ஏ கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து இலட்சமா? விற்பதுக்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா" என்று கேட்டு எழுதி கருணாநிதி சொல்வதை அபாண்டம், அண்டப் புளுகு, வடிகட்டின பொய் என எழுதியிருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் "உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்க வில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா? அனுப்பு பணத்தை... வாங்கு வீட்டை" என்று எழுதி முடித்தார்.
அடுத்த நாளில் இருந்து தொண்டன் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தான். அனுப்பும் பணம் வந்தபடியே இருந்தது. தினசரி ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்றும் எழுதினார். தங்கள் பெயரை தலைவர் குறிப்பிடுகிறார் என்றால் தொண்டன் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? தொடர்ந்து அனுப்பினான். பதிமூன்று இலட்சம் ரூபாய் வரை பணம் சேர்ந்ததாக தகவல். ஆனால், முரசொலியில் அனல் பறந்த அந்த போட்டி கட்டுரை அதன்பின்னர் இல்லாமல் போனது; வீடு வாங்குவது குறித்து மூச்சுப் பேச்சில்லை.
சிறிது காலத்தில் அரசியல் காட்சிகள் மாறுகின்றன. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் கருணாநிதியின் திமுக பக்கம் திரும்பி வந்தார். அதே அண்ணா நகரில் ஒரு பொது கூட்டம். கருணாநிதியும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருந்தார்கள். மைக்கை பிடித்த கருணாநிதி, நாஞ்சில் மனோகரனை வானளாவப் புகழ்ந்தார். நாஞ்சிலாரைப் போல் உண்டா? என்றார். கீழே அமர்ந்திருந்த திமுக, தொண்டன் வழக்கம்போல கை தட்டிக்கொண்டு இருந்தான்.
கொத்தடிமைகள் அசருவதேயில்லை.
கை தட்டினார்கள் தட்டினார்கள். தட்டிக் கொண்டே இருக்கிறார்கள் சாகும் வரை கொத்தடிமைகளாக...
அதான் பாத்ரூம்ல 3 மணி நேரம் ஒளிஞ்சிட்டு இருந்ததை உலகமே பாத்துச்சே எதிர்க்கட்சி தலைவர் அவர்களே @Udhaystalin 🥱
அப்புறம் நீங்க ஊர் ஊராக போய் எவ்வளவுதான் காவிரி விஷயத்துக்காக ஜெயிலுக்கு போனேன்னு அழுத்தி சொன்னாலும்,
ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசி தான் ஜெயிலுக்கு போனீங்கன்னு மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க,
So இந்த Narrative எல்லாம் மக்கள்கிட்ட எடுபடாது!
#Bathroom #Toilet #Dmk #Tvk
அண்ணாவால் பேசிப் பேசி வளர்ந்த திமுக,
உதயநிதியால் பேசி பேசி அழிகிறது...
ஒரு முதலமைச்சரை ஆபாசமாக பேசுறாரு திமுக எம்எல்ஏ! ஆனால் அதை தடுக்க வேண்டிய உதயநிதியோ சிரிச்சுக்கிட்டு இருக்காரு!
#Vijay#Tvk#Dmk#Dmkfail
"நூறு நாள்ல என்னடி தொறப்பனு" என்று அமைச்சர் கீர்த்தனா அவர்களை வாடி போடி என்ற ரீதியில் பேசுறாரு இந்த திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர் 🤬
பெண் அமைச்சர்கள்லிருந்து இணையத்துல களமாடுற பெண்கள் வரைக்கும் ஆபாச தாக்*குதல் நடத்திட்டு இருக்கானுங்க திமுக ஆபாச கும்பல்.
அமைச்சரை வாடி போடி என்று பேசிய துரை சந்திரசேகரன் மீது வீடியோ அடிப்படையில் காவல்துறை வழங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏 @tnpoliceoffl
அப்புறம் இந்த துரை சந்திரசேகரன் பேசிய போது அதை மிகவும் ரசித்து கேட்டு கொண்டு இருந்தார் மாண்புமிகு 3 மணி நேரம் பாத்ரூம்ல ஒளிஞ்சிட்டு இருந்த எதிர்க்கட்சி தலைவர் அவர்கள்!
அவரோட அம்மாவை, மனைவியை இப்படி வாடி, போடி ன்னு பேசினா இப்படி ரசித்து பார்த்து கொண்டு இருப்பாரா உதயநிதி?? @Udhaystalin@KanimozhiDMK
அமைச்சர் கீர்த்தனாவை “வாடி, போடி” என ஒருமையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர்…
பெண் அமைச்சர் என்ற மரியாதைகூட இல்லாமல் இப்படி பேசுவதுதான் திமுகவின் அரசியல் நாகரிகமா?
பெண்களுக்கு மரியாதை என்று மேடைகளில் பேசுவது வேறு… நடைமுறையில் கடைப்பிடிப்பது வேறா? @KanimozhiDMK@mkstalin
Pls take immediate action @CMOTamilnadu@tnpoliceoffl@CTR_Nirmalkumar
This is the value our CM commands, even in the eyes of another Chief Minister.
Even Amit Shah knows how to treat and respect our leader.
This is the worth of our Anna Vijay. 🔥
ஒரு TVK MLA, கலைஞர் கருணாநிதி என்று பெயரை குறிப்பிட்டு பேசியதற்காக எங்கள் அண்ணன் விஜய் மன்னிப்பு கேட்டார்.
ஆனால், ஒரு LOP-ஆக இருந்துகொண்டு முதலமைச்சரை ஒருமையில் பேசும்போது, அதை பார்த்து LOP சிரிக்கிறார்.
இதுதான் உங்களுக்கும் TVK-க்கும் உள்ள வித்தியாசம்.
எல்லாவற்றுக்கும் சேர்த்து இன்னும் அனுபவிப்பீர்கள். மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். @Udhaystalin@arivalayam@mkstalin
முதலமைச்சரை ஒருமையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர்…
ஒரு MLA இப்படியா பேசுவது? இன்னும் யாரும் திருந்தவில்லை போல தெரிகிறது. மக்களின் பிரதிநிதியாக இருந்து இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது.
அடுத்த தேர்தலில் மக்கள் தங்களின் பதிலை நிச்சயம் வழங்குவார்கள். “இவர்களையெல்லாம் எப்படி மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்?”
@CMOTamilnadu@tnpoliceoffl
கேவலமாக இல்லையா உங்களுக்கு? இப்படி பேசுவதைக் கூட ரசித்து சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள் @Udhaystalin@Anbil_Mahesh
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் @KanimozhiDMK
அமைச்சர் கீர்த்தனாவை “வாடி, போடி” என ஒருமையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர்…
பெண் அமைச்சர் என்ற மரியாதைகூட இல்லாமல் இப்படி பேசுவதுதான் திமுகவின் அரசியல் நாகரிகமா?
பெண்களுக்கு மரியாதை என்று மேடைகளில் பேசுவது வேறு… நடைமுறையில் கடைப்பிடிப்பது வேறா? @KanimozhiDMK@mkstalin
Pls take immediate action @CMOTamilnadu@tnpoliceoffl@CTR_Nirmalkumar
ஆபாச திமுக!
“பெண்ணியம்… பெண் விடுதலை…” என்று மேடையில் வசனம் பேசுவார்கள்.
“பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்” என்று மார்தட்டுவார்கள்.ஆனால், ஒரு பெண் “அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரை ஆபாச வார்த்தைகளால் கூட்டமாகத் தாக்குகிறார்கள்.
இதுதான் திமுகவின் பெண் விடுதலைக் கோட்பாடா?
தங்களது அரசியலைப் புகழ்ந்தால், ஆட்சியைப் பாராட்டினால் அவர்களைப் பாராட்டுவது. எதிர்க்கருத்து கூறினால், அவர் பெண் என்றும் பாராமல், ஆபாச வார்த்தைகளால் வசைபாடி, தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது.
வாதத்திற்கு பதிலாக வசைபாடும் அரசியல் ஜனநாயகம் அல்ல, அது அரசியல் வக்கிரம். பெரியார் பெயரை உச்சரிப்பதால் மட்டும் கொள்கை வந்துவிடாது. பெண்ணை மதிக்கும் பண்பும் வேண்டும்.
பேரறிஞர் அண்ணா காலத்திற்குப் பிறகான திமுகவில் உட்புகுத்தப்பட்ட ஆபாசமும் அவதூறும் திமுகவினரின் DNA -வில் ஊறிப்போய் தற்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
“அறிவார்ந்த IT Wing” என்று எவ்வளவு சொன்னாலும், மக்களுக்குத் தெரியும்,
அது அறிவார்ந்தது அல்ல… ஆபாச IT Wing என்று!
ஆனால் காலம் மாறிவிட்டது.
மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில், பெண்களை இழிவுபடுத்தி அரசியல் செய்ய யாருக்கும் இடமில்லை.
பெண்களை இழிவுபடுத்தினால் பதவி, கட்சி, ஆள் என்ற பாகுபாடின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஆபாச அரசியலுக்கு இனி சட்டத்தின் மொழியில்தான் பதில்!
This is exactly what these news channels keep doing in Tamil Nadu.
At least now, try to see the truth and stand by what is right.
#Breaking#News#TN#CM#Vijay#Media
“அறங்காவலர்கள் முந்தைய ஆட்சியைப் பற்றி புலம்புகிறார்கள்” - அமைச்சரின் இந்த வார்த்தைகள், சிலருக்கு இப்போது தூக்கத்திலும் கிலி பிடிக்க வைக்கும் எச்சரிக்கை மணியாக மாறிவிட்டது போல!
அதனால்தான் யார் என்ன சொன்னார்கள் என்று அறங்காவலர்களைத் தேடித் தேடி விசாரிக்கும் பதற்றம்.
சட்டமன்றத்தில் "சிவன் சொத்து குலநாசம்" என்று வீர வசனம் பேசிவிட்டு, வீட்டுக்குச் சென்றதும் போன் போட்டு புலம்புவதையே தினசரி வழக்கமாக வைத்திருக்கும் MR Snake babu ! குலநாசம் தான் போல!
கோவில் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றதும், உண்மை வெளிவந்துவிடுமோ என்ற பயத்தில் உண்மை பேசியவர்களையே தேடும் அவசரம்.
அதிகாரத்தில் ஆடிய ஆட்டங்கள் எல்லாம் இப்போது ஒவ்வொன்றாக திருப்பி அடிக்கத் தொடங்கிவிட்டன.
நிம்மதி தேடி கோவிலுக்குப் போனாலும்… இனிமேல் சூரசம்ஹாரம் தான்!