📢 புதுச்சேரி மாநில திமுக மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
🗓️ 07.06.26 | ⏰ காலை 10.30
📍 திமுக தலைமை அலுவலகம் லப்போர்த் வீதி
திமுக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில்
மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயகுமார் ஆலோசனைகள் வழங்குகிறார் கழக & மாணவரணி நிர்வாகிகளும் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்
நெஞ்சம் எல்லாம் நிறைந்து எம்மை வழிநடத்திடும் தன்னிகரில்லா தலைவா உம்மைக் கண்டு உலகம் வியந்து கொண்டே இருக்கும் என்றும் உங்கள் புகழ் பாடி உங்கள் வழியில்...
எஸ்.பி.மணிமாறன்
மாநில அமைப்பாளர்,
திமுக மாணவர் அணி புதுச்சேரி
#kalaingardmk#KalaignarForever#Kalaignar103@Udhaystalin
சீரழியும் நிலையினைக் கண்டும் காணாமல்,
சிரிக்கின்ற முக��ூடி போடுகின்றார்!
சிறந்த முதல்வர் என்று மகுடம் சூடிய காலம் போய்,
சிரிப்பு முதல்வர் என உலகமே எள்ளுதே!
மாற்றத்தை நாடி ஏமாந்த தமிழகம்,
வேதனையில் வாடி இன்று வருந்துதே
எஸ்.பி.மணிமாறன்
புதுவை மாநில அமைப்பாளர்
திமுக மாணவரணி
ஏமாற்றத்தில் தமிழ்நாடு!
சிறப்பான ஆட்சியைத் தினம்தோறும் பார்த்த மக்கள்,
சிறுபிள்ளை பேச்சினைக் கேட்டு - அன்று
மாற்றத்தைத் தேடியே வாக்களித்தப் பாவத்தால்,
ஏமாற்றக் கடலினில் வீழ்ந்தார்!
ஆயிரம் பொய் சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்,
அடுத்தவர் உழைப்பிலே வாழ்கின்றார் - இன்று
திமுக மாணவர் அணியின் செயலாள���் பெருமதிப்பிற்குரிய @ErodeVeeramani அவர்களை நேரில் சந்தித்து, புதுச்சேரி மாநில அமைப்பாளர் அண்ணன் இரா.சிவா அவர்களின் ��ழிகாட்டுதலின்படி, புதுச்சேரி திமுக மாணவர் அணியின் ஆலோசனை கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை பெற்ற நிகழ்வு.
@mkstalin
@Udhaystalin
தமிழ்நாட்டில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த முடியாமல் கைகட்டி நிற்கும் ஆட்சி, இனி அதற்கென தனியாக ��ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் துறை” ஒன்றையே உருவாக்கிவிடுமோ என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.
#TamilNadu #LawAndOrder #TVKVijayFails #BreakingNews
"தன் பதவிக்கே 'கண்டம்' இருக்குன்னு கணிக்கத் தெரியாத ஒருத்தர் எப்படிங்க நாட்டுக்கு ஆலோசனை சொல்லுவாரு? நியமிச்ச வேகத்துல ஜோதிடர் பதவியை ரத்து செஞ்ச குதிரை பேர அரசு! ஆரம்பமே அமர்க்களம்!" 💥😂
#TVKGovernment#Vijay#AstrologyFail#TNAssembly2026
ஜோதிடர்: சார், உங்க ஜாதகம் சூப்பரா இருக்கு!
அரசு: உங்க ஜாதகம் தான் சரி இல்ல.. கிளம்புங்க! 🏃♂️
ஒரே நாளில் நியமனம்.. ஒரே நாளில் ரத்து! இதுதான் 'Real' ஆட்சியா? இல்ல 'Reel' ஆட்சியா?" 🎭😏
#CMVijay#RadhanPandit#PoliticalOSD#SocialMediaTrolls
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் ���ழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையா���தாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்க��ுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் க���ைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற���கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்���ேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங���களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
தம��ழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !