இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்!
மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதலமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க, தாராபுரத்தின் தன்மானம் காக்க அக்டோபர் 6-ஆம் நாள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்!
#VoteForDMK #DharapuramByElection #Dharapuram
உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், முழுக்க ���ுழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கைய��க் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.
திரு. @KN_NEHRU அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!
2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
கா��த்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவ��க்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
கற்றனைத்து ஊறும் அறிவு
2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளில��ம் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன்.
புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்!
#DonateBooks #DonateKnowledge #ReadShareRepeat
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள���கிறேன்.
“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிலையானது, பெருமையின் அடையாளமான அரசுப்பள்ளிகளாலேயே உருவானது. அதனால் நம் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் “#திராவிடமாடல்” அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி, அரசுப்பள்ளிகள் குறித்தான மக்களின் நம்பிக்கையை மெருகூட்டியது. அதன் விளைவாக ஆண்டுதோறும் மாணவச் சேர்க்கை முன்னேற்றப்பாதையில் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிலை தொடர வேண்டும்.
#Education #GovtSchools
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
“பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில், அவர் காட்டிய வழியில் சமூக நீதியையும் கல்வியையும் போற்றுவோம்.
எளிமை, நேர்மை மற்றும் தேசப்பற்றின் அடையாளமாகத் திகழும் அவரது புகழ் என்றும் நிலைத்திரு��்கும்."
சமூக நீதியின் முகவரி, நீதிக்கட்சியின் மாபெரும் ஆளுமை பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்குவோம்!
ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளை உடைத்து இடஒதுக்கீடு ஆணை, இந்து அறநிலையச் சட்ட��், மதிய உணவுத் திட்டம் மற்றும் மருத்துவக் கல்வியில் சமஸ்கிருதக் கட்டாயத்தை நீக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை எனத் தமிழ்நாட்டின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்!
பனகல் அரசருக்கு நமது புகழ் வணக்கம்!
கல்விப் புரட்சியாளர் தாத்தா இரட்டைமலை ���ீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது வரலாற்றுப் பணிகளைப் போற்றுவோம்!
திராவிடப் பேரியக்கத்தின் முன்னோடியும், சமூக நீதிக்காக வாழ்நாளெல்லாம் உழைத்தவருமான 'திராவிடமணி' அவர்களின் புகழை இந்நாளில் நன்றியோடு வணங்கிப் போற்றுவோம்!
மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிராக திமுக அரசு எடுத்த நடவடிக்கைளை சட்டமன்றத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள் விளக்கி உரையாற்றினார்!
#TNAssembly