குருதேவரிடம் நீ கொண்டுள்ள பக்தி எனக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தருகிறது. பக்திப் பெருக்கில் உன் இதயம் நிறையட்டும் என்று ஆசீர்வதிக்கிறேன். குருதேவரிடம் எனது பிரார்த்தனையும் இதுவே. நீ நீண்ட ஆயுளுடன், என் பிள்ளைகளைப் போல் நிலைத்த சாந்தியைப் பெறுவாயாக!
அன்னை ஸ்ரீசாரதாதேவி.
அழகு மிகுந்ததும் மூன்று கண்களால் அலங்கரிக்கப் பெற்றதுமான உனது முகம் எங்களை எல்லா பயங்களினின்றும் காப்பாற்ற வேண்டும். க��த்யாயனீ! உனக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ தேவீ மாஹாத்மியம்
பகவந்நாமத்தை சதா சர்வகாலமும் உச்சரிப்பதோடு, 'பக்தி வேண்டும்; குன்றாத அன்பு வேண்டும்; அநித்யப் பொருள்களான பொன் புகழ் போகம் இவைகளிலுள்ள பற்றுதல் அகல வேண்டும்' என்று மனமுருகிப் பகவானைப் பிரார்த்தனை செய்வீராக.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
உலக நாயகியாகிய நீ உலகைப் பாலிக்கின்றாய். உலக வடிவினளாகிய நீ உலகைத் தாங்குகின்றாய். உலக நாயகர்களால் நீ பூஜிக்கப் படுபவளாகின்றாய். உன்னை உள்ளன்புடன் வணங்குவோர் எவரோ அவரே உலகிற்குப் புகலிடமாய் விளங்குவோர்.
ஸ்ரீ தேவீ மாஹாத்மியம்.
பகவானே, உன்னைப் புரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. நாங���கள் வேண்டுவதெல்லாம் உன் திருவடிகளில் உறுதியான நம்பிக்கையும், பக்தியும் மட்டுமே.
மகாபுருஷ் ஸ்வாமி சிவானந்தர்.
வெறுப்பு, கடுஞ்சொல் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் அனைவரையும் நேசித்து மகிழுங்கள். எந்த நிலையிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
ஸ்ரீ புத்தர்
பக்தி முதிரும் போது,பக்தன் தேடாவிட்டாலும் உண்��ைஞானம் தானாகவே அவனிடம் வந்து சேர்கிறது.அதுபோல் நிறைஞானத்தில் இருந்து உண்மை பக்தியையும் பிரிக்க முடியாது.
ஸ்வாமி விவேகானந்தர்
இறைவனது அருள் ஒன்றையே நம்பி இருக்கவும், எந்த நிலையிலும் அதன் உதவியை வேண்டி அழைக்கவும் நாம் கற்றுக்கொண்டு விட்டால் அது அற்புதங்களை நடத்திக்கொண்டேயிருக்கும்.
ஸ்ரீ அ���்னை
பிரார்த்தனைக்கு பலன் உண்டு. மனமும் வாக்கும் ஒன்றுசேர்ந்து ஊக்கத்தோடு ஏதேனும் ஒரு பொருளைப் பிரார்த்தித்துக் கேட்குமானால் அந்த பிரார்த்தனைக்குப் பலன் உண்டு.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
அனைத்துயிர்களிலும் நாம் ஆண்டவனையே காண வேண்டும். இது சாத்தியமானால் பிறரது தவறுகளை எளிதில் நம்மால் மன்னிக்க முடியும். பிறரை நேசிப்பதும், அவர்களின் குற்றங்களை மன்னிப்பதும் ஆன்மிகத்தின் உயர்நிலைகளாகும்.
ஸ்ரீ மாதா ��மிர்தானந்தமயி
மனிதனுக்கு ஏற்பட்டுள்ள கடமைகளுள் கடவுளை அடைதல் தலையாயது. அதற்கு இடைஞ்சலாக எதெல்லாம் குறுக்கிடுகின்றதோ அதை மனிதன் அறவே புறக்கணித்து விடலாம். அதனால் குற்றம் ஒன்றும் உண்டாகாது.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
மனதில் தீய சிந்தனைகளை விடுத்து பக்தி உணர்வை வளர்க்கும் இறைவனின் நாமங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால் போதும். மனம் தானாக சுத்தமாகிவிடும்.
ஸ்ரீ அரவிந்தர்
முறையற்ற வாழ்க்கை மூலம் அல்லாமல் ஒழுங்கான, சமநிலையைான வாழ்க்கை மூலம்தான் நீங்கள் மகான்களின் அருளாசிகளபை��� பெறுவீர்கள். பின்பு தீமை உங்களை எப்பொழுதும் ஒரு கருவியாகப் பயன்படுத்தாது.
பரமஹம்ஸ யோகானந்தா