காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.164.64 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில், உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள நுண்துளை கருவிழி சீரமைப்பு மையத்தைத் (PINHOLE PUPILLOPLASTY CENTRE) திறந்து வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில், உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள நுண்துளை கருவிழி சீரமைப்பு மையத்தைத் (PINHOLE PUPILLOPLASTY CENTRE) திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில், உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள நுண்துளை கருவிழி சீரமைப்பு மையத்தைத் (PINHOLE PUPILLOPLASTY CENTRE) திறந்து வைத்து, நுண்துளை கருவிழி சீரமைப்பு அறுவைசிகிச்சை செய்து கொண்டவரிடம் தற்போதைய கண் பார்வையின் திறன் குறித்துக் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ (மிகச்சிறந்த உயிர்ப் பாதுகாப்பு) விருதினைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் பி.எஸ்.கெளரிசங்கர் ராஜா அவர்களின் மனைவி திருமதி கொ.சிரிஷா அவர்களிடம் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளுக்கு உதவிப் பொறியாளர்கள், வேளாண் அலுவலர், இளநிலை அறிவியல் அலுவலர், இளநிலை மேலாளர்கள், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 459 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 290 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பேருந்திலுள்ள வசதிகளைப் பார்வையிட்டார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 290 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பேருந்திலுள்ள வசதிகளைப் பார்வையிட்டார்.
#CMJosephVijay
மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.290.08 கோடி செலவிலான 250 புதிய பேருந்துகளின் சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
வெற்றிப் பயணம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு
#CMJosephVijay
வெற்றித் தமிழகம்தொலைநோக்குத் திட்டத்தின் ஓர் அங்கமாக, வெற்றிப் பயணம் திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்றும், 'வெற்றிப் பயணம்' திட்டம் செயலாக்கம் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
#CMJosephVijay
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் திரு.தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை திருமதி அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!
நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay