திருவள்ளூர் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். இந்த விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பதுடன் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்று அரசு உறுதி செய்ய வேண்டும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரைக் கொண்ட கோவில்பட்ட��� சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் கா. கருணாநிதி அவர்களுக்கு, இன்றைய தினம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம்.
தமிழ்நாட்டின் பல்வேறு உரிமைகளை மறுக்கும் டெல்லி ��ட்சியாளர்களையும் அவர்களுக்குப் பாதம் தாங்கும் அடிமைகளையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திப் பரப்புரை மேற்கொண்டோம்.
#TamilnaduVsDelhi என்ற ஜனநாயகப் போரில் வெல்வோம் ஒன்றாக!
#VoteForDMK #DMK4TN
மக்கள் சக்திக்கு முன், எந்த அதிகார வர்க்கமும் வெற்றிபெற்றதாக சரித்திரம் இல்லை.
தமிழ்நாட்டின் மீது மொழித் திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், உரிமைகள் பறிப்பு, தொகுதி மறுசீரமைப்பு என���் தொடர்ந்து நஞ்சைக் கக்கும் டெல்லி ஆதிக்கவாதிகளை வீழ்த்தி,
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து, மாநில சுயாட்சியை உறுதிசெய்ய ஓரணியில் ஓய்வில்லாமல் உழைப்போம்!
#Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் @MLARaja_SNKL அவர்க���ுக்கு புளியங்குடி பகுதியில் இன்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
#திராவிடமாடல் அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளையும், கழக கூட்டணி வரலாற்று வெற்றி பெற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வாக்களர்களிடையே எடுத்து கூறி உரையாற்றினோம்.
#NDA எனும் துரோகக் கூட்டணியை வீழ்த்தி ஓரணியில் வெல்வோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
செல்லும் இடமெல்லாம் திரளும் மக்கள் வெள்ளமே கழக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
இன்று மாலை ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள குமாரசுவாமி ராஜா சிலை அருகே கழகத்தின் வெற்றி வேட்பாளர் @SThangapandian2 அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தோம்.
தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை #Delimitation என்ற அநீதியின் மூலம் களவாட நினைக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களை முற்றிலும் நிராகரித்து உதயசூரியன் சின்னத்தில் அண்ணன் தங்கபாண்டியன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம்!
#Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்��ாடு_வெல்லட்டும்
கடந்த 5 ஆண்டுகளில் #திராவிடமாடல் அரசு செய்த சாதனைகளை முன்னிருத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.
அந்த வகையில் திருவில்லிபுத்தூர் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் தோழர் மகா���ிங்கம் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டோம்.
தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களை வஞ்சிக்கும் பாசிசவாதிகளையும் அவர்களின் சொல்படி கேட்டு தலையாட்டும் துரோக கூட்டத்தையும் வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து கதிர் - அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லட்டும், தமிழ்நாடு சிறக்கட்டும்!
#VoteForDMK #DMK4TN
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் கடற்கரை ராஜ் அவர்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் பாசிச கூட்டத���தின் சதிசெயல்கள் குறித்தும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அடிமை கூட்டத்தின் துரோகங்களையும் மக்களிடம் எடுத்துரைத்தோம்.
பாசிசவாதிகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு வலு சேர்த்து தமிழ்நாட்டை தலைகுணியாமல் காக்க உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#Vote4DMK #ஸ்டாலின்_த��டரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
கலைத்துறையிலும் மக்கள் சேவையிலும் காலத்தால் அழியாத முத்திரை பதித்த கேப்டன் அவர்களது மகன் சகோதரர் @vj_1312 அவர்கள் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் இன்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைச் சிதைக்கும் பாசிசவாதிகளையும் அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள முரட்டு அடிமைகளையும் வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் ஜனநாயப் போரில் தமிழ்நாடு அணியை வெற்றிபெற செய்ய முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு விருதுநகர் மக்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
#Vote4DMDK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டு��்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @ManimaranDS அவர்களை ஆதரித்து இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம��.
தமிழ்நாட்டின் மண்- மொழி- மானம் காக்க மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்தில் ஆதரவளிக்க கேட்டுக் கொண்டோம்.
தமிழ்நாட்டிற்கு எதிரான #NDA-வை வீழ்த்தி #வெல்வோம்_ஒன்றாக.
#VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்
Hearty congratulations to @chessvaishali on winning the 2026 FIDE Women’s Candidates Tournament.
This is a proud and historic moment for the entire country, especially Tamil Nadu.
Wishing her the very best to go on and win the Women’s World Chess Championship title. #Chess #FIDE
நாம் பெறப்போகும் வெற்றி, நம் வெற்றி மட்டுமல்ல, தமிழ்நாட்டின�� வெற்றி, தமிழ் மக்களின் வெற்றி என்ற உறுதியோடு களப்பணியாற்றுவோம்! தமிழ்நாட்டின் வளர்ச்சியை, மாநில உரிமைகளை, நம் மொழியை தனது டப்பா இஞ்சின் மூலம் அழிக்க நினைக்கும் NDA கூட்டணியை, தேர்தல் களத்தில் வீழ்த்துவோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்நாட்டைத் த���டர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு நம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஆணிவேரையே அறுக்க தூக்கியிருக்கும் ஆயுதம்தான் #Delimitation.
'தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்துவிடுவோம். சில வட இந்திய மாநிலங்களின் துணைகொண்டு, தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிவிடலாம்' என்று நினைக்கிறது பா.ஜ.க. இந்த சூழ்ச்சியை முறியடிக்க கழகத்தலைவர் அவர்கள் ஆணையின் பெயரில் மதுரையில் மசோதா நகலை எரித்து நம் எதிர்ப்பைக் காட்டினோம்.
சுயமரியாதைக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பா.ஜ.க.வின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது!
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பற்ற வைத்த உரிமைத் தீ இந்தியாவெங்கும் பரவட்டும்!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #DMK4TN
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை களவாடும் #Delimitation எனும் கருப்பு சட்டத்தை எதிர்த்து மதுரை வண்டியூரில் இன்று காலை உர���மைக் குரல் எழுப்பினோம்.
மதுரை கிழக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @pmoorthy21 அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை காக்க வீடுகள், வீதிகளில், கடைகள் என நாம் வசிக்கும் இடமெங்கும் கருப்பு கொடியேற்றி டெல்லிக்கு நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்
மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அண்ணன் @g_thalapathimla அவர்களை ஆதரித்து, புதூர் பேருந்து நிலையம் அருகே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வை மேம்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை #Delimitation எனும் கருப்புச் சட்டம் மூலம் வஞ்சிக்கும் பாசிச பா.ஜ.க.அரசைக் கண்டித்து உரையாற்றினோம்.
திர���விட மாடல் அரசின் ஐந்தாண்டுச் சாதனைகள் தொடர, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம்!
தலைவர் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @MLASHOLAVANDAN அவர்களை ஆதரித்து, இன்றைய தினம் பரப்புரை செய்தோம்.
ஐந்தாண்டுக்கால #திராவிடமாடல் அரசின் சாதனைகள், அமையப்போகும் #திராவிடமாடல் 2.0-வில் கழகத் தலைவர் அறிவித்துள்ள #Superstar திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் சொல்லி, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாட்டைச் சூழும் தடைகளையெல்லாம் தகர்த்து, மகத்தான திட்டங்களை நிறைவேற்றி உள்ள மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆட்சி தொடர்ந்திட, கழகத்திற்கு ஆதரவளிக்குமாறு சோழவந்தான் தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK
தேனி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @MaharajanMla அவர்களுக்கு ஆதரவாக, இன்று மாலை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆண்டிபட்டித் தொகுதியில் திராவிட மாடல் அரசு வ��ங்கியுள்ள திட்டங்களையும், நாம் நிறைவேற்ற இருக்கும் வாக்குறுதிகளையும் வாக்காள பெருமக்களிடம் எடுத்துச் சொல்லி உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் உரிமைகளைப் பறிக்கும் பாசிஸ்டுகளையும் அவர்களின் அடிமைகளையும் வீழ்த்தி #வெல்வோம்_ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
டெல்லியின் ஆதிக்கக் கரங்கள் எப்போதெல்லாம் தென்னகம் நோக்கி நீள்கிறதோ, அப்போதெல்லாம் முன்வரிசையில் நின்று மாநில உரிமைகளைக் காத்த இயக்கம் தி.மு.கழகம்.
தொகுதி மறுசீரமைப்பு எனும் அதிகார அத்துமீறலையும் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாடு உறுதியோடு எதிர்க்கும்.
பாசிச பா.ஜ.க – அடிமை அ.தி.மு.கவின் சூழ்ச்சிகளை முறியடிக்கும். தமிழ்நாடு போராடும், வெற்ற���பெறும்!
#Vote4DMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#Delimitation சட்ட நகலை எரித்து, ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு நம் எதிர்ப���பைப் பதிவு செய்து உரிமைக் குரல் எழுப்பியதை, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களிடம் எடுத்துக்கூறி, வெற்றி வேட்பாளர் அண்ணன் @OfficeOfOPS அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரி��்தோம்.
மாநில உரிமைகளை முடக்கி, இந்திய கூட்டாட்சியைச் சிதைக்க முயலும் பாசிஸ்டுகளையும் அவர்களின் பாதம் தாங்கும் முரட்டு அடிமைகளையும் வீழ்த்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
டெல்லி VS தமிழ்நாடு என்ற உரிமைப் போரில் ஆதிக்க சக்திகளை வீழ்த்துவோம்! மாநில உரிமைகளை மீட்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் பெ. சக்திவேல் அவர்களுக்கு ஆதரவாக பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்கைகள் செயல்வடிவம் பெற, அண்ணன் அவர்களின் வெற்றி அவசியம் என்று உரையாற்றினோம்.
பெரியகுளம் தொகுதியின் மேன்மைக்கும் மேம்பாட்டிற்கும் பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென வாக்காள பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்