தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து, விழுப்புரம் நகராட்சி திடலில் முன்னாள் அமைச்சர் திரு.சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில், சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது கண்டனத்தி��்குரியது.
பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் குறித்து பேசும் போது, பெண்களை இழிவுபடுத்தி பேசுவது தவறு, அதிலும் முக்கியமாக வாழ்க்கையில் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கி வெற்றி பெற்று கலையுலகத்தில் இருக்கும் பெண்களை எளிதில் உதாரணம் காட்டி இழிவுபடுத்துவது, அனைவருக்கும் வாடிக்கையாக போய்விட்டது. இதனை திரையுலகம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இச்சம்பவத்திற்கு முன்னாள�� அமைச்சர் அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும், இனி வருங்காலங்களில் இதுபோன்று யாரும் பேசாமலிருப்பது நல்லது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு" என்ற வள்ளுவன் சொல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
🌟சுப்ரீம் ஸ்டார் நாட்டாமை அவர்களின் தி ஸ்மைல் மேன் 150 திரைப்படம் ஆரம்பம் முதல் முடிவு வரை திர்லாகவும் பரபரப்பாகவும் மிகச் சிறப்பான படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.
அண்ணன் சுப்ரீம் ஸ்டார் உட்பட படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐.
We had the honour of meeting Mr.Sibi George, the Indian Ambassador to Japan along with his wife Mrs.Joice at their residence and had the pleasure of dining and interacting with them on various issues of mutual interest and were fascinated at the paintings of Mrs.Joice which adorned the walls of their beautiful home.
My son Rahhul Sarath, my friends Hari and Gowrisankar accompanied us.
@realradikaa #RahhulSarath
.
.
.
.
.
#SibiGeorge #IndianAmbassador #India #Japan #JoiceSibi #Paintings #sibipaintings #foreignpolicy #ministryofexternalaffairs #Embassy #geopolitics #dinnerwithfamily
https://t.co/771fbhmAP2
1999 - இல் மே மாதம் துவங்கி ஜூலை 26ஆம் தேதி நிறைவுக்கு வந்த கார்கில் வெற்றி தினத்தில், வீரர்களின் துணிச்சல் மிகு போர் செயல்களை போற்றி, தியாகத்திற்கு தலைவணங்குவோம்.
கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் TN74N1841 என்ற அரசு பேருந்து ஓடிக்கொண்டிருந்ததில், சமீப காலமாக சரிவர பிரேக் பிடிக்காதகாரணத்தினால், டிரைவர் மற்றும் நடத்துனர், பேருந்தில் பிரேக் சரியாக பிடிக்கவில்லை என்று கூறி ஆர்டிஒ அலுவலகத்தில் பேருந்தை ஒப்படைத்த சம்பவம் பா��ாட்டுக்குரியது.
��க்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இதுவரை பலரும் செய்ய முன்வராத செயலை, பிறரும் பின்பற்ற தூண்டியதற்கு டிரைவர் மற்றும் நடத்துனருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். அனைத்து நிர்வாகமும் இதுபோன்று செயல்பட்டால் அரசு சிறப்பாக இயங்கும்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க அரும்பாடுபட்ட குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின், 129 - வது பிறந்தநாளில் அவரின் தியாகத்தை போற்றி, அவர்தம் புகழ் நீடித்து நிலைக்கும் வகையில் அவர் பிறந்த ���ள்ளியாடி மண்ணில் அன்னாருக்கு திருவுருவச்சிலை அமைக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
#மார்ஷல்நேசமணி #MarshalNesamani
இந்திய நாட்டையே துயரத்தில் ஆழ்த்திய ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்