The Ministry of Jal Shakti in the Rajya Sabha yesterday said that in the Supreme Court Verdict dated 16.02.2018, there is no mention that the State of Karnataka has to obtain the consent of the other riparian states, namely Tamil Nadu, Kerala and the UT of Puducherry, to construct any kind of structure across the River Cauvery.
This statement only exposes that the rights of the farmers of Tamil Nadu have been discarded from consideration by the BJP-led Central Government for electoral gains in Karnataka.
I have to point out here that on 5th August 2021, former Union Minister for Jal Shakti Thiru Gajendra Singh Shekawat avl on the floor of Parliament, said that the permission to the State government of Karnataka to prepare a DPR was only conditional, and according to the Inter-State River Water Dispute Act, it is mandatory to obtain permission from all the lower riparian States (in this case Tamil Nadu) for the construction of a dam which passes Inter State.
Why is the Central Government now suddenly making a U-turn on the position it had already taken? Is expecting consistency at least on life-changing decisions of our Farmers too much to ask for?
Request the central government not to take the people of Tamil Nadu for granted and unnecessarily vitiate the brotherly relationship between the two friendly states, Tamil Nadu and Karnataka.
பதினைந்து லட்சம் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் அரசு வழக்கறிஞர் பணி நியமன ஆணையா ? - இது தான் ஊழலற்ற, வெளிப்படையான தவெக ஆட்சியின் லட்சணமா ?
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைப்பேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார்.
யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா?
தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வே��்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான ��ொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும்.
எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வ���ியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
அரசு வேலைக்காக இளைஞர்கள் படித்து துடிக்கிறார்கள்..
மதுரையில் கண்கூடாக பார்த்தவன் நான் கலைஞர் நூலகம்,Corportion ஆபீஸ், Study பார்க் என்று தினமும் ஆயிரம் பேர் படிச்சு சாகிறான். திரையில் ஆட்டம் போடவனுக்கு எப்படி இது எல்லாம் புரியும்
Thank You HC - மதுரை Bench
இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலக��் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என��ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளி��ிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந���தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
Honoured to be in Rameswaram today on the 11th Remembrance Day of our former President Dr APJ Abdul Kalam avl for the ‘Ignite India 2026’ event organised by the APJ Abdul Kalam International Foundation.
It was a privilege to share the stage with distinguished guests and an absolute delight to witness the brilliant STEM projects showcased by our young students.
From a phenomenal technologist to a visionary defence strategist, Dr. Kalam’s life is a masterclass in nation-building. His ultimate dream was a truly self-sustaining India, and guiding our youth in this direction is the only way to achieve it. (1/3)
Over the past many years, I have taken a personal stand in support of the NEET examination, arguing that it brought uniformity in student selection across the country and gave students from underprivileged backgrounds a real shot at pursuing their dream of medical education. In the last 5 years, the NEET UG question paper has leaked thrice. Imagine the amount of pressure that it puts on students, who had to go through the examination process yet another time when the system that was supposed to bring in uniformity was failing. Yet there was no accountability, and I believe strongly that it was that moment that brought in a shift in the minds of the students to take to the streets to cry their hearts out.
Protest is a fundamental right in a Democracy. The pertinent question, however, is this: why did the BJP-led Central Government take so long to initiate a dialogue with the protestors? Why was meaningful engagement delayed until the protest had escalated to a flashpoint? What kept you waiting?
The students and the people who are leading them also have a responsibility here. It is natural that when a protest stays on for weeks, people with vested interests will take the stage to air views that are either completely irrelevant to the initial demands of the protests or would try to completely hijack it to serve their agenda. If you remain silent and let these people with vested interests further their agenda, then you are deviating from your core objectives. Please do not let it happen!
I urge the BJP-led Central Government to engage in meaningful dialogue, uphold transparency, and take swift, appropriate action to address the concerns at hand. The strength of any nation lies in the confidence its youth place in its institutions. If our students lose faith in the fairness and credibility of our education system, we are jeopardising the future of our nation.
Farmers are distressed, saying that even after telling those demanding bribes that this is Chief Minister Vijay’s government, they are still asking for bribes!
Give them a good beat bro. 🤣👏
தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக விவ��ாயிகள் புகார் - லஞ்சம் கேட்போரிடம் இது முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆட்சி என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை!
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூ��்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
நெல் கொள்முதல் செய்யும் பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, "தூற்றுகிறோம்" என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது" என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர், கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் மேற்கொண்ட ஆய்விலேயே ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.50 லஞ்சம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக�� காட்டுகிறது.
ஏற்கனவே, தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்து��ிறது.
"லஞ்சம் கேட்டால், 'இது முதலமைச்சர் விஜய் ஆட்சி' என்று கூறுங்கள்" என முதலமைச்சர் திரு. விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, "நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல; மேலிடம் வரை செல்கிறது" என்ற பதிலே கிடைப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவே முதலமைச்சர் திரு. விஜய் கூறிய 'வெளிப்படையான ஆட்சி' என்பதன் உண்மையான பொருளா? என்ற ���ேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் விவசாயம் செய்வதே சாத்தியமற்றதாக மாறியுள்ளதாகவும், இந்த நெருக்கடி நிலை தொடர்ந்தால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும், அதோடு கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எப்படி ரூ.30 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கினார்களோ அதைப்போலவே எங்களுக்கு பின் எ��்கள் குடும்பத்திற்கும் கொடுங்கள் என விரக்தியான மனநிலையில் விவசாயிகள் எழுப்பும் கேள்வி அரசின் செயல்பாடுகள் மீதான அவர்களின் விரக்தியையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் மற்றும் எடை முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
புதுக்கோட்டை மாவட்டம், காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தின் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளைச் சேர்ந்த பணியாளர்களின் பணிக்காலம் கடந்த 31.12.2025 உடன் முடிவடைந்த நிலையில், 01.01.2026 முதல் 31.12.2027 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரி தமி���க அரசுக்கு ஏற்கனவே கடந்த மார்ச் 20, 2026 அன்று முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
பணிக்கால நீட்டிப்புக்கான அரசாணை இதுவரை வழங்கப்படாததால், பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான ஊதியம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு, ஏப்ரல், மே, ஜூன் 2026 ஆகிய 3 மா��ங்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகளுக்குத் தேவையான ₹66.52 லட்சம் நிதியை விடுவிக்க ஏற்கனவே கடந்த மே 12, 2026 அன்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரையிலும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் குடும்பங்களின் நிலையைக் கர���த்தில் கொண்டு, காலதாமதமின்றி அவர்கள் பணிக்காலத்தை 31.12.2027 வரை நீட்டித்து அரசாணை வெளியிடுவதுடன், நிலுவையில் உள்ள ஏப்ரல், மே, ஜூன் மாதங்களின் ஊதியத்திற்கான நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர ��ொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மின்கட்டணமும் இருமடங்காக அதிகரித்திருப்பதாக மின் நுகர்வோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்து மக்களை ஏமாற்றிய கையேடு, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகையையும் மக்களிடமே மறைமுகமாக மின்கட்டணத்தின் மூலம் வசூல் செய்ய முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், தமிழக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் நடப்பாண்டில் உயர்த்தப்படாது என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, பொதுமக்களின் கண்களில் மண்ணை தூவி மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கியிருக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மின் கணக்கீட்டு முற��யில் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதால் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருப்பதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், மின் நுகர்வோர்களிடம் இருந்து இதுவரை அதிகமாக பெறப்பட்ட மின்கட்டணங்களை திருப்பியளிப்பதோடு, தமிழகம் முழுவதும் குளறுபடிகள் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டு, அவை சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மின்வாரியம் அறிவிக்கவேண்டும்.
பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர், தன் துறையில் நடைபெறும் சாதனத் திருட்டுகளையும், நிர்வாகக் குளறுபடிகளையும் களைய உருப்படியான சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், காலை - மாலை என இரு வேளைகளிலும் தன் குறைகளை மறைப்பதற்காகவும், பிரச்சனைகளை மடைமாற்றுவதற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படி இழிவாக விமர்சிக்கலாம் என்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வருவதே மின்சாரத்துறையில் நடைபெற்றிருக்கும் இத்தகைய குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாக அமைத்திருக்கிறது.
எனவே, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, குழப்பமான, குளறுபடிகள் நிறைந்த கணக்கீடுகளின் மூலம் மக்களை சுரண்டும் அமைப்பாக செயல்படக்கூடாது என்பதை இனியாவது உணர்ந்து, தடையற்ற மின்சாரத்தை எந்தவித குளறுபடிகளுமின்றி விநியோகம் செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CTR_Nirmalkumar @CMOTamilnadu @TANGEDCO_Offcl
இன்றைய தினம் காலை, கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கோவை கொங்கு ��ண்பர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, 2025–2026 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, அவர்களின் சாதனைகளைப் பாராட்டிப் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கல்வியில் சிறந்து விளங்கும் இளம் தலைமுறையினரை அங்கீகரித்து ஊக்கப்படுத்துவது, அவர்கள் இன்னும் உயர்ந்த இலக்குகளை நோக்கிப் பயணிக்க உறுதுணையாக அமையும். இந்தச் சிறப்பான நிகழ்வை முன்னெடுத்த, கோவை கொங்கு நண்பர்கள் சங்க உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கனவுகள் நனவாகி, வாழ்வில் மென்மேலும் பல உயரங்களைத் தொட்டு, நம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். (1/2)