நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்புகள்
#CMJosephVijay
மாண்���ுமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார், மாண்புமிகு கேரளம��� மாநில முதலமைச்சர் திரு. வி.டி. சதீசன், மாண்புமிகு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் திரு.டி.கே. ஜோஷி, மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன், மாண்புமிகு தெலங்கானா மாநில துணை முதலமைச்சர் திரு. மல்லு பட்டி விக்ரமார்க்கா, மாண்புமிகு லட்சத்தீவுகளின் நிர்வாக அலுவலர் திரு. பிரஃபுல் படேல், ��ென் மண்டலக் குழுவினைச் சேர்ந்த மாநிலங்களின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.08.2026) சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே - வட்டமேசை தமிழ்நாடு” (INDIA TODAY – ROUNDTABLE TAMIL NADU) மாநாட்டில், ஐ-பேடில், “Let truth speak louder” என்று எழுதி கையொப்பமிட்டார்
#CMJosephVijay
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன் கீழ், விவசாயப் பெருமக்களின் நலனிற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி அறிவிப்பு.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.08.2026) சென்னையில், “இந்தியா டுடே - வட்டமேசை தமிழ்நாடு” (INDIA TODAY – ROUNDTABLE TAMIL NADU) மாநாட்டைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந���நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது பின்வரும் 27 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகப் புதிய மாவட்டங்கள்:
1.விருதுநகர் மேற்கு மாவட்டம்
2. மதுரை வடக்கு மாவட்டம்
3. ம���ுரை மாநகர் மத்திய மாவட்டம்
4. மதுரை கிழக்கு மாவட்டம்
5. புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
6. நாமக்கல் தென்கிழக்கு மாவட்டம்
7. தேனி வடகிழக்கு மாவட்டம்
8. தேனி தென்மேற்கு மாவட்டம்
9. தூத்துக்குடி மத்திய மாவட்டம்
10. திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம்
11. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம்
12. திருப்பத்தூர் தெற்கு மாவட்டம்
13. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
14. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
15. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
16. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம்
17. தருமபுரி புறநகர் மேற்கு மாவட்டம்
18. சேலம் மத்திய மேற்கு மாவட்டம்
19. சேலம் தெற்கு மாவட்டம்
20. சென்னை தெற்கு மாவட்டம்
21. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
22. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
23. கோவை கிழக்கு மாவட்டம்
24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம்
25. கரூர் தெற்கு மாவட்டம்
26. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்
புதிய மாவட்டங்களின் நிர்வாகிகள் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு, கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர��களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் ���வித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்