பாதுகாக்கப்படும் பனை ஓலைச்சுவடிகள், பூர்ச்ச மரப் பட்டைகள், தோல், பாப்பிரஸ் ஓலை ஆகியவற்றால் ஆன நூல்கள் ஆவணங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள்? ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளால் பாதுகாக்கப்படும் இத்தகைய ஆவணங்களின் விவரங்கள்?
ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். அதற்கு மாண்புமிகு இந்திய ஒன்றிய பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செக்காவத் அவர்கள் பின் வருமாறு விடை அளித்துள்ளார்:
'
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
சட்டப்பேரவைக்கு போவதற்கு முன்
எமது தலைவர்
#எழுச்சித்தமிழர்@thirumaofficial
தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றேன்.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
தமிழ்நாடு
தமிழ்த் தேசிய மாநாட்டுக்கென நிதி வழங்கிட விரும்பும் தோழர்கள், முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கீழ்க் காணும் 'க்யூ ஆர் கோட்' குறியீட்டினைப் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
@தொல்.திருமாவளவன்.
இன்று (29.07.26) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அச்சமயம் அவரது அலுவலகத்திற்கு வந்திருந்த ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களுக்கு நமது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டோம்.
@JCDPrabhakar
#கண்டனம்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
என அன்னைத்தமிழுக்கு
வாழ்த்துப்பா படைத்த
மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே
தமது தமிழ் வெறுப்பு
கலகத்தை
தொடங்கியுள்ளது @lokbhavan_tn .
இன்று மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு விசுவநாதன் அவர்கள்.
இவரோடு சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் பல மாணவர்களும் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியது.
ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கு ஏற்புடையதல்ல.
அவரவர் தாய்மொழிக்கு முன்னுரிமை தராமல்,
வந்தேமாதரம் மூலம்
போலி தேசபக்தியை கட்டமைக்க முனைவது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானதாகும்.
இதைத்தான், நேரு காலத்திலிருந்து இப்போதுவரை
#RSS கும்பல் செய்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியும் வந்து சேரவில்லை.
தமிழ்மொழிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மறுத்து சமற்கிருதத்துக்கு ஒதுக்கும் வஞ்சனை.
காவிரியிலிருந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நீரையும் திறந்து விடுவதில்லை.
எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு கள்ள மவுனமே காக்கிறது.
இந்த சூழலில்,
வந்தே மாதரம் மட்டும் திணிப்பது சரியா?
தமிழ்நாட்டின் உணர்வுகளை புறக்கணிக்கும்
ஆளுனர் மாளிகையின்
தமிழர் விரோதப்போக்கு கண்டனத்துக்குரியதாகும்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28.7.2026
சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் செல்வகணேஷ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தூத்துக்குடி மாவட்டம் - ஆறுமுகமங்கலம் கிராமத்தில் இன்று (27.07.26) அவரது குடும்பத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பங்கேற்று அவரது குடும்பத்தினருடன் இணைந்து தம்பி கவினுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியும் சிபிஐ பாலன் இல்லத்தில் மாணவர்கள் நடத்தும் தொடர் முழுக்க போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
இலக்கு: தர்மேந்திர பிரதான் மட்டுமல்ல; நீட் ஒழிப்பு தான்!
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளை எதிர்த்து தொடங்கிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம், நாடெங்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு எதிரான ஒரு பேரலையாக எழுச்சி பெற்றது.
கரப்பான் பூச்சிகள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கிண்டலடிக்கப்பட்ட இளைஞர் படை,
CJP அமைப்பாக மாறி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இளைஞர்களின் சமரசமற்ற போராட்டத்தால் ஒன்றிய பாஜக அரசு பணிந்தது. நீக்கவே முடியாது என்று சொல்லப்பட்ட ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதுபோல தான் முன்னர் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களில் ஒரு புள்ளியை கூட மாற்ற முடியாது என்றார்கள். ஆனால் நடந்தது என்னவென்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. மக்களுக்கு பதிலளிக்கவே முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, இரவெல்லாம் தூக்கம் இழந்து இளைஞர்களுக்கு வீடியோ வெளியிட்டுக் கொண்டுள்ளார்.
நீட் தேர்வு சீரமைக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் திரண்டிருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் நமது தங்கை அனிதா பற்ற வைத்திருந்த நீட் ஒழிப்பு எனும் முழக்கம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசும்போது,
தமிழ்நாட்டில் மட்டுல்ல; இந்தியா முழுமைக்கும் நீட் கூடாது”என வலியுறுத்தினார். மாணவர்கள் - இளைஞர்கள் இப்போது உண்மையை உணர தொடங்கியுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூக மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழிப்பே நிரந்தர தீர்வாக அமையும். அதன் முதல்படியாக கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.
வடஇந்திய மாணவர்கள் சொல்வது போல, அமைச்சர் பிரதானுடன் தொடங்கிய இந்த போராட்டம்,
பிரதான் மந்திரி மோடியை நீக்குவதில் தான் முடியும்!
இப்போதாவது, மோடி அரசு நீட்டை
ரத்து செய்து மாணவர்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்வது நல்லது.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
25.7.2026
சுற்றறிக்கை
~~~~~
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் அனைவருக்கும் வணக்கம்!
இந்திய ஒன்றிய அரசு நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் 27.7.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட ஒரே ஆர்ப்பாட்டமாக சென்னையில் எனது தலைமையில் 27.7.2026 அன்று காலை 10 மணிக்கு இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நடைபெறுகிறது. எனவே, சட்டமன்றத் தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைப்பதை விடுத்து அனைத்து பொறுப்பாளர்களும் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
முனைவர் தொல்காப்பியன் திருமாவளவன்.
நிறுவனர் - தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியும் சிபிஐ பாலன் இல்லத்தில் மாணவர்கள் நடத்தும் தொடர் முழுக்க போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
ஆகத்து17 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
புதுதில்லியில் #செய்தியாளர்_சந்திப்பில்
நீட் தேர்வில் வினாத்தாள்
கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாகச் சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார். அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர் . இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர் . அவர்கள் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினோம். போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என தெரிவித்தோம்.
ஜூலை 23
மாஞ்சோலை போராளிகளுக்கு வீரவணக்கம்!
1999 ஆம் ஆண்டு கூலி உயர்வுக் கேட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க பேரணியாக வந்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3வயது சிறுவன் விக்னேஷ் உட்பட 17 பேர் பலியாகினர்.
மாஞ்சோலை போராளிகளின் நினைவேந்தல் நாளான இன்று விசிக துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் வன்னிஅரசு அவர்களின் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது!
அரச வன்கொடுமையால் பலியான போராளிகளுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்!
இன்று (23.07.26) திருநெல்வேலி அரசு சுற்றுலா மாளிகையில், மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் நமது சமூகநீதித்துறை சார்ந்த திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். தொடர்ந்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வில் ஈடுபட்டோம்.
@Collectortnv@TindistPolice
மேகாலயா மாநில முதலமைச்சரின் சகோதரரும் மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டிருப்பவருமான திரு ஜேம்ஸ் பாங்சங் கொங்கால் சங்மா ( James Pangsang Kongkal Sangma ) அவர்களை இன்று புதுதில்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.