Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒ��்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்க��ை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்கு���ெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின��� சார்பாக நடைபெற்ற கல்வி ��ிருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
ஆட்சி கவுந்துரும்னு சும்மா மிரட்டாதீங்க, எலெக்ஷன் வரட்டும்... @TVKVijayHQ விஜய் அணி 180 இடங்கள் ஜெயிக்கும்!" 🏆
#விஜய் அவர்களின் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை முடக்க நினைக்கும் அதிகாரத்துவ சதிவ��ைகளையும், மிரட்டல்களையும் கிழித்தெறிந்து, "ஊழலை வேரோடு பிடுங்கியெறியும் இந்த அரசுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அதை தடுக்க முதல் ஆளாக தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊரு வைகோவின் குரல் ஒலிக்கும்!
#vaiko #TVKVijay #mdmk #TVK #duraivaiko @TVKVijayHQ
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத���து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!
#CMJosephVijay