கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பேட்டி !
13.02.25 - சேலம்.
சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில்
UGC விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கிற இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை வகித்தார்.
திருப்பூரில்
கண்டன ஆர்ப்பாட்டம் !
ஒன்றிய பாஜக அரசே,
UGC விதிகளில் திருத்தம் செய்து
கல்வி உரிமையை பறிக்காதே !
இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்காதே எனும் முழக்கங்களுடன்
திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்13.02.25 வ���யாழன் மாலை 05.00 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகில் ராசு தலைமை தாங்கினார்.
மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து வரவேற்பு உரையாற்றினார்.
மாநகரச் செயலாளர் மாதவன் மாநகர அமைப்பாளர்கள் சரஸ்வதி,முத்து ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
கண்டன உரையாற்றியோர் :
சு.துரைசாமி மாநிலப் பொருளாளர் திவிக
எஸ்.இரவிச்சந்திரன் மாவட்டச் செயலாளர் இந்திய பொதுவுடமை கட்சி
விடுதலை செல்வன், துணைப் பொதுச் செயலாளர்,
ஆதித்தமிழர் பேரவை
துரை வளவன்,
துணைப் பொதுச் செயலாளர்,விசிக.
க.வே.கதிரவன்,
மாநகரத் தலைவர், புரட்சிகர இளைஞர் முன்னணி
பாரதி சுப்பராயன் தலைவர்
நவீன மனிதர்கள் குழு
துரை.பரிமளராசன்,
இணைய தள பொறுப்பாளர், திவிக.
சங்கீதா,
மாவட்ட அமைப்பாளர் திவிக .
சி.இரா.கனல்மதி,
மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்.
நிறைவாக அய்யப்பன், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் நன்றி கூறினார்.
மேலும்,
மா.ராமசாமி,தெற்கு பகுதி செயலாளர்,
கோவிந்தராஜ்,நகர அமைப்பாளர் பல்லடம் திவிக ,கணக்கன்,ஒன்றியத் தலைவர் மடத்துக்க��ளம்,
சு.சிவானந்தம் ஒன்றியச் செயலாளர்,மடத்துக்குளம், தாரை செல்வராஜ், அமைப்பாளர் தாராபுரம்.
தோழர்கள் இரவி,முத்துலட்சுமி கனபதி,இராஜ்குமார், சிரிஜா,சங்கவி,பெரியார் பிஞ்சு, தழல் சிறகன், இயல் ஆழியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பொள்ளாச்சியி���் இன்று...
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக
UGC விதிகளில் திருத்தம்
ஒன்றிய அரசே !
கல்வி உரிமையைப் பறிக்காதே !*
இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே !
கண்டன ஆர்ப்பாட்டத்தில்
விடுதலை சிறுத்தைகள்
திராவிடர் கழகம்
திராவிட இயக்க தமிழர் பேரவை வெல்ஃபேர் கட்சி
த��ிழ் புலிகள்
மே 17 இயக்க தோழர்கள்
கலந்துகொண்டனர்...
சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில்!
UGC விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கிற இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை வகித்தார்.
சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், மேற்கு மாவ���்டத் தலைவர் சூரியகுமார், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈசுவரன், அ.சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதா, சேலம் மாநக���ச் செயலாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன உரையாற்றிய தோழர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் காஜாமைதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி பொறுப்பாளர் தினேஷ், திராவிட முன்னேற்றக் கழக சேலம் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் கோனூர் வைரமணி, த.மு.மு.க மாநில செயற்குழு உறுப்பினர் சையத் சலாவுதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலாளர் சுல்தான், ம.தி.மு.க மாநகரச் செயலாளர் அருள்மாது, தமிழ் புலிகள் கட்சி மத்திய மாவட்டச் செயலாளர் ராவணபிரபு, த.பெ.தி.க மாவட்டச் செயலாளர் தங்கராஜ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் சுந்தரவதனம், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் மாயன், தமிழ்தேச மக்கள் முன்னணி மாரியப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் மாநகரத் தலைவர் பாலு, ஆத்தூர் நகரத் தலைவர் மகேந்திரன், சேலம் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் தேவபிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் UGC வரைவு அறிக்கையின் புதிய நெறிமுறைகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்க தோழர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசு UGC விதிகளில் செய்த சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ,
திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக ..ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் (13.2.2025) காலை 11 மணியளவில் மாபெ��ும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர். ப.இரத்தினசாமி தலைதாங்கினார். ஒன்றிய அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதின் இடையே..
கொங்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் நிறுவனர் தோழர். விஸ்வநாதன் ..
ஆதிதமிழர் பேரவை ,தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் தோழர். வி. கனியமுதன்...
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் ஈரோடு மாவட்டப் புறநகர் செயலாளர் தோழர் சரவணப் பெருமாள் ..
போன்றோர் தங்களது கண்டண உரையை பதிவு செய்தார்கள்.
இறுதியாக, கழகத்தின் மாநில வெளியீட்டுச் செயலாளர். தோழர். இராம இங்கோவன் UGC விதிகளில், ஒன்றி அரசு செய்துள்ள சட்ட திருத்தத்தில் இரு��்கும் ஆபத்துகளையும், இதனால் தமிழ்நாட்டின் கல்விச்சூழல் எவ்வாறு பின்னடைவையும், மாபெரும் சரிவையும் சந்திக்கிப் போகிறதென்பதையும்,
இந்துத்துவ சக்திகள் அதிகாரத்தின் வழியே தமிழ்நாட்டின் வளர்ச்சியை, கல்வித்துறையின் மேம்பாட்டை, நம் தனித்தன்மையை அழித்திட செய்யும் சூழ்ச்சி அரசியலை விரிவாக தன் கண்டண உரையில் எடுத்துரைத்தும்..
ஒன்றிய அரசுக்கு கழகம் விடுக்கும் எச்சரிக்கையையும் த���் உரையின் வாயிலாகப் பதிவு செய்தார்.
ஈரோடு தெற்கு - வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் தோழர்களும் ..
தோழமை அமைப்பைச் சார்ந்த தோழர்களும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும்வாரியாகப் பங்கேற்றனர்.
யுஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமை மறுக்கிற
இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கிற ஒன்றிய அரசை கண்டித்து
திராவிடர் விடுதலைக் கழகம் சார���பாக
தேனி பழைய பேருந்து நிலையத்தில் காலை 10 மணி அளவில் 13.02.2025 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் திவிக தேனி மாவட்ட
தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் யோகேஸ்வரன் அவர்கள் தலைமையுரை ஆற்றிய போது
மருத்துவ மேல் பட்டப் படிப்பில் தமிழ்நாடு மாணவர்களின் உரிமையை பறித்துவிட்டது உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை சட்டப் போராட்டம் நடத்தி உறுதி செய்த தமிழக முதல்வரின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டு விட்டது.
@viduthalaikr
நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 26-ஆவது சந்திப்பு!
பேரறிஞர் அண்ணா 56-ஆவது நினைவுநாளை முன்னிட்டு 26-ஆவது சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்டம், 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இராயப்பேட்டை விஜ��் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது..
கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றுகிறார். மேலும் ஊடகவியலாளர் கரிகாலன், "பார்ப்பனக் கைக்கூலிகள் சீமான், மணியரசன்" என்ற தலைப்பிலும், ஊடகவியலாளர் மில்ட்டன், "பெரியார் அண்ணாவின் தமிழ்த் தொண்டு" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றுகிறார்கள்.
அனைவரும் வருக!
கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் திரு.காமகோடி. தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்.
'எம்.ஜி.ஆர் பிறந்தநாள்.'
50% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர்.
பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர்திருத்தத்தை அரசு ஏற்பு செய்தவர்
நிறுவனங்களின் பெயர்ப் பலகை���ில் தமிழ் மொழி எழுத்து முதன்மையாகவும், ஆங்கில எழுத்துக்களை விட தமிழ் எழுத்துக்கள் அளவில் இரண்டு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்தவர்.
தஞ்சைப் பல்கலைக் கழகம் நிறுவ 100 ஏக்கர் நிலம் ஒதுக்க்கீடு செய்தவர்.
உங்கள் மதம் என்ன? என்று கேட்ட பொழுது "என் மதம் திராவிட மதம்" என அரசு ஆவணத்தில் பதிவு செய்தவர்.
இந்தியாவை "இந்திய ஒன்றியம்" என்றே இறுதி வரை அழைத்தவர்.
விடுதல���ப் புலிகளுக்கு பல கோடி ரூபாய் வழங்கி புலிகள் அமைப்பை கட்டி எழுப்ப பெரும் துணையாக நின்றவர். ஈழத்தமிழர்கள் நலனில் பெரும் அக்கறை கொண்டவர்.
பெரியார் நூற்றாண்டு விழாவை 1 ஆண்டு கொண்டாடியவர்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் மாநில உரிமைகளைப் பறிக்கும் UGC- யின் அறிவிப்பைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் கழக இளைஞரணி இணைந்து அறிவிப்பு "நகல் கிழிக்கும்" கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.
நாள்: 09.01.2025, மாலை 4 மணிக்கு, சிம்சன் பெரியார் சிலை அருகில்.
திராவிட மாணவர்களே - இளைஞர்களே திரண்டெழுக!
தமிழ்நாடு மாணவர் கழகம் மாணவர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்��்சி பேராவூரணி ஒன்றியம் தஞ்சாவூர் மாவட்டம்
நாள் : 1. 01. 2025 புதன்கிழமை நேரம் : மதியம் 2 மணி முதல் 5 மணி வரை
இடம் : தோழர் செங்கை க.கதிர்வேல் நினைவு அரங்கம் DBS வங்கி LVB பின்புறச் சாலை பேராவூரணி
500 அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பது என்பது அரசின் சமூக நீதித் திட்டங்களை சீர்குலைப்பதாகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சமூகநீதி திட்டங்களை வழங்கி வருகிறது தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இந்த முடிவு கண்டனத்துக்கு உரியது
தமிழ்நாடு மாணவர் கழக மாணவர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் பேரா���ூரணி ஒன்றியத்தில் சிறப்பாக நடைபெற்றது.மாணவர்களுக்கு பெரியார் புத்தகங்களும் நாட்காட்டியும் வழங்கப்பட்டது.
நேற்று 04.01.2025, சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 48-வது புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்டத் தோழர்கள் கலந்துகொண்டு பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை ஆராய்ந்து, அறிவூக்கம் அளிக்கும் பல புத்தகங்களை வாங்கினோம். ஒரே நாளில் பார்த்து முடிக்க இயலாதபடி அத்தனை அரங்குகள் அமைந்திருந்தன.
அரங்கு எண் 129,130-ல் அமைந்துள்ள பெரியார் புக்ஸ்.காம் மிகச் சிறப்பாக இருந்தது. வாய்ப்பிருக்கும் அனைவரும் சென்று பயனடைய வேண்டியதாக இந்தப் புத்தகக் கண்காட்சியை உணர்கிறோம்.