மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.10.2026) தலைமைச் செயலகத்தில், தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் திரு.யு.சுப்பாராவ், IRSME அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தும்படியும், அதற்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was paid a courtesy call by Thiru.U.Subba Rao, IRSME, General Manager, Southern Railways at the Secretariat today (22.10.2026). During the meeting, the Hon'ble Chief Minister requested the expeditious execution of ongoing railway projects in Tamil Nadu and assured all necessary support from the Government of Tamil Nadu.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.10.2026) தலைமைச் செயலகத்தில், இந்த ஆண்டிற்கான நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளைக் கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் திரு.எச்.ஹாஜா நஜுமுதீன் சாஹிப் மற்றும் அறங்காவலர்களிடம் வழங்கினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (22.10.2026) handed over the Government Order sanctioning the supply of 45 kg of sandalwood at no cost by the Government of Tamil Nadu for this year’s Nagore Dargah Periya Andavar Kanduri Sandanakoodu Festival to Thiru.H.Haja Najumudeen Sahib, Chief Trustee of Nagore Dargah, and other trustees, at the Secretariat.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.10.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலியா நாட்டின் தூதர் திருமதி சிலாய் ஸாக்கி, துணைத் தூதர் திருமதி கேத்ரினா நாப், துணைத் தூதர் திரு.அலெக்ஸாண்டர் வெனிஜியானோ, மேலாளர் திரு.வி.கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by a delegation from the Australian Consulate-General, South India, comprising Consul-General Tmt.Silai Zaki, Deputy Consul-General Tmt.Katrina Knapp, Deputy Consul General Thiru. Alexander Veneziano, and Manager Thiru.V. Karthikeyan at the Secretariat today (22.10.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.10.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ள திருமதி ரா.பிரியா, திரு.ச.பிரசன்னா ராமசாமி, திருமதி மு.இந்துமதி, திரு.இரா.இராஜகிருபாகரன், திருமதி ச.சங்கீதா, திருமதி கா.பிரியா, திருமதி மு.மணிமேகலை, திருமதி அ.மீனா பிரியா தர்ஷினி, திரு.நா.காளிதாஸ், திரு.தா.செங்கோட்டையன், திருமதி செ.சாந்தி ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay was called on by the officers, who have been promoted to the Indian Administrative Service (IAS), at the Secretariat today (22.10.2026). Tmt.R.Priya, Thiru.S.Prasanna Ramasamy, Tmt.M.Indhumathi, Thiru.R.Rajakirubakaran, Tmt.S.Sangeetha, Tmt.K.Priya, Tmt.M.Manimegalai, Tmt.A.Meena Priya Dharshini, Thiru.N.Kalidoss, Thiru.T.Sengottaiyan and Tmt.S.Shanthi received his wishes.
#CMJosephVijay
தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
தன்னுடைய தனித்துவமான குரலாலும், உற்சாகம் ததும்பும் பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகள்!
Warm birthday wishes to the Hon’ble Union Minister of Home Affairs and Cooperation, Thiru. Amit Shah Avl. Wishing you a long life and good health in service to the nation.
#CMJosephVijay
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SH6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீ அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
வீராங்கனை நித்ய ஶ்ரீ அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் சாதனை படைத்துள்ள அவரது வெற்றி, தடைகளைத் தகர்த்து சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தை அளிக்கிறது.
வீராங்கனை நித்ய ஶ்ரீ அவர்கள், வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று, மேலும் பல புதிய உயரங்களைத் எட்ட வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இச்சாதனையைப் படைத்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களின் வெற்றி இளம்தலைமுறை பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும்.
அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த “துளி” இலச்சினையைத் திறந்து வைத்து, மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, unveiled the “Thuli” logo for rainwater harvesting awareness and launched the awareness programme.

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இச்சாதனையைப் படைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்திடும் வகையில் அவரது வெற்றி அமைந்துள்ளது. வீரர் சிவராஜன் சோலைமலை அவர்கள், மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.
#CMJosephVijay
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.10.2026) சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர்களைக் கௌரவிக்கும் வகையில் காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியே 96 இலட்சம் ரூபாய்க்கான ஆணைகளை வழங்கினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (21.10.2026) laid a wreath at the Police Memorial during the Police Commemoration Day event held at the Police Headquarters premises in Chennai, paying tribute to police personnel who had laid down their lives in the line of duty. He also handed over orders for personal accident insurance payments totalling Rs. 5.96 crore under the Government of Tamil Nadu’s Salary Package Scheme to the families of seven Tamil Nadu Police personnel—six who died in the line of duty and one who is presently in coma state.