சமூகவலைதளங்களில் (திமுகவின் ஐ.டி விங் அல்ல) திமுகவை ஆதரித்து எழுதும் அத்தனைபேரையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்…
அவர்களில் பெரும்பாலோனோர் அனைவருமே நல்லதொரு வேலையில் பிசியாக இருப்பவர்களே… அவர்களில் பெரும்பாலானோர் அனைவரையும் மற்றவர்களால் நினைத்த மாத்திரத்தில் சந்திக்க முடியாது- காரணம், அவர்கள் மிகவும் பிசியான வாழ்க்கை வாழ்பவர்கள்.
அவர்களில் பலரும் லட்சங்களில் சம்பளம் பெறுபவர்கள் அல்லது தொழிலதிபர்கள், அல்லது தொழில் முனைவோர், அல்லது பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகளைப் பற்றிய புரிதல் உள்ளவர்கள் அல்லது குறைந்தபட்சம் சமூக நல்லிணக்கத்தை விரும்புபவர்களாகவேதான் இருப்பார்கள். இன்னும் ஒருபடி மேலே சொல்வதாயின் அவர்கள் பொருளாதார தன்னிறைவு கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
திமுக ஆட்சியில் இருக்கவேண்டும் என்று போராடும் அவர்களுக்கும் திமுக தலைமைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான தொடர்புகள் எதுவுமே இருக்காது. அவர்களில் பலரும் அவரவர் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர்களைக்கூட நேரில் கண்டிருக்க மாட்டார்கள். திமுக செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களின் தேவையற்றவர்கள்தான் இவர்கள். திமுகவால் பத்துப்பைசா கூட பலனடைந்திருக்க மாட்டார்கள். ஆனால் கட்சியின் பொருட்டு பல நண்பர்களையும் இழந்திருப்பார்கள். ஆனாலும் திமுக ஆட்சிக்கு வரவேண்டுமென்று களமாடுவார்கள். சந்தர்ப்பங்களில் கைக்காசை செலவு செய்யவும் தயங்காதவர்கள். எதிரிகளைக்கூட வசைச்சொல் சொல்லாதவர்கள். திமுக தலைமை செய்வது தவறெனத் தெரிந்தால் கொஞ்சம்கூட கவலைப்படாமல் திமுக தலைவரையே பந்தாடுவார்கள். இவர்களில் பலருக்கும் திமுகவின் உறுப்பினர் அட்டைகூட இருக்காது. இந்தக் கூட்டத்தைக் கட்சியைவிட்டு நீக்கும் அதிகாரம் அதன் தலைவருக்குகூட இருக்காது.
அதீத மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் ஊழல் மற்றும் லஞ்சங்களை அறவே ஒழிக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். பல்வேறு ஜாதியாகப் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை எல்லாம் திமுகவாள் கூட ஒரே அலவையால் அளக்க முடியாது என்பதும் தெரியும். இன்னும் என்னென்ன குற்றங்களை எல்லாம் எதிர��க்கட்சிகள் திமுகமீது சுமத்துகின்றனோ அவற்றில் உள்ள உண்மை எத்தனை? பொய் எத்தனை என்பதையும் மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருப்பார்கள். அந்தக்கூட்டத்திற்குத் தெரியும் திமுகவின் இருப்பு த��ிழ்நாட்டிற்கு எத்தனை முக்கியமென்று…
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக மட்டும் தினந்தோறும் சில பல மணித்துளிகளை ஒதுக்கி எதிரிகளின் கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் அவர்கள்தான் திமுகவின் கொள்கை வாரிசுகள்.
இதெல்லாம் கொள்கைகளே இல்லாதவர்களுக்கு எப்படிப் புரியும்?
@niranjan2428 நாம் இப்படியே உண்மைய கண்டுபிடிச்சு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியது தான். வடமாநிலங்களில் அவங்க பொய், உண்மை மாதிரி தீயா பரவிட்டு இருக்கு.. எங்கபோய் முடியப் போகுதோ தெரியல.
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத��தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நில���த்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
நண்பர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் பகிர்ந்தார்.
ஒருவர் ஏணியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென கால்தவறி கீழே விழுந்துவிட்டாராம்.
நம்ம ஊரில் இப்படியொரு சம்பவம் நடந்தால் என்ன செய்வோம்?
"ஐயோ... அம்மா!" என்று கத்துவோம்.
ஆனா���் அந்த மனிதர் விழுந்தவுடன் சொன்ன முதல் வார்த்தை...
"Please... don't call the ambulance. I can't afford it."
அந்த ஒரு வாக்கியம் என்னை ஆழமாக யோசிக்க வைத்தது.
உலகின் பல நாடுகளில் மருத்துவச் செலவுகள் மிக அதிகம். சில நாடுகளில் ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்கே நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை வேறு.
எந்த நேரத்திலும் அரசு மருத்துவமனையை மக்கள் நம்பிச் செல���ல முடிகிறது.
108 ஆம்புலன்ஸ் சேவை உயிர்களைக் காப்பாற்றுகிறது.
ஏழை, எளிய மக்கள் கூட மருத்துவச் செலவை நினைத்து சிகிச்சையைத் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களையும், வலுவான பொதுச் சுகாதார அமைப்பையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது
அந்த அமைப்பின் ஒரு முக்கியமான தூண் என்ன தெரியுமா?
மருத்துவர்கள்.
அந்த மருத்துவர்களை உருவாக்கும் வா���்ப்பை சமமாக வழங்கிய கல்விக் கொள்கையே தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலம்.
அந்த சம வாய்ப்பை சிதைத்ததுதான் NEET.
இன்று நான் டாக்டர் கோகிலாமணி
நான் படித்த காலத்தில் NEET இருந்திருந்தால், இன்று நான் டாக்டர் கோகிலாமணி அல்ல... வெறும் கோகிலாமணி தான்.
உடனே சிலர் கேட்பார்கள்...
"அப்படியென்றால் உங்களுக்குத் திறமை இல்லையா?"
திறமை இல்லாததால் அல்ல... வாய்ப்பு இல்லாததால்.
லட்சக்கணக்கில் செலவு செய்து NEET Coaching செல்லும் வசதி இல்லாததால்.
இன்று யதார்த்தம் என்ன?
NEET என்பது ஒரு Coaching தேர்வு.
தி��ுக அரசு அமைத்த A.K. ராஜன் குழுவின் ஆய்வு என்ன சொல்கிறது?
MBBS Admissions in Tamil Nadu- Before(2016-17) vs After NEET(2020-2021)
📚 Tamil-medium students
• Before NEET: 14.94%
• After NEET: 1.99%
🏡 Students from villages
• Before NEET: 65.17%
• After NEET: 49.91%
👨👩👧 First-generation college students
• Before NEET: 24.94%
• After NEET: 14.46%
🔁 Repeaters
• Before NEET: 12.47%
• After NEET: 71.42%
📌 2019–20 Academic Year 99% of students who secured MBBS admissions had received prior private coaching before appearing for the NEET examination.
NEET-ல் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர் Coaching மையங்களில் படித்தவர்கள். கிராமப்புற, ஏழை, முதல் தலைமுறை மாணவர்களின் பிரதிநிதித்துவம் குறைந்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
எல்லோராலும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து Coaching செல்ல முடியாது.
ஒரு விவசாயியின் மகன், ஒரு தின���்கூலி தொழிலாளியின் மகள், ஒரு கிராமப்புற மாணவன், ஒரு அரசு பள்ளி மாணவி - இவர்களின் கனவை குடும்பத்தின் பொருளாதாரம் தீர்மானிக்கக் கூடாது.
ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் மருத்துவர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் தங்கள் மண்ணுக்குத் திரும்பி, தங்கள் மக்களுக்குச் சேவை செய்ய முடியும்.
ஆனால்...
அந்த வாய்ப்பைத்தான் NEET பறித்துக் கொண்டிருக்கிறது.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் கூறியதுபோல்:
"You cannot have both fairness and NEET. NEET is fundamentally unfair, and it should be abolished."
சிலர் சொல்வார்கள்...
"இப்போது அரசியல் செய்வதற்காகத்தான் NEET-ஐ எதிர்க்கிறீர்கள்."
அவர்களுக்கு வரலாறு தெரியாது.
NEET-ஐ எதிர்ப்பது இன்று தொடங்கிய போராட்டமல்ல.
2010-லேயே, NEET கொண்டு வர முயற்சி செய்யப்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதனை உறுதியாக எதிர்த்தார்.
அப்போது ��த்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு.
அந்தக் கூட்டணியில் இருந்தபோதும், தமிழ்நாட்டின் உரிமை என்ற கேள்வி எழுந்தபோது கலைஞர் சமரசம் செய்யவில்லை.
மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுத்தார்
அதுதான் திராவிட மாடல் அரசியல்.
பதவிக்காக அமைதி காக்கும் அரசியல் அல்ல...
மக்களின் உரிமைக்காக, தேவைப்பட்டால் கூட்டணியிலிருந்��ே எதிர்க்கும் அரசியல்.
NEET-ஐ எதிர்ப்பது அரசியல் அல்ல.
இது சமூகநீதிக்கான போராட்டம்.
இது கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புக்கான போராட்டம்.
தமிழ்நாட்டிற்கு NEET விலக்கு வேண்டும்!
(படம்: 26/07/2026 அன்று நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வற்புறுத்தி தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் நடந்த பேரணி மற்றும் மாநாடு)
💥 பாஜகவின் வாயாகவே பேசிய வலதுசாரி நித்யானந்தத்துக்கு பதில்கள் ஒவ்வொன்றையும் இடியாய் இறக்கிய மே 17 இயக்க தோழர் திரு @thiruja2009 அவர்கள் 🔥🔥
உ��ாரணத்திற்கு -
📌 எங்க ஊர்ல எங்க மொழிக்கு இடம் இல்லைனா வேற எந்த மொழிக்கும் இடம் இல்லை 🔥
📌 எங்க மொழிக்கு மரியாதை இல்லையென்றால் அப்படிப்பட்ட நபர்கள் எங்க ஊர்ல தேவையே இல்லை 🔥
மேலும் பல இடிகள் 👇
திராவிட முன்னேற்றக் கழக அரசு அனைவரும் படிக்க வைப்பதற்காக "நான் முதல்வன்", "புதுமைப்பெண் திட்டம்" போன்ற எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்து அனைவரையும் படிக்க வைத்தது, ஆனால் தற்போது இருக்கும் கவர்ச்சி நடிகர் அரசு படித்து என்ன செய்யப் போகிறீர்கள் என்ற அளவில் வந்து நிற்கிறது.
பாஜக வந்தால்
பாஜக ஜெயித்தது என்றால்
அடித்து நொறுக்கி விடுவார்கள் என்று
திட்டம் போட்டு ஒரு டம்மியை
ஆட்சியில் உட்கார வைத்தது தான் குஜராத்திய திருடர்கள் செய்த வேலை என்று நான் பலமுறை பதிவு செய்திருக்கிறேன் இதோ
மேலும் சில தகவல்கள்
35% இவனுக்கு போட்டு எவன்டா போடுவான�� ?