Real change is here, guys 🤦
An astrologer is being appointed as Officer on Special Duty for Chief Minister Vijay.
While the DMK constituted a team of Nobel Prize winners and academicians for advice in 2021, Vijay has appointed an astrologer as political adviser 💀😭
ச்சும்மா செதிக்கிருக்கானுங்க🔥🔥🔥
Goosebumps 💥💥💥
நாம Always Out of Controlன்னு மீண்டும் நிரூபிக்கணும்
#Delhi 🎃 Vs #Tamilnadu 😎
Production @ComradeGangsta
"தமிழ் நாட்டின் 40 எம்.பிக்கள் இங்கே இருக்கிறோம். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல். முருகன் அவிநாசியிலே பிரச்சாரத்தில் இருக்கிறார். உங்களுக்குத் தேவை ஓட்டு, எங்களுக்குத் தேவை தமிழக மக்களின் தன்மானமிக்க வெற்றி" - @SuVe4Madurai#Delimitation
33% மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கும், தொகுதி மறுவறையறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே முடிச்சை போட்டது பாஜக.
மகளிருக்கான இட ஒதுக்கீட்டை கலாச்சார ரீதியாக எதிர்க்கிற இயக்கம் பாஜக. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, கல்வி கற்று, பொருளாதார சுதந்திரத்துடன் இயங்குவதை ஆர்எஸ்எஸ் ஒருகாலத்திலும் விரும்பியது இல்லை.
33 சதவிகித இட ஒதுக்கீட்டால் அதிக சிக்கல்களை சந்திக்கப் போகிற கட்சி இந்தியாவில் பாஜகதான்.
இதை மடைமாற்றத்தான் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து தாமதப்படுத்துகிறது பாஜக.
2023 ல் மகளிர் மசோதாவை நிறைவேற்ற மூன்று விதிகளை உருவாக்கியது ஒன்றிய அரசு.
1. மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும். (Population Census)
2. புதிய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை மாநிலங்களில் மறுவரையறை செய்யப்பட வேண்டும். (Delimitation Based On Population)
3. புதிய தொகுதிகளுக்கான பெயர், எல்லைகள், வரைபடம் இவற்றை முழுமையாக முடிக்க வேண்டும். (Boundary Redrawing)
இன்று பாஜக சொல்வது
1. மக்கள் தொகை கணக்கடுப்பு நடத்துவது தனி வேலை. அதை தனியாக ஒன்றிய அரசு செய்யும்.
2. அந்த கணக்கெடுப்பில் சாதி விவரங்கள் கேட்கப்படாது. சாதிவாரி கணக்கெடுப்பாக அது நடத்தப்படாது என அறிவித்து விட்டார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு வழியாக OBC - SC-ST இந்த சமூகங்களின் உண்மையான சதவிகிதம் வெளியே வருவதை பாஜக விரும்பவில்லை. அந்த முடிவுகள் வெளிவந்தால் அதிகாரத்தில் OBC - SC-ST இவர்களின் பங்களிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட நேரிடும்.
இப்போது கொண்டுவரப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மேலே சொன்ன எதுவுமே தேவையில்லை.
2011 கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து எல்லா மாநிலங்களுக்கும் 50% அதிக ஒதுக்கீடு என்பது ஒரு அறிவிப்பு. திசைதிருப்பல் முயற்சி இது.
தொகுதி சீராக்கம் என்பதே மக்கள் தொகையை அடிப்படையாக வைத்த ஒன்று. Not Based On Population என்றால் அதெப்படி Delimitation ஆகும். அப்படி தொகுதிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் என்ன? இதற்கும் மகளிர் மசோதாவுக்கும் என்ன தொடர்பு?
ஒரேமாதிரி குழப்பமாக இருக்கும். குழப்பத்தை உண்டாக்கி வேறு எதையோ பெரிதாக திட்டமிடுகிறது பாஜக. அது மாநிலங்களுக்கும் மாநிலங்களை உள்ளடக்கிய இந்த நாட்டிற்கும் நல்லதல்ல.
2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒன்றிய அரசு பல முக்கியமான முடிவுகளை அமல்படுத்த இருக்கிறது.
1. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு- Delimitation
இந்த கணக்கெடுப்பை முன்வைத்து மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை திருத்த இருக்கிறது பாஜக. மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு முன்வைக்க இருக்கிறது. பாஜகவின் இந்த திட்டத்தால் அதிகம் பாதிக்கப்படபோவது தென் மாநிலங்கள். குறிப்பாக தமிழ்நாடு.
543 எம்பிக்களில் தமிழ்நாடு-புதுவை சேர்த்த 40 எம்பிக்கள் என்பது ஏறக்குறைய 7.5 விழுக்காடு. இந்த சதவிகிதத்தை குறைத்தே தீருவது என்கிற முடிவில் தீவிரமாக இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. புதிதாக பொறுப்பேற்க இருக்கிற அரசு தமிழ்நாட்டின் தனித்தன்மையை காக்க போராட வேண்டிய சூழல் இருக்கிறது.
2. புதிய மாநிலங்கள் நிர்மாணம்
புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம்.
மேற்கு வங்கத்தை உடைத்து புதிய மாநிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் அமித்ஷா. ஆர் என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்ணனியில் இந்த திட்டம் இருக்கிறது.
இதைப்போலவே பாஜக வெற்றிக்கு வாய்ப்பில்லாத தென் இந்தியாவின் சில நகரங்களை யூனியன் பிரதேசமாக மாற்றுகிற திட்ட அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கிறது.
3. பொது சிவில் சட்டம் - Uniform Civil Code
கோவா, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது. குஜராத்தில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அஸ்ஸாம், ஹிமாச்சல், உபி, மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வருகிறது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை 2029க்குள் படிபடியாக அமல்படுத்தும் முடிவில் இருக்கிறது ஆர்எஸ்எஸ்.
4. கல்வியை தேசியப் பட்டியலுக்கு மாற்றுதல்
பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை தேசியப் பட்டியலுக்கு மாற்றி மனித வள அமைச்சகத்தின் கீழ் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதென முடிவு செய்திருக்கிறார் மோடி. கல்வியை காவி மயமாக்கும் இந்த முயற்சி 2024லியே தொடங்கி விட்டது. நீட் தொடங்கி பல தேசிய நுழைவுத் தேர்வுகளும் தகுதித் தேர்வுகளும் தமிழ்நாட்டை முற்றுகையிடப் போகின்றன.
5. ஒரே நாடு- ஒரே தேர்தல் (One Nation - One Election)
மாநிலங்களின் வலிமையைக்குறைத்து அவற்றை பெரும் மாவட்டங்களாக மாற்றுகிற கனவுக்கான முதல்முயற்சியே ஒரே நாடு ஒரே தேர்தல்.
ஒரே நாடு- ஒரே தேர்தல் மசோதாவை அதிமுக தொடக்கத்திலிருந்தே ஆதரித்து வருவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அம்சம்.
6. மும்மொழி திணிப்பு (Three Language Policy)
இதைப் பற்றி போதுமான அளவுக்கு தமிழ்நாடு பேசியும் கடுமையாக எதிர்த்தும் கூட, ஹிந்தியை தமிழ்நாட்டிற்குள் ஏதாவது ஒரு வடிவில் கொண்டு வந்தே தீருவது என உறுதியாக இருக்கிறார் ஒன்றிய மனிதவளத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
7. சிறுபான்மையினர் அதிகாரப் பறிப்பு மசோதா.
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளால் அதிகம் பலனடைந்தவை தென் இந்திய மாநிலங்கள்தான். தென் மாநிலங்களில் இந்துத்துவ அரசியலை முன்வைத்து வெளிப்படையாக மத மோதலை உருவாக்கும் திட்டம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.
வஃபு சட்டத்திருத்த மசாதோ மூலமாக இஸ்லாமியர்களையும், புதிய மசோதா மூலமாக கிறிஸ்தவ நிறுவனங்களையும் சட்டபூர்வமாகவே அழித்தொழிக்கிற பணியை தொடங்கி இருக்கிறது பாஜக அரசு.
2026 பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டின் நிகழ்காலத்தை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்க இருக்கிறது.