கோவை மண்டல தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மண்டல தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் அனைவருடன் சென்று கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றோம்.
தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான கதையம்சங்களுடன் தனக்கென தனி முத்திரை பதித்து, தனி ஒரு சகாப்தமாக விளங்கியவர், தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களில் இருந்து கிராமத்து மண்ணிற்கு அழைத்துச் சென்றவர், இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்ப��கும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, லாலிரோடு பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
நான் என்றென்றும் தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கும் கோவை மாவட்ட மக்களுக்கும் நன்றி உள்ளவனாகவும், அவர்களின் சேவகனாகவும் இருப்பேன். உங்களுக்காக என் குரல் ���ொடர்ந்து ஒலிக்கும். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அரவணைத்து எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
கோயம்புத்தூர் கே.எம்.சி.ஹெச் (KMCH) மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் தவமனி தேவி பழனிசாமி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான அவரின் சேவைகள் என்றும் நினைவுகூறத்தக்கவை. அவரின் இழப்பு மருத்துவத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தி���்கின்றேன்.
கோவை மாவட��டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, கோவைபுதூரில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
நான் என்றென்றும் தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கும் கோவை மாவட்ட மக்களுக்கும் நன்றி உள்ளவனாகவும், சேவகனாகவும் இருப்பேன். உங்களுக்காக என் குரல் தொடர்ந்து ஒலிக்கும். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அரவணைத்து எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில், பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
நான் என்றென்றும் தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கும் கோவை மாவட்ட மக்களுக்கும் நன்றி உள்ளவனாகவும், சேவகனாகவும் இருப்பேன். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அரவணைத்து எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவை மாவட்டம், பேரூரில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம், கழக வர்த்தகர் அணி இணைச் செயலாளர் அருமைத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், மாண்பும��கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைக்க வேண்டும் என்பதுதான் தம்பி K.S.மகேந்திரன் அவர்களின் எண்ணம். கழகத்தின் மீது அன்புக��ண்டுள்ள அனைவரின் எண்ணமும் அதுதான். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழ்நாட்டில் மீண்டும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியைக் கொண்டு வரப் பாடுபடுவோம்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, செல்வபுரம் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
நான் என்றென்றும் தொண்டாமுத்தூர் தொகுத��� மக்களுக்கும் கோவை மாவட்ட மக்களுக்கும் நன்றி உள்ளவனாகவும், சேவகனாகவும் இருப்பேன். உங்களுக்காக என் குரல் தொடர்ந்து ஒலிக்கும். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அரவணைத்து எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் பதவியேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி, நே��டியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற, இரண்டாவது பெண் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் ஆகியப் பெருமைகளை ஒருசேரப் பெற்றுள்ள பெருமைக்குரியவர்.
கடின உழைப்பின் வாயிலாக பல பெண் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி என்ற உயரிய பொறுப்பைப் பெற்று, கோவை மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
காற்றின் மொழியைக் காவியமாக்கியவர்!
வார்த்தைகள் தோற்கும்போது பேசும் உன்னத இசைக்குச் சொந்தக்காரர்!
மகிழ்ச்சி, சோகம், காதல், தனிமை என வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தன் இசையால் செதுக்கிய மாபெரும் கலைஞன்!
தலைமுறை கடந்தும் இதயங்களை ஆளும் இசைஞானி, மதிப்பிற்குரிய திரு. @ilaiyaraaja அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தகர் அணி இணைச் செயலாளர் அருமைச் சகோதரர் திரு. K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடைபெற்று முடிந்த சட்டம���்றத் தேர்தலில் நாம் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, 47 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனாலும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை அமைக்க முடியவில்லை.
1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் 4 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தோம். ஆனால் அடுத்து நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில், மாண்புமிக��� புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தனிப்பெரும்பான்மை வெற்றியுடன் கழகத்தின் ஆட்சியை அமைத்தார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அந்த நோக்கத்தோடுதான் நாம் பயணிக்க வேண்டும். எனவே அன்பான கழக உடன்பிறப்புகளே, நமக்கு கழகம் முக்கியம்தான், ஆனால் ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனிமேல் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டம் என இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழ்நாட்டில் மீண்டும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியைக் கொண்டு வருவோம்.
NARCISSISTIC SPEECH!
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழு��்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்���… யாரு கவலைப்ப��்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க @actorvijay!)
உங்களை போன்ற கழகத்தின் மீது உண்மையான விசுவாசம் கொண்டவர்கள் இது போன்ற தவறான முடிவு எடுத்திருக்கக்கூடாது. உங்களின் குடும்பத்தை பற்றி சிந்திக்காமல் சென்றுவிட்டீர்களே சகோதரா..
#RIPMahendran
தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் திரு. K.A.S.மகேந்திரன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர்தம் க���டும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.
கழகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் என்பது அனைத்து தொண்டர்களையும் மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது என்பது உண்மை தான் என்றாலும், அதற்கு இதுபோன்ற முடிவுகள் ஒருபோதும் தீர்வு ஆகாது.
தியாகம் என்ற பெயரில் எந்த ஒரு தொண்டரும் தன்னை வருத்திக் கொள்வதையோ, உயிரை மாய்த்துக் கொள்வதையோ ஒருகாலும் ஏற்றுகொள்ள முடியாது.
எந்த ஒரு சோதனை என்றால��ம் அதை மன உறுதியோடு எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்பதே மாண்புமிகு அம்மா அவர்கள் நமக்கெல்லாம் கற்றுத் தந்த நெறி!
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்���மன்றத் தொகுதி, செம்மேட்டில், பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
நான் என்றென்றும் தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கும் கோவை மாவட்ட மக்களுக்கும் நன்றி உள்ளவனாகவும், சேவகனாகவும் இருப்பேன். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அரவணைத்து எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக்கொ���்கிறேன்.
கடந்த இருண்ட கால திமுக ஆட்சியின் மறுபதிப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய 'பொய்க்கால் குதிரை' அரசின் கையாலாகாத்தனத்தால், தங்குதடையின்றி கிடைக்கும் போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் சீரழிந்து வருகிறது.
மேடையில் ஏறி வசனம் பேசுவது மட்டும் போதாது; அதனைச் செயலில் காட்ட வேண்டும். @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
"சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவியும் அதிகாரமும் கையில் கிடைத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை; அதற்குள் எளிய மக்களிடம் தனது ஆணவத்தையும் திமிரையும் காட்டுகிறார் போளூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக்.
மக்கள் எப்படி நிற்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று பாடம் எடுக்க இவருக்கு யார் உரிமை வழங்கியது? மக்கள் கொடுத்த அதிகாரம் என்பது அவர்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே தவிர, அவர்களிடம் ஆணவத்தைக் காட்டுவதற்கு அல்ல.
இவர்களைப் போன்ற அதிகாரத் திமிர் பிடித்தவர்களுக்காகத்தான் புரட்சித்தலைவர் அன்றே சொல்லியுள்ளார்: 'பதவி வரும்போது பணிவு வரவேண்டும்' என்று நினைவில் கொள்க!"
#பொய்க்கால்_குதிரை_அரசு