எளிய மனிதர்கள் சட்ட��ன்றத்துக்குள் நுழைவது பெரிய விஷயமில்லை.
ஐந்து ஆண்டுகள் முடிவில் அவர்கள் சட்டமன்றத்தை விட்டு வெளியேறும்போதும் எளிய மனிதர்களாக இருப்பார்களா என்பதே கேள்வி.
@thebackwalker@StarSportsTamil You are absolutely right. I lost my patience to watch mokkai comments .From my point of view Only Srikanth RJ Balaji and சடகோ���ன் Ramesh commentary keeping us to watch Tamil commentary to some extent others are absolutely mokkai. Nowadays I have moved to English commentary.
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
எனக்கு #தலைவர் என்றால் இவர் மட்டும்தான். இவர் கூறியதை மீள்பதிவு செய்தால், உடனே என்னை-சங்கி,திராவிடியா பயல்,சினிமாகாரன் என எல்லா தரப்பு மக்களும் குதிக்கிறார்கள் என்றால், வேறொன்னுமில்ல-பயம். அவ்வளவுதான்.என் தலைவன், யாரையும் தரக்குறைவாக பேச சொல்லலை ஆகையால��- இன்பமே சூழ எந்நாளும்💛🤘🏽
Would have turned 42 today!
But he remained 32 Forever...
Major Dhruv Yadav
The Armoured Corps
From: Haryana
He made supreme sacrifice in 2015.
Saluting on Birth Anniversary
#IndianArmy 🇮🇳 #MondayVibes
The Thirukkural 1330 – Vol. 4 is out now! ❤️🙏🏻 Grateful to have launched this volume in Dubai on December 14, 2025 🇦🇪 A heartfelt thanks to all the singers from across the world, and especially from the UAE & the Gulf region! 🌍❤️🙏🏻
🎬 Music/Lyrical Videos are available in my Youtube channel.
🎧 Streaming now on Spotify (https://t.co/QSkezMLMm0)
📀 Compilation albums are available on all streaming platforms
✨ Vol. 5 date & venue will be announced soon — stay tuned!
#TheThirukkural1330 #Dubai #UAE #Gulf #Vol4 #Tamil #Thirukkural #Music #Thiruvalluvar
தூதர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோது பேராசிரியர் தமிழன்பன் பாணியை ஒரு விஷயத்தில் பின்பற்றினேன். "இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன," எனக் கூறி அவர் செய்தியை முடிப்பார். எனக்கு அவர் அப்படிச் சொன்ன விதம் பிடித்திருந்ததால் நானும் அதைப் பின்பற்றினேன். அவரிடம் சொன்னபோது அதைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டார்.
என்னோடு செய்தி சொன்ன பேராசிரியர் ஈரோடு த��ிழன்பன், இன்றோடு நிறைவடைந்தார். புகழுடம்பு எய்தினார்.
ஓம் சாந்தி. 🌹🌹
#ஈரோடுதமிழன்பன்
என் அப்பா இறந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. என்னுடைய தமிழுக்கும் அரசியல் ஆர்வ விவாதங்களுக்கும் அடித்தளம் என் அப்பாதான்.
என் படிப்பெல்லாம் முடிந்து நிஜமான உலக வாழ்க்கையை சந்திக்கும் காலத்தில் அப்பா கூட இல்லை என்பது என்றுமே ஏக்கம் கலந்த வருத்தம்தான்.
தன் 50 வயதிலேயே அப்பா இறந்துவிட்டாலும், எனக்கு தெரிந்த அந்த குறுகிய காலத்திலேயே அவருடைய "Comeback Story" என்பது inspiring ஆன ஒன்று. அதை எனக்கு நானே நினைவூட்டிக்கொள்ளவும் இங்கே சிலருக்கு பயன்படலாம் என்ற எண்ணத்திலும் ஒரு பதிவாக பகிர்கிறேன்.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு க��ராமத்தில் அந்த காலத்து Middle Class குடும்பத்தில் பிறந்தவர் என் அப்பா. அவரது கிராமத்தில் முதல் பட்டதாரி. B.A. Economics படித்திருந்தார். இன்றும் பிரபலமாக உள்ள ஒரு தனியார் வங்கியில் Clerk ஆக வேலைக்கு சேர்ந்தார்.
வேலைக்கு சேர்ந்த சில வருடங்களிலேயே தன் உழைப்பு மற்றும் திறமையால் மேனேஜர் பதவிக்கு உயர்ந்தார். வங்கியின் தனிக் கிளைகளுக்கு Branch Manager பொறுப்புகள் கிடைத்தன. அவர் பொறுப்பேற்ற கிளைகளில் வங்கிக��கு நல்ல வளர்ச்சியை கொண்டுவந்தார். வங்கியின் Chairman நேரடியாக பாராட்டும் அளவுக்கு பிரபலம்.
அன்றைய காலகட்டத்தில், அன்று இருந்த வங்கியின் சிஸ்டத்தில் அப்பாவின் வளர்ச்சி பலரது கண்களை உறுத்தியது. அவர் தடுமாறி விழுவதற்காக காத்திருந்தார்கள். உடல்ரீதியாக, அப்பாவின் 36 வயதில் அவருக்கு Massive Heart Attack வந்தது. பிழைத்ததே Miracle என்றார்கள்.
அதற்குப் பின்னும் அவர் தளரவில்லை. சிறிய ஓய்வுக்கு பிறகு மீண்��ும் முழுவீச்சில் செயல்பட்டார். அடுத்த 3-4 ஆண்டுகளில் நிர்வாக ரீதியில் ஒரு சிக்கல் வந்தது. தொழில்கள் தொடங்க வங்கியில் வாங்கிய பெருங்கடனை சம்பந்தப்பட்டவர்கள் அடைக்கவில்லை.
அப்பா சறுக்குவதற்காக காத்திருந்தவர்கள் களமிறங்கினார்கள். "கடனை வசூலிக்காவிட்டால், நீ ஜெயிலுக்கு போவது உறுதி" என நெருக்கடி கொடுத்தார்கள். தன் கௌரவம் காக்க, தன் பெயரில் உள்ள (மற்றும் என் தாத்தா பெயரில் உள்ள) சொத்துக்களை வங்கிக்கு அடமானமாக கொடுத்தார்.
அப்படியும் வங்கி நிர்வாகம் "Internal Departmental Enquiry" வைத்து அவரை டிஸ்மிஸ் செய்தது. வேலையும் போனது, சொத்துகளும் திரும்ப வருமா என தெரியாத நிலை. வங்கி மீது வழக்கு தொடுத்தார். வழக்கு எப்போது முடியும் என்பதும் நிச்சயமில்லை.
இந்நிலையில் என் அம்மா டீச்சர் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததால், பொருளாதார ரீதியில் குடும்பம் மூழ்காமல் இருந்தது. அப்பா கிட்டத்தட��ட இரண்டு வருடங்கள் வேலை இல்லாமல் இருந்தார். அவரிடம் அப்போது இருந்ததெல்லாம் தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்தான். "இது ஒரு தற்காலிக சறுக்கல், எப்படியும் மீண்டு வந்துவிடுவேன்" என திடமாக நம்பினார்.
ஒரு பிரபல Holidays கம்பெனியில் மார்க்கெட்டிங் வேலை கிடைத்தது. அதில் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. பின்னர் ஒரு Finance கம்பெனியில் Assistant Manager வேலை கிடைத்தது. அதில் ஓரளவுக்கு நன்றாக செயல்பட்டுவந்த நிலையில், அந்த கம்பெனியே திவால் ஆனது.
மீண்டும் வேலை இல்லாமல் சில மாதங்கள். ஒரு ஆடிட்டரிடம் எழுத்தர் வேலைக்கு போனார். வேலை இல்லாமல் வீட்டில் இருப்பது ஒருவித சங்கடம் என்றால், ஒரு காலத்தில் Bank Branch Manager ஆக இருந்துவிட்டு பின்னர் ஒரு ஆடிட்டரிடம் அசிஸ்டன்ட் மாதிரி வேலைக்கு போவது வேறுவித சங்கடம். ஆனால் அதை அப்பா வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
இடைப்பட்ட காலகட்டத்தில் சொந்த பந��தங்களும் அப்பாவின் வீழ்ச்சியை ரகசியமாக ரசித்தார்கள். அப்பா தன் கிராமத்திற்கு செல்வதையோ விசேஷங்களுக்கு செல்வதையோ குறைத்திருந்தார்.
பின்னர் மதுரையில் ஒரு சிமெண்ட் கம்பெனியில் வேலை கிடைத்தது. நாங்கள் திருச்சியில் இருக்க, அப்பா மதுரையில் தங்கி வேலை செய்தார். சனிக்கிழமை இரவு திருச்சி வந்துவிட்டு, மீண்டும் திங்கள் காலை மதுரைக்கு கிளம்பி செல்வார்.
இப்படி சில காலம் கடந்தபின், ���ிருச்சியிலேயே ஒரு சிமெண்ட் கம்பெனியில் Administrative Manager வேலை கிடைத்தது. டென்ஷன் நிறைந்த வேலைதான், என்றாலும் அப்பா நன்றாக வேலை செய்து கம்பெனி MDயின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமானார். கடன்கள், வாடிக்கையாளர் அதிருப்தி என்று இருந்த கம்பெனியை தனது செயல்பாட்டால் Positive Balance Sheetக்கு கொண்டு வந்தார்.
இழந்த கௌரவம் மீண்டது. "வேலை போச்சாம்" என்றவர்கள் "மேனேஜராம்" என்று பேசத் தொடங்கினார்கள். நான் MCA படித்துக்கொண்டிருக்க, என் தங்கை B.E. படித்துக்கொண்டிருக்க "நலிவடைந்த குடும்பம் மீண்டுவிட்டது" என்கிற குறியீடு வந்தது. அப்பாவுடைய அந்த "Comeback"ஐ இன்று நினைத்தாலும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் முட்டிக்கொள்ளும்.
இத்தகைய சூழலில், சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், தான் முன்பு வேலை செய்த வங்கிக்கு எதிராக போட்டிருந்த வழக்கு தொடர்பாக சென்னையில் வக்கீலை காண சென்றபோது, திடீர் மாரடைப்பு ���ற்பட்டு அப்பா இறந்துவிட்டார். அன்று ஏற்பட்ட அதிர்ச்சியை விவரிக்க இன்றும் வார்த்தைகள் இல்லை.
அப்பாவின் உடலை பெறுவதற்கு திருச்சியிலிருந்து சென்னைக்கு எங்களுடன் அப்பா வேலை செய்த கம்பெனியின் MD கூடவே வந்தார். பின்னர் அப்பாவின் உடலுடன் கிராமத்திற்கு செல்லும் வரை உடன் வந்தார். அப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், நாங்கள் எதிர்பாராத வகையில், அந்த கம்பெனியின் சார்பில் ஒரு நாளி��ழில் "நினைவு அஞ்சலி" கால்பக்க அளவிற்கு வெளியிட்டிருந்தார்கள். இவையெல்லாம் அப்பா தன் மறைவுக்கு முன் மீண்டும் ஒரு உயர்வை அடைந்ததற்கான சான்றுகள்.
எத்தகைய வீழ்ச்சி வந்தாலும், இறை நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் நேர்மறை எண்ணங்களையும் தளரவிடாமல் பார்த்துக் கொண்டால், அந்த வீழ்ச்சி தாற்காலிகமானதுதான் என்பது என் அப்பாவின் வாழ்வு எனக்கு தந்த ஆகச்சிறந்த செய்தி.
என் அப்பா மறை��தற்கு சில மாதங்கள் முன்பு எனக்கு MCA இறுதியாண்டு Campus Interviewல் வேலை கிடைத்திருந்தது. அப்பா எனக்கு அனுப்பிய கடைசி கடிதத்தில் இருந்த வரிகள் - "உன் எதிர்காலம் அறிந்து எல்லோருடைய புருவங்களும் உயர்ந்துள்ளன. நாங்களும் பெருமையடைகிறோம். அதனை கவனமுடன் செவ்வனே, சிறப்புடன் செய்து இன்னும் பல வெற்றிப்படிகளை எட்ட வேண்டுகின்றோம்".
[பின் குறிப்பு: அப்பா இறந்து 12 ஆண்டுகளுக்குப் பின், வங்கியின் வசம் இருந்த சொத்துக்கள் எங்களுக்கு கிடைத்தன].
Two private AC buses caught fire within 10 days, the first in Jaisalmer on 14 Oct and the second in Kurnool today, killing 20 and 19 passengers, respectively.
Time to learn one more survival skill in India. Private AC buses usually have only one door, I think the law mandates for one only. The emergency exit is supposed to be there, but in most cases, it’s non-functional. These buses have poor wiring, unauthorized modifications, and plenty of flammable material, enough to give you one of the worst possible deaths.
So think before you travel in an AC bus in India. If you have to, check the emergency exits, are they functional or not? Don’t bother asking the govt for better regulations. Itna bada desh, roz hazaaro log marte rehte hain. Who cares if a few more die? Apna bachaav khud karo.
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் உயிர் பலி!
சமூக நீதி வெறும் பேச்சில் இருந்தால் பத்தாது. செயலில் சிறதாவது இருக்க வேண்டும். இந்த அலட்சியத்திற்கு காரணமான மின்சார வாரி�� அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய அதிகாரிகள் மீது உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈடு செய்ய முடியாத இந்த நஷ்டத்திற்கு அரசின் அலட்சியத்தால் ஆளாகி இருக்கும் ��ந்த குடும்பத்திற்கு ரூ 1 கோடி தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் ! மேலும் அந்த குழந்தைகளின் கல்லூரி செலவு வரை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். அங்கு மக்கள் பயன்பாட்ட���ற்கு வைக்கப்பட்டிருக்கும் கழிப்பறையை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
தண்ணீர் இல்லை. கதவு இல்லை. சுத்தம் சுத்தமாக இல்லை. நல்ல நிலையில் உள்ள யாராவது இங்கு சென்றால் வியாதியுடன் தான் திரும்பி வர வேண்டும். ஒரு சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கழிப்பறையே இவ்வளவு மோசமாக இருக்கிறது என்றால் அந்தப் பகுதியில் உள்ள மற்ற அரசு கட்டுமானங்கள் எப்படி இருக்கும்?? இது என்ன மாடல்??
சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு தண்ணீர் வசதியுடன் சுத்தமான கழிப்பறை ஏற்படுத்திக் கொடுங்கள்.
@cudcollector
திராவிட ஆதரவாளர்கள் "இது பெரியார் மண்" என சொல்வதன் மூலம் அண்ணாவின் புகழை மழுங்கடிக்கிறார்கள். உண்மையில், திராவிடத் தலைவர்களில் உச்சமாகப் போற்றப்படவேண்டியவர் அண்ணாதானே தவிர, பெரியார் அல்ல.
இருவருக்கும் உள்ள ஒரு சில முக்கியமான வித்தியாசங்களை பார்ப்போம் -
* பெரியாருடன் இருந்த காலத்தில், "திராவிட நாடு" கோரிக்கையை வைத்திருந்தபோதும் பிரிட்டிஷிடமிருந்து இந்தியா விடுதலை பெறுவதை அண்ணா வரவேற்றார். பெரியார் ஆகஸ்ட் 15, 1947ஐ துக்க நாள் என்று அறிவித்தார்.
* தான், தனக்கு, தன் சுற்றம் என இயக்கத்தை சுருக்கிவிடாமல் தன்னைத் தாண்டி இயக்கம் வளரவேண்டும் என்ற தெளிவான பார்வையும் தலைமைப் பண்பும் அண்ணாவிடம் இருந்தது. பெரியாருக்கோ தன் இயக்கத்தின் சொத்���ுகள் தன்னைவிட்டுப் போய்விடக்கூடாது என்ற தீர்மானம் இருந்தது. தன் தளபதி போல் செயல்பட்ட அண்ணா மீது நம்பிக்கை வைக்காமல் சொத்துக்காக மணியம்மையை அவர் திருமணம் செய்ததும் அதற்காகத்தான்.
* அண்ணா ஒரு ஜனநாயகவாதி, பெரியார் ஒரு சர்வாதிகாரி.
* "ஆரிய மாயை", "கம்பரசம்" என இந்துமதத்தை நையாண்டி செய்துவந்த அண்ணா ஒரு கட்டத்தில் தன் கட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்து ஆட்சியைத் தந்தபின் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று பலதரப்பையும் அரவணைக்கும் கோணத்திற்கு வந்தார். இதைக் கொள்கை சமரசம் என்று பார்க்கலாம் என்றாலும், அதைத்தாண்டி தனக்கு பொறுப்பு வந்ததும் சமூக நல்லிணக்கத்திற்காக வெளிப்படுத்திய பக்குவமாகவும் பார்க்கலாம். ஆனால், பெரியாரோ இறுதிவரை இந்துமத துவேஷத்தையும் ஆரிய-திராவிட பிரிவினை சிந்தனையையுமே விதைத்துக் கொண்டிருந்தார்.
எனவே "பெரியார் வழியில் அண்ணா" என்று சொல்வதே அ���்ணாவுக்கு செய்யும் அவமரியாதைதான். அந்த அவமரியாதையை திமுக அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து செய்துவருகிறது.
இப்போது செய்யும் "பெரியார் மண்" பிரச்சாரத்தை திமுக தொடருமானால், இன்னும் சில வருடங்களில் அண்ணா கிட்டத்தட்ட மறக்கடிக்கப்படுவார்; எப்படி முகலாய வரலாற்றில் பாபருக்கும் அக்பருக்கு இடையில் ஹுமாயூன் மங்கலாகிப் போனாரோ, அதைப் போல் திமுக தனக்கென எழுதும் வரலாற்றில் பெர���யாருக்கும் கருணாநிதிக்கும் இடையில் அண்ணா மங்கலாகிப் போவார்.
@thebackwalker@ArtisteKarthik My favourite too after Thalaivar Rajini. Idhaya thamari is one of my favourite alongside Agninatchatram. Karthik performance in the songs is always lovely to watch.