சிறந்த இயக்குநர் - ராம் (பறந்து போ)
ரயிலில், எதிர்சாரியில் அமர்ந்து நம் பயணக் களைப்பு போக, கதை சொல்லும் பெயரற்ற வழிப்போக்கனாய் ‘பறந்து போ’வில் அவதரித்தார் ராம்.
பொருளாதார அழுத்தங்களில் சிக்கி உளையும் அப்பாக்களை அம்புலி மாமாக்களாக மாற்றி இவர் வேடிக்கையாய் கதை பகிர்ந்த விதத்தில், மூத்தவர்களும் கைதட்டி ரசித்தார்கள்.
தாத்தாக்களும் பாட்டிகளும் தொலைந்துபோய்விட்ட தனிக்குடித்தன வாழ்க்கையில், குழந்தைகளின் புவியீர்ப்பு மையமாய் பெற்றவர்கள் மட்டுமே இருப்பதையும், அவ்விசை அறுபடும்போது சின்னஞ்சிறு மனதில் எத்தகைய உளவியல் தாக்கம் ஏற்படுகிறது என்பதையும் பெற்றோரிய கல்வித் திட்டமாக இவர் வகுக்க, அதைக் கற்றுத் தேர்ந்தார்கள் நடுத்தர வயதினர்.
அன்பைக்கூட அழுதே வெளிக்காட்டத் தெரிந்த வாண்டுகளின் வழக்கறிஞராக, ‘பகட்டான பொம்மைகள் தேவையில்லை, தந்தைகளின் பிரத்யேக மணத்தை சட்டைப்பிடியில் முகர்ந்தபடி செல்லும் குட்டி பைக் சவாரியே போதும் மழலைகள் உலகை வென்றதாக உணர’ என இவர் முறையிட, திரையரங்க இருட்டில் பிஞ்சுக்கைகளைத் தேடிப்பிடித்து ஈரம் கசியும் கண்களில் ஒத்திக்கொண்டன முதிர்ந்த கரங்கள்.
வளர்ந்த மகன்களுக்கும், தகப்பன்மார்களுக்கும் இடையில் இயல்பாகவே காலம் ஏற்படுத்திவிடும் இடைவெளியை நிரப்பியது, ‘‘எனக்கு புரியுற மாதிரி நீ பேசுனதே இல்லை’’ என்கிற இவரின் ஒற்றை வசனம்.
கோகுலும் வனிதாவும் பரிமாறிக்கொள்ளாத காதல், சபலமில்லாத நட்போவியமாக மாறியது ராம் ஸ்பெஷல்!
குழந்தைகள் படங்களுக்கு தமிழ்ச் சூழலில் சந்தை இல்லை என்கிற நிலையை மாற்றி, 'சொல்லும்படிச் சொன்னால் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும்’ என்று சாலை போட்டுக்கொடுத்த ராம், பேரன்பின் ஊற்று.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #Ram | #ParandhuPo | #BestDirector
லைட்மேன் கிட்ட “கூட” தோள்ல கை போட்டு பேசினாராம்..
Typical privileged arrogance இதுதான்.. என்னமோ இவிங்க எல்லாம் கடவுள் மாதிரியும் தோள்ல கை போட்டதுனால ஏதோ வரம் கொடுத்து அவிங்க வாழ்கையவே மாத்திட்ட மாதிரியும் பேசுவானுக..
எப்பதான் டா நார்மல் Person மாதிரி Behave பண்ணுவீங்க?? 😤
Everything right from bringing AC into his home, taking him to doctor & treating her skin allergic, Created a home classroom, arranging online tutor, buying him all necessary things by ( Mohammad Ashik - Abrokecollegekid ) insta influencer 💯
Vekkamey illa, credit stealers 🥴🥱