தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதுக்கோட்டை வடக்கு மாவட்டப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களுடன் மறுசீரமைப்புக் குழுக் கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. திருநாவுக்கரசர் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கட்சி அமைப்பு மறுசீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
#TNCongress
@ThiruArasarINC
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தமது இளமை பருவத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களின் தலைமையை ஏற்று இளைஞர் காங்கிரஸ் இணைந்து , காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார். தொடக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், பிறகு சிவகங்கை மக்களவை உறுப்பினராகவும், ஒன்றிய அரசின் அரசு நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். 2013 ஆண்டில் மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் .
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உரிமைக் குரல் எழுப்பியவர். காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை வழங்கியவர். டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களது திடீர் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள். நாளை (18.09.2026) சிவகங்கை மாவட்டம், ஏரியூரில் அவரது இறுதிச் சடங்குகள் 3 மணி அளவில் நடைபெறும்.
#RIPEMSNachiappan
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று திருநகரில் உள்ள எனது இல்லத்தில் விநாயகரை வழிபட்டோம். 🙏
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் அமைதியும் வளமும் பெருகட்டும்!
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 🌺
#விநாயகர்சதுர்த்தி#TNCongress
இன்று (15.09.2026) மறைந்த பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான ஐயா திரு. சாலமன் பாப்பையா அவர்களின் மதுரையில் உள்ள இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்.
அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசாஅவர்களின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது!
மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும் தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது. தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது; திரு.உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் குறிப்பிட்ட "#ஆபாசநிதி" என்று சொன்னது போல, திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள திரு.௮.ராசா MP அவர்கள் இன்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. அக்கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசுவது சற்றும் குறைந்தபாடில்லை; பெண்களே திமுகவை முற்றிலுமாக நிராகரித்து வருவதற்குக் காரணம் இவர்களின் இந்த வக்கிர சிந்தனைதான்!
கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், தவெக அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களின் தாயாரைக் குறிவைத்து இத்தகைய தரம் தாழ்ந்த தனிநபர் வசைபாடல்களையும் அச்சுறுத்தல்களையும் தொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இந்த அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல!
#TNCongress
கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுவெளியிலும் தொண்டர்கள் கூட்டத்திலும் "அரசியல் களத்தில் யாரை விமர்சித்தாலும் கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் பேசுங்கள்" என்று உபதேசம் செய்கிறார். ஆனால் எதார்த்த களத்தில் நடப்பதோ அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆர்.எஸ்.பாரதி போன்ற மூத்த உறுப்பினர்கள் பொதுமேடைகளில் வரம்பு மீறி, முதலமைச்சர் விஜய் அவர்களை ஒருமையில் விளிப்பதும், "ஓடுகாலி நாய்" எனத் தரம் கெட்ட வன்மச் சொற்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் இருப்பது இயல்புதான்; ஆனால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை நோக்கி தனிநபர் வன்மத்தையும், அநாகரிகமான வசவுகளையும் வீசுவது ஒட்டுமொத்த ஜனநாயக மாண்புகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தல். கட்சித் தலைவரின் குடும்பம் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை இந்த எல்லை மீறல்களைத் தொடர்ந்து அரங்கேற்றுவதை திமுக தலைமை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்?
மக்கள் தீர்ப்பை மதிக்காமல் மாநில முதலமைச்சரையே பொதுமேடைகளில் ஒருமையில் இழிவுபடுத்துவது, பெண்களுக்கு எதிரான தொடர் அவமதிப்புகள் மீது தன் கட்சிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது, அதிகாரத்தை இழந்த விரக்தியில் பொதுவெளியில் தரம் தாழ்ந்து கூச்சலிடுவது என திமுக இன்று தன் நம்பகத்தன்மையை இழந்து மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கிறது.
பொது அமைதியையும் அரசியல் நாகரிகத்தையும் சீர்குலைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் இப்படி நாவடக்கமின்றிப் பேசுவதை திமுகவின் தலைமை கண்டும் காணாமல் இருப்பது அவர்களின் வீழ்ச்சிக்கான தெளிவான அறிகுறி. அரசியல் களம் மக்கள் நலனுக்கான ஆரோக்கியமான விவாதக் களமாக இருக்க வேண்டுமே தவிர, இத்தகைய நாகரிகமற்ற தனிநபர் வசவுகளுக்கான கூடாரமாக ஒருபோதும் மாறக்கூடாது.
#TNCongress #CMJosephVijay #TVKVijay
September 9th marks a historic day. #CMVijay has named the 'Secular Social Justice Victory Alliance' for Tamil Nadu & Puducherry, a sister alliance to INDIA 🇮🇳.👍🤝
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், 09-09-2026 அன்று நடைபெறவுள்ள த.வெ.க. தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க, என்னை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் மற்றும் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ராஜேஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி, பொதுச்செயலாளர் திரு. சிரஞ்சீவி ஆகியோர் உடனிருந்தனர்.
#TNCongress
#TVK
#CMJosephVijay
#RahulGandhiForPM
திருநெல்வேலி மாவட்டத்தில் சமுதாயத்தை சீரழிக்கும் குழந்தைகளை வைத்து தர்மம் எடுக்க தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அவர்களிடம் விசாரணை நடத்த மனு அளித்த போது
#CMJosephVijay#tngovt#childwelfarecommittee
மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 311-வது ஜெயந்தி விழா! 🇮🇳
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடிய பாண்டிய மன்னர் காத்தப்ப பூலித்தேவர் அவர்களின் ஜெயந்தி விழா, இன்று (01.09.2026) தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவலில் உள்ள பாண்டியர் சமஸ்தானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கலந்து கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்
தென்காசி மாவட்டத் தலைவர் திரு. ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் திரு. ரூபி ஆர். மனோகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். எஸ். இராமசுப்பு, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் திரு. கே. சங்கரபாண்டியன், திரு. வீ. கார்த்திகேயன், மாநில பொதுச்செயலாளர் திரு. எம். எஸ். காமராஜ் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார, நகர மற்றும் பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் காமராஜர் கண்ட உயர்ந்த கல்விக்கனவை நனவாக்கி, தமிழகத்தின் உயர்கல்வித்துறையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பெரும்பாலான நிதி நிர்வாக மற்றும் தொடர் செலவினங்களுக்கே சென்றுவிடும் சூழல், தொலைதூரக் கல்வி வருவாய் இழப்பு, மத்திய UGC நிதி முடக்கம் மற்றும் பல்கலைக்கழக நிதி பற்றாக்குறை போன்ற கட்டமைப்பு சவால்களைச் சீரமைப்பது மிக முக்கியம். ஒரு பக்கம் ஊழலை ஒழித்து, மறுபுறம் வலதுசாரி/RSS சக்திகளின் ஊடுருவலை முறியடித்து, பல்கலைக்கழகங்களை மீட்டெடுத்து மாணவர்களுக்கு உலகத்தரக் கல்வியையும் பேராசிரியர்களுக்குப் பலத்தையும் தர வேண்டும்.
இன்று உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்யும் மாண்புமிகு அமைச்சர் திரு. P. விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
வெற்றி தமிழகம் என்ற பாதையில் இத்துறை சார்ந்த ஆக்கப்பூர்வப் பணிகளுக்கு முழு ஆதரவளித்து வழிநடத்தும் மாண்புமிகு @CMOTamilnadu விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
2,150+ உயர்கல்வி நிறுவனங்கள்,
60+ பல்கலைக்கழகங்களின் மறுமலர்ச்சிக்கான வரலாற்று நிதிநிலை அறிக்கையாகவும், உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 50% GER என்ற மைல்கல்லைத் தாண்டி முன்னெடுத்துச் செல்லும் திட்டமாகவும் இது அமையும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்!
@Viswanathan_INC
#CMVijay
#TNHigherEducation
#Congress
#TVK
தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு சார்பில், திரு. VLC ரவி அவர்களின் ஏற்பாட்டில், பெருந்தலைவர் காமராஜர், பாரத ரத்னா திரு. ராஜீவ் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில், நான் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினேன் .
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் திரு. ரூபி மனோகரன், பொதுச் செயலாளர் திரு. நெடுஞ்செழியன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் திரு. S.A. அருள்ராஜ், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. R.S. செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
so that families can book their next cylinder without unnecessary delay.
The cylinder booking interval should be reduced from 45 days to 30 days to help ordinary families facing difficulties due to LPG shortages.
#LPG#GasCylinder#PublicDemand#HardeepSinghPuri#Congress
Honble Minister shri @HardeepSPuri
Common people are facing difficulties due to the shortage of domestic LPG cylinders.
At present, consumers are allowed to book a domestic LPG cylinder once every 45 days. This period should be reduced to 30 days