இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் தலைவர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களை நேரில் சந்திந்து ஆசிகளும் வாழ்த்துகளும் பெற்றேன்.
காலம் உள்ளவரை இந்த வாழ்வை எனக்களித்த தளபதி அவர்களுக்கும், திருவரங்கம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் நேர்மையாக உண்மையாக உழைப்பேன்!
மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே?
தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.
ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே.
யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது.
மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது.
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூகநீதி பார்வையோடு அறநிலையத்துறையில் மேற்கொள்ளும் சீர்திருத்தம் வெற்றி பெறட்டும்!
@RameshOffcl
மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களின் சாலைகளை உல்லாசநிதியின் உரைகளைப்போல ஓட்டைக்குழிகளாக மாற்றி நாள்தோறும் கடத்தப்பட்டு வந்த வளச்சுரண்டலை ஆட்சிக்கு வந்த முதல்நாள் முதல் சிரமேற்கொண்டு தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.
அதன் தொடர்ச்சியாக, குவாரிச்சுரண்டலுக்கு சம்மட்டி அடிகொடுக்கும் வகையிலும், 3 மாதங்களுக்கு எல்லையோர மாநிலங்களுக்கு கட்டுமானப்பொருள் ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது!
இதன் மூலம் தமிழ்நாட்டுக்குள் கட்டுமானப்பொருட்களின் இருப்பை அதிகரிக்க முடியும். இப்படி அதிகரிப்பதன் மூலம் அந்த பொருட்களின் விலைவாசி குறையும். புதிய கட்டுமானங்களுக்கான தொடக்கவிழாக்கள் அதிகமாக நடைபெறும் இப்பருவகாலத்தின் பலன்களை சாமானிய மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.
🔔 | ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொடியேற்றத்தை முன்னிட்டு, சென்னை தலைமை செயலகத்தில் அதற்கான பணிகள் இன்று (27.07.2026) தொடங்கியுள்ளது.
முதல் முறை நமது அண்ணன் @TVKVijayHQ முதலமைச்சராக தேசிய கொடி யேற்றி வைக்க உள்ளார் ! 🥹
நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.
நீட் தேர்வு ஊழல்: மோடியின் உயர்நிலைக்குழு ஏமாற்று வேலையே!
மாணவர்கள் - இளைஞர்களின் போராட்டத்துக்கு முன் மண்டியிட்ட ஒன்றிய மோடி அரசு, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு என்பதாக ஒரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் 'வல்லுநர்கள்' கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
அக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், இந்திய உளவுத் துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ஒன்றிய கல்வித் துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அம்ரித் லால் மீனா ஆகியோர் உள்ளனர்.
இது ஒன்றிய அரசின் ஏமாற்று வேலை என்பதற்கான ஒரு உதாரணம், கடந்த 2024ஆம் ஆண்டு நீட் தேர்வில் பெருமளவில் மோசடி அரங்கேறியதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முன்னாள் இஸ்ரோ தலைவரும், ஐஐடி கான்பூர் நிர்வாகக்குழு தலைவருமான கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழுவை 2024 ஜூலை 22ல் அமைத்தது மோடி அரசு. இக்குழு நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையை சீரமைக்கும் என்று சொல்லப்பட்டது. அதே ஆண்டு அக். 22ல், 101 பரிந்துரைகளை கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது ராதாகிருஷ்ணன் குழு.
இன்று வரை அந்த பரிந்துரைகளை முழுவதுமாக நிறைவேற்றாத மோடி அரசு, இப்போது மீண்டுமொரு கண்துடைப்பு குழுவை அமைத்துள்ளது.
2024 நீட் முறைகேட்டிலிருந்து 2026 முறைகேடு வெளியானது வரை தேசிய தேர்வு முகமைக்கு முழுநேர தலைமை இயக்குநரை ஒன்றிய அரசு நியமிக்கவே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு, தேர்வு முகமையை சீரமைத்த லட்சணம் இது தான்.
இப்போது அமைக்கப்பட்டுள்ள குழு மீண்டும் தேசிய அளவிலான தேர்வு முறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராயும் என்று அறிவிக்கப்பட்டாலும், இளைஞர்கள் - மாணவர்கள் மத்தியில் நொறுங்கிப் போன மோடியின் போலி பிம்பத்தை காப்பாற்றுவதற்கான குழுவாகவே அமைந்துள்ளது.
மாட்டு மூத்திரம் குடித்தால் நோய்கள் குணமாகும் என்று அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் முரணாக பாடமெடுக்கும் ஐஐடி இயக்குநர் காமகோடி இக்குழுவில் இருக்கிறார்.
ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்று இல்லை என்று ஒன்றிய மோடி அரசு அறிவித்த ஒன்றுக்கும் உதவாத ஆதார் அட்டையை கொண்டு வந்தவர் தான் குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி. ஒன்றிய - மாநில அரசுகளின் மக்கள் நல திட்டங்களிலிருந்து ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மற்றும் சிறுபான்மையின மக்களை ஒதுக்கி வைக்கும் கருவியாக ஆதார் அட்டையை ஒன்றிய அரசும் பாஜக ஆளும் மாநில அரசுகளும் பயன்படுத்துவதை பார்த்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் காலங்காலமாக நடத்தப்படும் 10 & 12 வகுப்பு தேர்வுகள் 100% மாணவர்களின் நம்பிக்கையை பெற்றதாக உள்ளது. எந்தவித சிக்கலோ தடங்கலோ இன்றி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது நமது தமிழ்நாடு அரசு. ஆனால் ஒன்றிய மோடி அரசோ சரக்கு போக்குவரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்று சொல்லி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைமை அதிகாரிக்கு கல்வித்துறை சீரமைப்பில் என்ன வேலை?
எல்லோருக்கும் எல்லாம் (Inclusive) என்பது தான் அரசியலமைப்பு சட்டம் சொல்லும் சனநாயக பண்பு. சமமான கல்வி வசதியும், வாய்ப்பும் இல்லாத சூழலில், தகுதியை நிர்ணயித்து மாணவர்களை வெளியே நிறுத்தும் (Exclusive) தேர்வு முறைகள் மக்கள் விரோத சனாதன பண்புகளை கொண்டவை.
நீட் தேர்வு ரத்து என்பதே நமது தங்கை அனிதா தொடங்கி ஒவ்வோராண்டும் நீட் உயிர்க்கொல்லி தேர்வுக்கு நாம் இழந்து வரும் குழந்தைகளுக்கான நீதியாக அமையும். இந்தாண்டு முறைகேட்டினால் ரத்தான நீட் தேர்வால் மட்டும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த பதிவை எழுதும்போதே, நீட் மறுதேர்வு எழுதிய மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அங்கீதா சுரேஷ் சங்காலே எனும் 19 வயது மாணவி உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி நெஞ்சை பிளக்கிறது.
நீட் போன்ற உயிர்க்கொல்லி தேர்வு ரத்தே நமது ஒரே இலக்கு! நமது மாணவர் - இளைஞர் படை அதனை நிச்சயம் நிறைவேற்றும்!
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
27.7.2026