Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth
The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations.
An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling.
Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment.
The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP.
Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States!
Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth.
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப���பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!
தொழில் வளர்ச்சி இல்��ாமல் ஒரு ட்ரில்லி��ன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!
Gonna have my first ever long technical interview over lunch. I'll be having a tough time between dipping parotta in salna and explaining why attention mechanism in VLAs is not enough to control force-feedback from robotic systems.