Yaakkai Intensity doing Research, Documenting, Create Awareness and Conservation of heritage sites. It registered organization for strengthen heritage.
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை எனும் ஊரில் பதிவான நடுகல்:
இந்த நடுகல் கல்வெட்டு கொங்கு நாட்டின் பண்டைய எல்லையை வரையறுக்க தேவையான சான்றினை வழங்கியுள்ளது.
அழகிய சோழ கங்கன் எனும் வீரன் தம் ஊரை அழிக்க வந்த பகைவர்களைக் கொன்று தானும் மாண்டார் எனும் செய்தி பதிவாகியுள்ளது.
உடுமலை அருகேயுள்ள கொங்க விடங்கீஸ்வரர் கோயிலில் ���ள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆவணப்படுத்தும் வழிமுறைகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
மாணவர்களும் நேரடியாக கல்வெட்டுகளைப் படியெடுத்து படித்து செய்முறை பயிற்சியை பெற்றனர்.
பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி மாணவர்களுக்கு தொல்லியல் சான்றிதழ் பாடத்திட்டத்தை அக்கல்லூரியின் தமிழ்த் துறையுடன் இணைந்து யாக்கை குழு ஒருங்கிணைத்து வருகின்றது.
தொல்லியல் சான்றிதழ் பாடத்திட்டத்தின் ஓரங்கமாக மாணவர்கள் கள ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.
*Krishnadēvarāya inscription from Mudumalai Tiger Reserve Forest,Tamil Nadu
It is written in Kannada language and characters,dated in Śaka 1448,Vyaya,Pālguṇa,ba 3,Monday = 1527 C.E.,February 19.
It records the gift of a village Kadadevanhalli situated in Hiriya Mayara sime, after renaming it as Mallikarjunapura to Parvata vodeya,the disciple of Linganna vodeya of Dharapura by Dannayaka of Kongunadu sime and Palarasa of Koteya sime. The gifted village was under the territory of Balaraja vodeya and which falls under the administration of Ayyappa vodeya.
Courtesy: Yaakkai Heritage Trust,Coimbatore,Tamil Nadu.
கோவை மாவட்டத்தில் மேற்கு மலைத்தொடரில் பாலமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோவனூர்.
வேட்டைக் காட்சிகள், மேய்ச்சல் காட்சிகள், சடங்குகள் இங்குள்ள ஓவியங்களின் முக்கிய கருப்பொருளாகும்.
படத்தில் நீங்கள் காண்பது இரண்டு மான்கள் மோதிக் கொள்ளும் காட்சி.
#coimbatore#caveart
கட்டிடக்கலை பயிற்சி;
கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் தொல்லியல் சான்றிதழ் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கோயில் கட்டிடக்கலை மரபு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
கோயில் கட்டிடக்கலை அறிமுகம், கட்டிடக்கலை வகைகள், நுண���க்கங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
நடுகல் ஆவணப்படுத்துதல்
விவசாயக் காட்டில் உடைந்த நிலையிலிருந்த நடுகல் கல்வெட்டை யாக்கை குழு ஆவணப்படுத்தியது.
பொ. ஆ. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கன்னட எழுத்துடைய கல்வெட்டு இது
தர்மபுரி மாவட்டம் சாமத்தல் எனும் ஊரின் அருகேயுள்ள தோட்டத்தில் இது பதிவாகியுள்ளது.
நூலாசிரியர்கள் திருமிகு குமரவேல் இராமசாமி, சுதாகர் நல்லியப்பன் ஆகிய இருவரும் இணைந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர். இவ்விருது பாராட்டுச் சான்றிதழ் உடன் ��ூபாய் பத்தாயிரம் பணம் பரிசு கொண்டதாகும்.
இவ்விருதினை வழங்கிய த. மு. எ. க. ச அறம் கிளையின் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறம் கிளையின் சார்பில் வழங்கப்பெறும் சிறந்த தொல்லியல் ஆய்வு நூலுக்கான "சே. அருண்���ுமார் நினைவுத் தொல்லியல் விருது - 2025" நீலமலைத் தொல்லியல் நூலுக்கு வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை (16-05-26) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில்,
கோவை PSGR கல்லூரியின் வரலாற்றுத் துறை,சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் வரலாற்றுத் துறை(WCC),கிறிஸ்தவக் கல்லூரியின் வரலாற்றுத் துறை (MCC),இராணி மேரி கல்லூரியின் வரலாற்றுத் துறை ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த இளங்கலை, முதுகலைப் பிரிவின் இருபால் மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி நடைபெற்றது.
கள ஆய்வுப் பயணம்
கோவை பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி கல்வெட்டியல் பிரிவு மாணவர்கள் பேராசிரியர்கள் ஆகியோர் கேரளப் பகுதியில் உள்ள மறையூர் பாறை ஓவியங்களைப் பார்வையிட்டனர்.
கல்வெட்டியல் பிரிவு மாணவர்களுக்கான இந்த கள ஆய்வுப் பயணத்தை யாக்கை அறக்கட்டளை ஒருங்கிணைத்தது.
இந்த ஆற்றின் கரையில் மட்டும் ஏன் தொடர்ந்து வரலாற்றுக் கால கோயில்கள் அமைக்கப்பட்டன என கொங்கு நாட்டின் இடைக்கால வரலாற்றை அறியும் பயணமாக இது அமைந்தது.. அனைவருக்கும் நன்றிகள்...
கொங்கு நாட்டு கோயில் கலைமரபு
கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொல்லியல் கள ஆய்வுப் பயணம் மே��்கொண்டனர்
அப்போது உடுமலை சுற்றுவட்டப் பகுதியில் பாயும் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள கோயில் கலை மரபு, கல்வெட்டுகள் காட்டும் சமூக வரலாறு,
நீலகிரியில் மற்றுமொரு முன் வரலாற்றுக்கால பாறை ஓவிய ஓய்விடம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ளது வெள்ளரிக்கோம்பை கிராமம். இவ்வூர் தொன்மையான ஆலுகுறுமர், இருளர் பழங்குடி மக்கள் வாழும் மலைக்கிராமம் ���கும்.
ஊர் பரெ என்று பழங்குடி மக்கள் அழைக்கும் இவ்விடம் கடப்பத��்கு சவாலான இடமாகும். மலையின் பாறைச் சரிவில் சுமார் 450 மீட்டர் தூரம் ஏறிச்சென்று காணக்கூடிய அமைப்பில் உள்ளது. இந்த மலையின் உச்சியில் பல இடங்களில் ஊற்றுகள் உள்ளன.
கொடுமணல் இந்தியாவின் தொன்மையான தொழிற் நகரமாக அறியப்படும் தொல்லியல் களமாகும்
Kids Club பள்ளியின் செயலர் அவர்கள் மாணவர்களின் கற்றல் திறனில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அவ்விதம் தொல்லியல் சின்னங்களை மனதில் பதிய வைக்கும் வகையில் சில செயல்பாடுகளை களத்தில் மேற்கொண்டனர்.
Kids Club பள்ளியின் செயலர் திருமிகு.நிவேதிகா அவர்கள் மாணவர்களுக்கு புதுமையான கற்றல் அனுபவங்களை பகிர்வதில் பெரும் முனைப்பு கொண்டிருக்கிறார்.
தமது பள்ளியின் மாணவர்களுக்கு தொல்லியல்,மரபுச் சின்னங்கள் குறித்த அனுபவ அறிவு வேண்டும் நோக்கில் பெரியளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்
கல்வெட்டு கற்றல் பயிற்சி
மாணவர்களுக்கு கல்வெட்டுகள், மரபுச் சின்னங்கள் பற்றிய புரிதல் அதிகரிக்க வேண்டும் எனும் நோக்கில் களத்தில் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கல்வெட்டுகளை படியெடுக்கும் வழிமுறை, படிக்கும் முறைகள் குறித்து விளக்கம் தரப்பட்டது.
#KidsClub#coimbatore