பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் திரு அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @annamalai_k
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகிய���ருக்கும் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களுக்கும் துணைத் தலைவராகத் தேர்வாகியிருக்கும் திரு.ரவிசங்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் உயரிய இடமான சட்டமன்றத்தின் மரபுகளை முழுமையாகப் பின்பற்றி அதன் பாரம்பரியத்தையும், கண்ணியத்தையும் பாதுகாத்து, அவையை நடுநிலையோடு நடத்திடுவதை உறுதிசெய்ய வேண்டும் என பேரவைத் தலைவர் திரு ஜே.சி.���ி பிரபாகர் அவர்களையும், துணைத் தலைவர் திரு. ரவிசங்கர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று ஆழியார் அருகே உள்ள மலைப்பாதையில் தன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்��ிருப்பதாகவும் மேலும் பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன.
கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரக் கொலை – பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ?
தூத்துக���குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 14வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது விளாத்திக்குளம் அருகே அரங்கேறியிருக்கும் இச்சம்பவத்தை நினைத்துப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது.
அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் தமிழகத்தை பொதுமக்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னைத் தானே தமிழகத்த��ன் அப்பா என தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
எனவே, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் நேரத்தில், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறப்போகும் வெற்றியின் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களோடு, தீயசக்தி திமுகவின் அத்தியாயமும் முடிந்து போகும் என்பதை தெரிவித்துக் க��ள்கிறேன்.
@CMOTamilnadu
#AMMKpartyMeeting#TTVinவிழுப்புரம்
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்களின் தலைமையில்
ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
#AMMK
பெரிதினும் பெரிது கேட்கும் ஆர்வம் கொண்டிருப்பதும், வையத்தலைமை கொள்ளும் மானுட பண்பை பெற்றிருப்பதும் வாழ்க்கையின் பெரும் பயன்கள் என்றுரைத்து புரட்சிகரமான கவிதைகள் மூலம் மக்கள் மனதில் தமிழ் உணர்வோடு விடுதலை உணர்வையும் விதைத்த சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று.
பெண்களின் உரிமைக்கும் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து முத��்முதலாக குரல் எழுப்பியதோடு, அரசியல் களம், நாட்டின் விடுதலையில் தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்த முண்டாசு கவி பாரதியாரை இந்நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் போற்றி கொண்டாடுவோம்.
#HbdTTVDhinakaran அரசியல் வாசம் படாத பல லட்சம் இளைஞர்களை அரசியல்படுத்தியது தான் அண்ணன் தினகர���ின் ஆகப்பெரும் சாதனை... அரசியலே டிடிவிக்காகத்தான் என்பதே இங்கே பலரின் உள்ளக்கனல். #TTVDhinakaran #AMMK
#HbdTTVDhinakaran தமிழக அரசியல் களத்தில் ஆளுமைகள் இல்லாத நிச்சயமற்ற சூழலில், எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை விதைப்பதில் டிடிவி தினகரனுக்கு முக்கிய பங்குண்டு... #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தொண்டனின் மீதான இவரின் பிணைப்பும், இவரின் மீதான தொண்டனின் நம்பிக்கையும் இயற்கையாகவே அமைந்தது. இந்த இணைப்பு சங்கிலியை எந்த வல்லூறும் வலுவிழக்க செய்துவிட முடியாது. தன்னலமற்ற தொண்டர்கள், தன்னிகரில்லா தலைவர் ... #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran அரசியல் பாடத்தை அம்மாவிடம் பயின்றவர், ஆதலால் ஜெ.சாயல் இவரிடம் நிரம்ப உண்டு. இதுவே இவர் எதிர்கொள்ளும் பல எதிர்ப்புகளின் தொடக்கப்புள்ளி ... துரோகம் கருவருக்கப்படும், எங்கள் கொடி உயரே பறக்கும். #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran வல்லாதிக்க எதிர்ப்பில் இவர் காட்டும் வல்லமை, இங்கே எவரிடமும் இல்லாதது. தனித்து ��ின்றாலும் தனித்துவமானவர் ... எங்கள் தலைவர் #TTVDhinakaran #AMMK
#HbdTTVDhinakaran எந்த சக்கர வியூகத்திலும் சிக்கிக்கொள்ள மாட்டார், சிக்கவைக்க நினைத்தவர்கள் சிக்கியதா��த்தான் வரலாறு. எங்கள் பேராண்மை #TTVDhinakaran #AMMK
#HbdTTVDhinakaran தன்னை சுற்றி கட்டமைக்கப்பட்ட அனைத்து நெருக்கடிகளையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர், அரசியல் களத்தில் தனக்கான இடத்தை, தானே செதுக்கி கொண்டவர். வாழ்த்துக்கள் அண்ணா …#TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran மனஉறுதியும், தன்னம்பிக்கையும் தான் எங்களின் பேராயுதம். நாங்கள் வெல்லும் நாள் தள்ளிப்போகலாம் ஆனால் நிச்சயக்கப்பட்டது. வெல்வோம் நாங்கள் ...#TTVDhinakaran#AMMK