என் மனதிற்கு நெருக்கமான நம் கழக இளைஞர் அணிக்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்களது உத்தரவின் பேரில், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள், ஊராட்சிக் கிளைகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர், ஆர்.கே.நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் முன்கள வீரர்களாக பணியாற்றவிருக்கும் புதிய @dmk_youthwing நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@arivalayam@rdsekarmla@Joel_Dmk@JJEbenezer1
முன்னாள் அமைச்சர் மறைந்த அண்ணன் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் துணைவியாரும் - சேலம் கிழக்கு மாவட்ட @dmk_youthwing அமைப்பாளர் சகோதரர் மருத்துவர் பிரபு அவர்களின் அன்புத்தாயாருமான லீலாவதி அம்மையார் உடல்நலக்குறைவால் இன்று மறைவுற்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம்.
கோடம்பாக்கத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனையில், அவரது திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
தாயாரின் மறைவால் ஆற்றொணா துயரை எதிர்கொண்டிருக்கும் சகோதரர் பிரபுவுக்கு ஆறுதல் கூறினோம்.
அம்மையாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார் - நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@nchitrarasu@Joel_Dmk
சென்னை தெற்கு மாவட்ட @dmk_youthwing துணை அமைப்பாளர் சகோதரர் விநாயகமூர்த்தியின் தங்கையும் - சென்னை மாநகராட்சியின் 174-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான ம.ராதிகா - சீனிவாசன் ஆகியோரின் அன்பு மகள் நிவேதா - ரா.கலைவாணன் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருவான்மியூரில் இன்று பங்கேற்றோம்.
மணமக்கள் இருவரும் திராவிடமும் - சமூக நீதியும் போல, கலைஞரும் - கழகமும் போல, நம் முதலமைச்சர் அவர்களும் - வெற்றிகளும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Subramanian_ma@DrKanimozhiSomu@GanapathyK@PrabhakarRaja88
சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்ற, Federation of All India Real Estate Association-ன் தலைவர் திரு.A.ஹென்றி அவர்களின் அன்பு மகள் தங்கை பிரியா - விஷ்னுகாந்த் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டோம்.
மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று தமிழ் போல் வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@Subramanian_ma@GanapathyK@iparanthamen
இயக்கத்தின் இதயமாம் நம் @dmk_youthwing -க்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன், ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிளை, வார்டுகளிலும், பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
கடமை-கண்ணியம்-கட்டுப்பாடுடன் சீரிய முறையில் கழகப் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam@Subramanian_ma@Joel_Dmk@PrabhakarRaja88
இந்திய விடுதலைப் போரின் முன்னோடி - மாவீரன் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாள் இன்று!
வெள்ளையர்களை எதிர்த்து தென் தமிழ்நாட்டில் போர்முரசு கொட்டிய வரலாற்று நாயகன். மறைந்து நூற்றாண்டுகள் ஆனாலும், மக்கள் மத்தியில் இன்றும் வாழும் சரித்திரம் அவர்.
எந்தவித ஆதிக்கத்திற்கும் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உரக்கச் சொல்லி இறுதிவரை போர்க்களத்தில் உறுதியுடன் நின்ற அவரது வீரத்தைப் போற்றுவோம்.
#பூலித்தேவன் புகழ் ஓங்கட்டும்! #PooliThevan
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத்திட்டமான #நான்_முதல்வன் திட்டம் மற்றும் வெற்றி நிச்சயம் முன்னெடுப்பின் செயல்பாடுகளை இன்றைய தினம் ஆய்வு செய்தோம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகள் - எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினோம்!
தமிழ்நாட்டில் திறன் மிகு இளைஞர்களை உருவாக்கிடவும் - அவர்களின் வெற்றியை உறுதி செய்திடவும் என்றும் அயராது உழைப்போம்!
#PradeepYadavIAS @kranthi_tweet
திராவிட மாதத்தின் முதல் நாளான இன்று சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிளை, வார்டுகளிலும், பாகங்களிலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 1069 @dmk_youthwing அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று ஆற்றவேண்டிய பணிகளை எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
2026-சட்டமன்றத் தேர்தலில் இயக்கத்தின் முன்கள வீரர்களாக, கழக முதன்மை அணியின் பொறுப்பாளர்கள் என்ற பெருமையுடன் பணியாற்றி மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் ஆட்சி தொடர உறுதியேற்போம்!
வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!
@arivalayam@Subramanian_ma@Joel_Dmk@PrabhakarRaja88 #DMK4TN
விளையாட்டு வீரர் - வீராங்கனையரின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கிட, 3 % இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிவாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.
அந்த வகையில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதித்த வீரர் - வீராங்கனையர் 8 பேருக்கு வருவாய்த்துறை - இந்து சமய அறநிலையத்துறை - பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை இன்று வழங்கி வாழ்த்தினோம். அவர்களின் பணி சிறக்கட்டும்!
@KKSSRR_DMK@PKSekarbabu@SportsTN_@atulyamisraias #JMeghanthaReddyIAS
Happy to launch the Tamil Nadu Skill Registry under @naan_mudhalvan skill initiative. This one-stop platform connects students, job seekers, employers & industries.
With 13.7 lakh+ profiles from Engineering, Arts & Science, Diploma & ITI streams, industries can now access a skilled talent pool, post jobs & recruit faster.
Youth benefitted under our Naan Mudhalvan Scheme are encouraged to update their profiles regularly at https://t.co/7127SWJ2WS to stay visible & competitive.
Our #DravidianModel Government is committed to empowering TN’s youth with global opportunities & lasting growth.
#PradeepYadavIAS @kranthi_tweet@tnskills_
Delighted to welcome our Honourable President @rashtrapatibhvn Thirumigu Droupadi Murmu Avargal, on behalf of our Honourable Chief Minister Thiru @mkstalin Avargal and the people of Tamil Nadu, as she arrives in Chennai today to participate in multiple programmes across our state.
2026 தேர்தல் களத்திற்கு @dmk_youthwing தயாராகிவிட்டது. கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசு மீண்டும் அமைந்திட, அயராது உழைப்போம்!