காசிமேடு சிக்னல்ல மூணு @TVKVijayHQ பேனர் மழை காத்துல சாலையில விழுந்துச்சு😡
ரெட் சிக்னல் போடலனா பெரிய அசம்பாவாதம் நடந்திருக்கும்😏
மக்கள் உயிர் காக்கப்பட வேண்டிய சாலையில,
மக்களை மிரட்டும் பேனர்கள் எதற்கு🤦🏻♂️
@Arappor அத்திம்பேர் நல்லா தூங்குங்கோ !!
🚦 காசிமேடு
📍 Rk Nagar தொகுதி
#TVKVijayFails #TVKExpose #CMVijayFails
வசதி படைத்தவர்களுக்கே சொந்தம் என்று இருந்த மருத்துவக் கல்வியை,
ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் உரிமை சொத்தாக்கிய 7.5% எனும் மாபெரும் சமூக நீதிப் புரட்சி...
தலைமுறை தலைமுறையாக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்!
#நீட்டைவென்ற_EPS7Point5
அமைச்சர் பார்த்தீபன் மனைவி வந்ததுக்கு ரோட்டை மரித்து இத்தனை ராவுடி...மாண்புமிகு அண்ணியாம்..
@TamilanParthib1 ஏன்டா டேய் அதிகாரம் கிடைச்சி உனக்கு திமிரு என்ன வேன பண்ணலாம்னு இருக்கியாட உன்ன மாதிரி நாதாரிங்க பண்ணுற வேல தான் தளபதிக்கு TVK கேட்ட பெயர்
ஒரே வண்டில 4 பொண்ணுங்க போய் இருக்காங்க oppositela வந்த காலேஜ் பஸ் மோதி 4பேரும் இறந்துட்டாங்க 4பேரும் ஒரே family. வண்டில போகும் போது cross பண்ணும் போதும் நின்னு பொறுமையா பாத்து cross பண்ணனும். ஒரு நிமிஷத்துல 4உயிர் போயிடுச்சு😢
போட்டோ சூட்டுக்கு போன விஜய்கிட்ட வாழ்வாதார சிக்கல் குறித்து கோரிக்கை வச்சுருக்காங்க மக்கள்…
மண்டய மண்டய ஆட்டிட்டு, சேலையை கையில கொடுத்து “ஏதோ ஒன்னு பண்ணி சாப்டுக்கோங்க”னு சொல்லிட்டு கிளம்பிட்டாப்ளயாம்…
வெள்ளந்தியா அந்தம்மா போட்டு உடைச்சுட்டாங்க…🫡
ரூட் மாபியாவின் வேலையா? வெட்கமா இல்லையா குறைந்த காசிற்காக பாகிஸ்தான் நாட்டுக்காரன் காலில் விழுவீங்களாடா அவ்ளோ விளம்பர வெறி.மொக்க படத்தை எல்லாம் இப்படி தான் சொல்லி வித்துருக்கீங்க 😡
சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நபர்களை ஹிந்தியில் பேசி தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கு ஏன் வருகிறீர்கள் என வட மாநில மருத்துவர் ஒருவர் திட்டுவதாக புகார்..
சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி தன்னுடைய குழந்தையை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து ஹிந்தியில் பேசிய மருத்துவர் இங்கு ஏன் வருகிறீர்கள் உங்களுக்கெல்லாம் தனியார் மருத்துவமனையை செல்ல முடியாதா என கேட்டு திட்டி உள்ளார் ஹிந்தியில் புரிந்து கொண்ட சௌகத்அலி உடனடியாக தட்டி கேட்டதால் அந்த மருத்துவரை அழைத்துச் சென்று விட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட மாநில மருத்துவருக்கு இங்கு என்ன வேலை எனவும் கேள்வி எழுப்பினார் ..
சாலை விதிகளை கடைப்பிடியுங்கள் - ஒரு நொடி அலட்சியம், ஒரு உயிரை பறிக்கும்!
பைக்கில் பின்னால் வந்தவரை சந்திப்பில் பொறுமையாக இறக்கி விட்டுவிட்டு, மெயின் ரோட்டுக்கு வரும்போது இடது, வலது பார்க்காமல் திடீரென வண்டியை எடுத்ததால் வேகமாக வந்த கார் மோதி பயங்கர விபத்து.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம்...
CCTV கேமரா மட்டும் இல்லை என்றால், "வேகமாக வந்த கார் தான் இடித்தது" என்று முழு தவறையும் கார் ஓட்டுநர் மீது போட்டிருக்கும் ஒரு கூட்டம்.
வீடியோவில் தெளிவாக தெரிகிறது - கார் அதன் வழியில் சரியாகத்தான் வருகிறது. பைக்காரர் தான் சந்திப்பில் நிறுத்தாமல், பார்க்காமல் திடீரென ஏறுகிறார். இன்று இந்த கேமரா தான் உண்மையான நீதிபதி.
வண்டியை எடுக்கும் முன் ஒரு நிமிடம் நின்று பாருங்கள் - அது உங்களுக்காக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்காகவும்!
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 யானைகள், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் வந்தடைந்தன. இந்திய அதிகாரிகள் தண்ணீர் ஓட்டத்தை குறைத்து, அவற்றை பாதுகாப்பாக மீட்டனர். 🇮🇳🐘
இயற்கையின் பேரிடரிலும் உயிர் தப்பிய இந்த 5 யானைகளின் பயணம் உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டும்! ❤️
#Nepal #India #Elephants #WildlifeRescue
இந்த பூமியில், மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும். !
நேபாளத்தில் நடைபெற்ற “GLOF” , அதாவது பனிமலைகளினால் ஏற்பட்ட ஏரியலிருந்து ஏற்பட்ட வெடிப்பு் ஏற்படுத்திய பெருவள்ளம் அந்த நாட்டை புரட்டிபோட்டுள்ளது.
இது ஏன் நிகழ்ந்தது, இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இன்று @poovulagu இணையத்தில் வெளிவரும்
ஆனால் இந்த பெருவெளலளம் ஏற்படுத்திய துயரம், நிலைகுலைய செய்துவிட்டது. இதுவரை எவ்வளவு மனித உயிர்களை நாம் இழந்திருப்போம் என தெரியாது, 100 தமிழர்களை காணவில்லை என தரவுகள் சொல்கின்றன.
இதுவரை 19 பெரிய பாலங்கள் உடைந்து நொருங்கிவிட்டன, 40 கிமீ சாலைகள் காணாமல் போய்விட்டன, 13 புனல் மின்நிலையங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இவையனைத்தும் தவறான இடத்தில், தவறான வகையில் கட்டப்பட்ட கட்டுமானங்கள்.
மேற்சொன்னவற்றை கட்டியது எல்லாம் பொறியாளர்கள்தான், இமையமலைகள் காலத்தால் மிகவும் இளமையான மலைத் தொடர்கள், அதனால் அங்கே எந்த மாதிரியான கட்டுமானங்களை கட்டவேண்டும், எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்பதெல்லாம் நமக்கு தெரியும்.
ஆனால் அமெரிக்காவின் மலைகளை பாருங்கள், சீனாவின் மலைகளை பாருங்கள் என்று மற்ற இடங்களில் நடைபெற்ற கட்டுமானங்களை காப்பி அடிக்க எடுத்த முடிவின் விளைவே இந்த துயரம்.
அதோடு இப்போது உலகம் “மனிதர்களால் உந்தப்ட்ட யுகத்திற்குள்”(அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை) செல்ல ஆரம்பித்து விட்டது.
இந்த பூமியில் மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும்.
இந்த காலகட்டத்தில் “Climate Resilient Infrastructure” என்பது மட்டுமே நமக்கு தேவை!
Rest can wait!
உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
#Nepal #NepalGlof #Glof
இந்த வீடியோல பாக்குறதுதான் வயநாடு இருளத்துல போட்டிருக்க பிரம்மாண்டமான பூக்களம்.
கேரளத்திலேயே இதுதான் மிகப்பெரிய பூக்களம்னு சொல்றாங்க.
ஒரு ஸ்கூல் கிரவுண்டு மொத்தமும் பூவால நிறைஞ்சி இருக்கு. 25 ஆயிரம் சதுர அடிக்கு மஞ்சள், ஆரஞ்சு கலர்ல பூக்களை பரப்பி இருக்காங்க. மேல இருந்து ட்ரோன்ல பார்த்தா ஒரு பெரிய பூக்கூடை மாதிரி தெரியுது.
நடுவுல ஒரு பெரிய பூக்கோலம். அதுக்கு மேல பக்கம் மாவேலி படம், கீழ பக்கம் ஒரு யானை படம். அந்த யானை பேரு தான் மணியன்.
இது சாதாரண யானை இல்ல, அந்த ஊர்க்காரங்களோட ரொம்ப நெருக்கமா இருந்த காட்டு யானை. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காம இருந்துச்சு.
2019ல இன்னொரு யானையோட சண்டை போட்டு இறந்து போச்சு.
அப்போ ஊரே சேர்ந்து மௌன ஊர்வலம் போய் அஞ்சலி செலுத்தினாங்களாம். அதோட ஞாபகமா தான் இப்ப பூக்களத்துல மணியனை வரைஞ்சிருக்காங்க.
இது இருளத்து ஓணம்னு ஆகஸ்ட் 5ம் தேதி ஆரம்பிச்ச கொண்டாட்டம். ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து தான் இதை செஞ்சிருக்காங்க. 27ம் தேதி வரைக்கும் இருக்கும்.
இப்ப தினமும் நிறைய பேர் இதை பார்க்க வந்துட்டு இருக்காங்க.