சிறுநேரம் மட்டும் தோன்றி மறையும்
வானவில் கூட ஏழு வண்ணம் தான் ..!!
எண்ணிலடங்கா வண்ணம்
கொண்டதே இவ்வாழ்க்கை வானவில் ..!!
வெயில் மழை ஒருசேர
உருவாகும் வானவில் போல
நாம் இணைந்து ரசிப்போம்
இந்த வாழ்க்கை வானவில்லினை..!!
Credits:- @Mahatwtz
காதல்
பாடலொன்றினைக்
கடத்தும்
செவிப்பொறியாக
என்றும்
பிரிந்திடாது
நானிருப்பேன்..!!
நம் காதலெனும்
கீர்த்தனையைக்
காலமெல்லாம் கடத்திடவே..!!
Pic :- @ranima2020
தூசி
அறை முழுதும்
நிரம்பிருப்பினும்
எங்கோ
படர்ந்திருக்கும்
தூசிகளாய்..!!
உலகினிலே
நானிருப்பினும்
தூசிகளாய்
என் இதயம்
துடித்துக்
கொ���்டிருக்கும்
என்றாவது
நீ அதனை தொடுவாயென..!!
Pic :- @ranima2020