மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கிராம சபை சிறக்கட்டும்!கிராமங்கள் செழிக்கட்டும்!!
#Gramasabai
அரசியல் அறிவற்ற இழிபிறப்பே!
எங்கள் தலைவர் பெயரை எப்போதும் மறைத்ததில்லை. 2018 ஆம் ஆண்டே மெர்சல் திரைப்பட சர்ச்சையின் போதே ஆம் நான் ஜோசப் விஜய் தான் என்று முழங்கினார். சைமன் என்ற பெயரை மாற்றி ச்சீமான் என்று வைத்தது யார்?
@TVKPartyHQ@TVKWarriorsHQ@VTLTeam@Jagadishbliss
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களின் தலைமையில் தமிழகம் ஒரு புதிய பொற்காலத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைத்துள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் புரட்சிகரமான மாற்றங்கள் அனைத்தும் என்றும் நீடித்திருக்கக் கூடிய புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையும், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய உங்களின் சிந்தனைகள் என்றும் போற்றத்தக்கவை.
நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்து, நம் மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் உன்னதப் பணியில் உங்களோடு இணைந்து பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
வாழ்க தளபதி! வாழ்க வெற்றித் தலைவர்!
நம் தளபதி… நம் தலைவர்… தமிழக மக்களின் நம்பிக்கை! தமிழ்நாட்டின் எதிர்காலம்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி!
#HBDCMJosephVijay
@TVKVijayHQ
சொன்னதைச் செய்தார்!
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் சொன்னதைச் செய்துகாட்டுபவர்!
ஒரே கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் நிலையை மாற்றி, மக்களுக்கான ஜனநாயக ஆட்சியில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகவே, தங்களை நாடி வரும் மற்றும் தங்களுடன் கை கைகோர்க்க நினைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த மரியாதையையும், அதிகாரத்தில் சம பங்கையும் உறுதி அளித்துள்ளார். அதிகாரம் ஒரு இடத்தில் குவியாமல், தரைமட்ட தொண்டன் வரை, கூட்டணிக் கட்சிகள் வரை பரவலாக்கப்பட வேண்டும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் தலைவரின் பாணி என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம். மாநாட்டு மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை, தனது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் அவர் பிரதிபலித்து வருகிறார்.
"ஆட்சியில் பங்கு" என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், "சொன்னதைச் செய்வார், செய்வதையே சொல்வார்" என்பதற்கு இணங்க, தலைவர் விஜய் அவர்கள் விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதையை இப்போது செயலாக மாற்றி வருகிறார். இது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும்.
பதில் உரை வாசிக்கும் வரை பொறுமையா இருந்து இருந்தால் மாண்புமிகு முதல்வர் விஜய் பதில் அளித்து இருப்பார். நீங்கள் இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் retweet செய்ய பகலில் ஓய்வு எடுக்க சென்றுவிட்டீர்கள்.
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி
அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்குவதற்காக தளபதியின் ஆட்சிக்கும் பெயருக்கும் கலங்கம் ஏற்படும் விதமாக நடந்து கொண்டதை நமது கழக நிர்வாகிகள் கண்டித்ததை தொடர்ந்து ஊழியர் மன்னிப்பு கோரினார்.
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைத்து மக்கள் மகிழ்வுடன் வாழ்வதே நமது ஆட்சியின் இலக்கு.
தோழர்கள் இதற்கு கலங்கம் ஏற்படும் விதமாக நடந்து கொள்ளும் ஊழியர்களை கண்டிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.@CMOTamilnadu
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்